TA/Prabhupada 0255 - பகவானின் அரசாங்கத்தில், பல இயக்குநர்கள் இருக்க வேண்டும், அவர்கள் தேவர்கள் என்று ஆழைக்



Lecture on BG 2.8 -- London, August 8, 1973

ஆக இப்போது கிருஷ்ணர் கூறியிருக்கலாம்: "அது பரவாயில்லை. தற்போது... நீ தொடர்ந்து போராடு. உனக்கு இராஜ்ஜியம் கிடைத்தால் நீ சந்தோஷமாக இருப்பாய். என்னை குருவெல்லாம் ஆக்க ஒன்றும் தேவை இல்லை. அப்படியுமே..." சாதாரண மனிதர்களைப் போல் தான். அவர்கள் நினைக்கிறார்கள்: "நான் இவ்வளவு சம்பாதிக்கிறேன். குருவிடம் சென்று என்ன பயன்? என் வழியிலேயே என்னால் அனைத்தையும் புரிந்து கொள்ள முடியும்". இன்னொரு அயோக்கியன் நினைப்பது என்னவென்றால், "ஆம், யத மத தத பத. யார் கருத்து என்னவோ, எல்லாம் சரி தான். நீங்கள் உங்கள் சொந்த கருத்தை உருவாக்கிக் கொள்ளலாம்." இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. கடவுளைப் புரிந்து கொள்ள உங்கள் சொந்த கருத்தை நீங்கள் உருவாக்கிக் கொள்ளலாம். ஆக இந்த எல்லா முட்டாள்களும் அயோக்கியர்களும், தனது சொந்த கருத்தை உருவாக்குகிறார்கள். இல்லை, அது சாத்தியம் இல்லை. எனவே அர்ஜுனர் சொல்கிறார்: அவாப்ய பூமாவ் அசபத்னம் ருத்தம் (பகவத் கீதை 2.8). சபத்னி - இது முக்கியமான வார்த்தை. சபத்னி என்றால் "சக்காளத்தி, இளையாள்." ஒருவனுக்கு இரண்டு, மூன்று மனைவிகள் இருந்தால்... ஏன் இரண்டு, மூன்று? நம் பகவானுக்கு 16,100 மனைவிகள் இருந்தார்கள். ஆக இது தான் கடவுள். அசபத்ன்யா, ஆனால் போட்டி எதுவும் கிடையாது. 'கிருஷ்ணர்' என்ற நமது புத்தகத்தில், திரௌபதியிடம் பேசும்பொழுது அனைத்து ராணிகளும், ஒவ்வொருவரு மனைவியும் கிருஷ்ணரின் சேவகி ஆவதில் எவ்வளவு ஆர்வத்துடன் இருந்தார்கள் என்பதை நீங்கள் காணலாம். யாருக்கும் போட்டியோ பொறாமையோ இல்லை. இந்த பௌதிக உலகில், ஒரு மனிதனுக்கு ஒன்றுக்கும் மேலாக மனைவிகள் இருந்தால், போட்டி, பொறாமை எல்லாம் இருக்கும். இந்த உதாரணம் ஸ்ரீமத் பாகவதத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. நமக்கு உணர்வுகள் இருப்பதைப் போலவே, ஒருவனுக்கு வேறு மனைவி இருந்தால், ஒரு மனைவி அவனை இழுத்துச்செல்வாள் : "நீங்கள், என் அறைக்கு வாருங்கள்," மற்றும் மற்றொரு மனைவி அவனை தன் பக்கம் இழுத்து: "நீங்கள் என் அறைக்கு வாருங்கள்," என்பாள். ஆக அவன் குழம்பிப்ப்போய் நிர்ப்பான். அதுபோலவே நமக்கும் புலன்கள் என்னும் மனைவிகள் இருக்கின்றன. கண்கள் ஒரு பக்கம்: "தயவு செய்து திரைப்படத்திற்கு வா," என்று இழுக்கின்றன. நாக்கு ஒரு பக்கம்: "தயவு செய்து ஹோட்டலுக்கு வா,"என்று இழுக்கிறது. கைகள் ஒரு திசையில் நம்மை இழுத்துச் செல்கின்றன. கால்கள் ஒரு திசையில் இழுத்துச் செல்கின்றன. அதுதான் நம் நிலைமை. வெவ்வேறு மனைவிகளால் வெவ்வேறு அறைகளுக்கு இழுத்துச் செல்லப்படும் அந்த மனிதனைப் போலத் தான். இது தான் நம் நிலைமை. ஆக ஏன் இந்த நிலைமை? ஏனென்றால் இந்த மனைவிகளுக்குள் போட்டியும் பொறாமையும் இருக்கிறது . இங்கே: அசபத்ன்யாம் ருத்தம். ஒரு சொத்தை உரிமை கொண்டாட பல