TA/Prabhupada 0248 - கிருஷ்ணருக்கு 16.108 மனைவிகள். ஒவ்வொரு முறையும் அவர் மனைவியை அடையப் போராட வேண்டியிருந்



Lecture on BG 2.6 -- London, August 6, 1973

பிரத்யும்னன்: "எது நல்லது என்றும் நமக்குத் தெரியவில்லை - அவர்களை வெல்வதா, அல்லது அவர்களால் வெல்லப்படுவதா. திருதிராஷ்டிரரின் மகன்கள் - அவர்களை வதம் செய்தால், அதற்கு பிறகு நாம் வாழ ஆசை பட ஒன்றுமே இல்லை - அவர்கள் இப்போது இந்த போர்க்களத்தில் நமக்கு எதிராக நின்று கொண்டிருக்கின்றனர்." பிரபுபாதர்: ஆக ஒன்றுவிட்ட சகோதரர்களான இந்த இரு எதிர்தரப்பினர்... மகாராஜா பாண்டுவிற்கு ஐந்து மகன்கள் இருந்தனர். மேலும் திருதிராஷ்டிரருக்கு நூறு மகன்கள் இருந்தனர். ஆக அது ஒரு குடும்பம், ஒரே குடும்பம், மேலும் அவர்களுக்கிடையே ஒரு உடன்பாடு இருந்தது, அதாவது, குடும்பத்தைச் சேராத புறத்தியார் யாராவது தாக்க வந்தால், அவர்கள் 105 சகோதரர்களும், ஒன்று சேர்ந்து போராட வேண்டும். ஆனால் அவர்களுக்குள்ளேயே ஒரு போர் ஏற்பட்டபோது - ஒரு புறத்தில், நூறு சகோதரர்கள்; மறு புறத்தில், ஐந்து சகோதரர்கள் என கூடி நின்றார்கள். ஏனென்றால் ஒரு க்ஷத்திரியக் குடும்பத்தில், அவர்கள் தொடர்ந்து போரிட வேண்டிய நிலைமை, என்பது தெரிந்த விஷயம் தான். அவர்கள் திருமணத்திலும் போராட்டம் இருக்கும். போராட்டம் இல்லாமல் க்ஷத்திரியக் குடும்பத்தில் எந்த திருமணமும் நடக்காது. கிருஷ்ணருக்கு 16.108 மனைவிகள். மேலும் கிட்டத்தட்ட ஒவ்வொரு முறையும் அவர் தன் மனைவியை அடைய போராட வேண்டியிருந்தது. சண்டை என்றால் க்ஷத்திரியர்களுக்கு ஒரு விளையாட்டு, சவால். ஆக அவர், இப்படிப்பட்ட ஒரு சண்டையில் ஈடுபடுவதா வேண்டாமா என்று குழம்புகிறார். வங்காளத்தில் ஒரு பழமொழி இருக்கிறது, அதாவது 'காபோ கி காபோ நா யதி காவோ து பௌஷே.' "சாப்பிடலாமா வேண்டாமா என்ற குழப்பம் உங்களுக்கு இருந்தால், சாப்பிடாமல் இருந்துவிடுவதே நல்லது." சில நேரங்களில் நாம் இந்த மாதிரியான நிலைக்கு வந்துவிடுவோம், "எனக்கு அவ்வளவு பசிக்கவில்லை, நான் சாப்பிடவா வேண்டாமா?". அந்த சமயத்தில் சாப்பிடாமல் இருப்பதே சிறந்தது. ஆனால் நீங்கள் சாப்பிட வேண்டும் என்றால், டிசம்பர் மாதத்தில் சப்பிடலாம், பௌஷே. ஏன்? ஏனென்றால்... வங்காளம் வெப்பமண்டலத்தில் உள்ளது, ஆனால் குளிர்காலத்தில், “நீங்கள் கொஞ்சம் அதிகமாக சாப்பிடுவதால் உடலை பாதிக்காது, ஏனெனில் அது