அரசர்கள் இருந்தால், அதில் பிரச்சனை தான். அர்ஜூனர் கூறுகிறார்: அவாப்ய பூமாவ் அசபத்ன்யாம் ருத்தம் (பகவத் கீதை 2.8) . "வேறு யாரும் உரிமை கேட்காதபடி செல்வத்தை அடைவது. நான் ஒருவன் தான் அதன் சொந்தக்காரன். அப்படிப்பட்ட செல்வம் எனக்குக் கிடைத்தாலும், இராஜ்ஜியம், அப்படிப்பட்ட பேரரசு, சுராணாம் அபி சாதிபத்யம், இந்த உலகித்தின் பேரரசு மட்டுமல்ல, மேல் லோகங்களில் உள்ள இராஜ்ஜியங்களே கிடைத்தாலும்…" இவர்கள் சந்திர கிரகத்திற்குச் செல்ல முயல்கிறார்கள். அதுவும் ஒரு இராஜ்ஜியம் தான். அங்கும் ஒரு இராஜ்ஜியம் இருக்கிறது. அந்த இராஜ்ஜியம் உயரிய ஜீவன்களுக்குச் சொந்தமானது, அதாவது தேவர்கள். அவர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள். இந்திரனைப் போல் தான். இந்திரர், மழையைக் கட்டுப்படுத்தும் மிகவும் சக்தி வாய்ந்த தேவர். அவரிடம் வஜ்ராயுதம் இருக்கிறது. ஆனால் மக்கள் இதை நம்புவதில்லை, ஆனால் நாம் நம்புகிறோம். வேத இலக்கியங்களில் விவரிக்கப்பட்டுள்ளது... அவர்கள் நம்புவதில்லை. நீங்கள் நம்பியே ஆகவேண்டும். இது தான் உண்மை. எங்கிருந்து இந்த வஜ்ராயுதம் வந்தது? மழைக்கு ஏற்பாடு செய்பவர் யார்? அதை நிர்வகிப்பவர் ஒருவர் இருந்தாகவேண்டும். அரசு அலுவலகங்களில் எப்படி பல நிர்வாகத் துறைகள் இருக்கின்றதோ அப்படித்தான். அதுபோலவே இறைவனின் அரசாங்கத்திலும், பல நிர்வாகிகள் இருக்க வேண்டும், பற்பல அதிகாரிகள். அவர்களை தேவர்கள் என்று அழைக்கிறோம். தேவர்ஷி-பூதாப்த-ந்ருணாம்-பித்ருணாம் (ஸ்ரீமத் பாகவதம் 11.5.41). தேவதாஹா, தேவர்கள், அவர்களும் கிருஷ்ணரின் உத்தரவின்படி நமக்கு பல விஷயங்களை வழங்குகின்றனர். இந்திரனைப் போல் தான். இந்திரர் நமக்கு வழங்குகிறார். எனவே இந்திர யாகம். வெவ்வேறு தேவர்களை திருப்திப்படுத்த வெவ்வேறு யாக யக்ஞங்கள் இருக்கின்றன. இந்த இந்திர யாகத்தைக் கிருஷ்ணர் நிறுத்துவிட்டார், உங்களுக்குத் தெரியுமா, கோவர்த்தன கிரியின் சம்பவம். நந்த மகாராஜர் இந்திர யாகத்திற்கு ஏற்பாடு செய்துகொண்டிருந்த போது, கிருஷ்ணர் இவ்வாறு கூறினார்: "என் அன்பு தந்தையே, இந்திர யாகத்திற்கு எந்த அவசியமும் இல்லை." அதாவது, கிருஷ்ண பக்தி உணர்வு கொண்ட எவருக்கும் எந்த யாக யக்ஞ்யமும் தேவை இல்லை. குறிப்பாக இந்த யுகத்தில், கலி-யுகத்தில், பல்வேறு வகையான யாகங்களைச் செய்வது மிகவும் கடினமான காரியம். த்ரேதா-யுகத்தில் அது சாத்தியமாக இருந்தது. கருதே யத் த்யாயதோ விஷ்ணும் த்ரேதாயாம் யஜதோ மகைஹி (ஸ்ரீமத் பாகவதம் 12.3.52). மகைஹி என்றால் யக்ஞம், யாக யக்ஞங்களை செய்வது. யஞ்யார்த்தே கர்மணோ அன்யத்ர லோகோ (அ)யம் கர்ம-பந்தனஹ (பகவத் கீதை 3.9). ஆக இந்த சூத்திரங்களை, இந்த வழிமுறைகளை யாரும் பின்பற்றுவதில்லை. அது இந்த காலத்தில் சாத்தியம் இல்லை. எனவே சாஸ்திரத்தின் உத்தரவு என்னவென்றால்: யக்ஞைஹி சங்கீர்த்தனைர் ப்ராயைர் யஜந்தி ஹி சுமேதசஹ. நல்ல அறிவாற்றல் உள்ளவர்கள், பல விஷயங்களைப் பற்றி கவலைப்படுவதற்கு பதிலாக, சங்கீர்த்தன-யக்ஞத்தை செய்வார்கள். இவை சாஸ்திரத்தில் உள்ள வாக்கியங்கள்.