செரித்துவிடும்,” என்று சொல்வார்கள். இரவு அதிக நேரம் நீடிக்கும். குளிர் காலத்தில் செரிமான சக்தியும் நன்றாக இருக்கும். ஆக “செய்வதா வேண்டாமா?” என்று நீங்கள் குழம்பும் போது, ஜாபோ கி ஜாபோ நா யதி ஜாவோ து ஷௌசே: அதாவது, " 'நான் போகவா வேண்டாமா?' என்று நீங்கள் தயங்கினால், போகாமல் இருப்பதே சிறந்தது. ஆனால் இயற்கை உபாதைகள் (மலம் கழித்தல்) ஏற்பட்டால், நீங்கள் போகத் தான் வேண்டும்." ஜாபோ கி ஜாபோ நா யதி ஜாவோ து ஷௌசே, காபோ கி காபோ நா யதி காவோ து பௌஷே. இதுவேல்லாம் பொது அறிவு தான். அதுபோலவே அர்ஜுனரும், "நான் போரிடவா வேண்டமா?" என்று இப்போது குழம்பிப்போய் இருக்கிறார், இது எங்கும் நடக்கும் விஷயம் தான். நவீன அரசியல்வாதிகளுக்கு இடையே போர் நிலை ஏற்பட்டால், அவர்கள் தீர யோசிப்பார்கள்... கடந்த இரண்டாம் உலகப்போரில், ஹிட்லர் போருக்கு ஏற்பாடுகள் செய்து வந்தான்... ஹிட்லர் பதிலடி கொடுக்கப் போகிறான் என்று அனைவருக்கும் தெரிந்திருந்தது, ஏனென்றால் முதல் உலகப்போரில் அவன் தோற்கடிக்கப்பட்டான். ஆக ஹிட்லர் மீண்டும் ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தான். என் ஞான சகோதரர் ஒருவர், ஜெர்மானியர், அவர் 1933-ல் இந்தியா வந்தார். அந்த நேரத்தில் அவர் "போர் நிகழப்போவது உறுதி. ஹிட்லர் பலத்த ஏற்பாடுகள் செய்து வருகிறான். போர் நிகழ்ந்தே தீரும்," என்று தெரிவித்தார். அப்போது உங்கள் நாட்டுப் பிரதமராக திரு. சேம்பர்லின் இருந்தார் என்று நினைக்கிறேன். அவர் போரை நிறுத்துவதற்காக ஹிட்லரைப் பார்க்கச் சென்றார். ஆனால் அவன் மறுத்துவிட்டான். ஆக அதுபோலவே, இந்தப் போரிலும், கடைசி நிலைவரை, கிருஷ்ணர் போரைத் தவிர்க்க முயற்சி செய்தார். அவர் துரியோதனனிடம், “அவர்கள் க்ஷத்திரியர்கள், உன் ஒன்று விட்ட சகோதரர்கள். நீ அவர்களின் ராஜ்யத்தை அநியாயமாக பறித்துவிட்டாய். எப்படி எப்படியோ அதை கைப்பற்றி விட்டாய். பரவாயில்லை. ஆனால் அவர்கள் க்ஷத்திரியர்கள். அவர்கள் உயிர் நிர்வாகம் செய்வதற்கு எதோ ஒரு வழி வேண்டும். எனவே, அந்த ஐந்து சகோதரர்களுக்கு, ஐந்து கிராமங்களைக் கொடுத்துவிடு. உலகம் முழுவதையும் ஆளும் இந்தப் பேரரசில், அவர்களுக்கு நீ வெறும் ஐந்து கிராமங்களையாவது கொடுத்துவிடு." ஆனால் அவன்... "இல்லை, நான் போர் இல்லாமல் ஒரு அங்குல நிலத்தைக் கூட கொடுக்கப் போவதில்லை." ஆகையால், இப்படிப்பட்ட சூழ்நிலையில், போர் நடந்தே தீரும்.