TA/Prabhupada 0256 - இந்தக் கலியுகத்தில், கிருஷ்ணர் தன் பெயரான ஹரே கிருஷ்ண உருவில் வந்திருக்கிறார்



Lecture on BG 2.8 -- London, August 8, 1973

கிருஷ்ண-வர்ணம் த்விஷாக்ருஷ்ணம் சந்கோபாங்காஸ்த்ர-பார்ஷதம் யக்ஞைஹி சங்கீர்த்தனைஹி ப்ராயைர் யஜந்தி ஹி சுமேதசஹ (ஸ்ரீமத் பாகவதம் 11.5.32) இங்கு, இந்த அறையில், குறிப்பாக, கிருஷ்ண-வர்ணம் த்விஷாக்ருஷ்ணம், இங்கே சைதன்ய மகாபிரபு இருக்கிறார். அவர் சாக்ஷாத் கிருஷ்ணரே தான், ஆனால் அவரது நிறம் அக்ருஷ்ண, அதாவது கருநிறம் அல்ல. கிருஷ்ண-வர்ணம் த்விஷா... த்விஷா என்றால் மேனி வண்ணம். அக்ருஷ்ண. மஞ்சள் சாயல் கொண்ட நிறம். சந்கோபாங்காஸ்த்ர-பார்ஷதம். மேலும் அவர் தனது சங்கத்தினரோடு சேர்ந்து இருக்கிறார், நித்தியானந்த பிரபு, அத்வைத பிரபு, ஸ்ரீவாசாதி கௌர-பக்த-வ்ருந்த. இது தான் இந்த யுகத்தில் வழிபட வேண்டிய அர்ச்ச விக்கிரகம். கிருஷ்ண-வர்ணம் த்விஷாக்ருஷ்ண. ஆக வழிபாடு முறை என்ன? யக்ஞைஹி சங்கீர்த்தனைர் ப்ராயைர் யஜந்தி ஹி சுமேதசஹ. இந்த சங்கீர்தன-யஞத்தை நாம் சைதன்ய மகாபிரபு, நித்தியானந்தர் மற்றும் மற்றவர்கள் முன் புரிகிறோமே, இது தான் இக்காலத்திற்கு ஏற்ற சரியான யாகத்தின் செயல்முறை ஆகும். இல்லையெனில், வேறு எந்த... எனவே தான் இது வெற்றியடைந்து வருகிறது. இது மட்டுமே பரிந்துரைக்கப்பட்ட யக்ஞம் ஆகும். மற்ற யக்ஞங்கள், ராஜசூய யக்ஞம், இந்த யக்ஞம், அந்த யக்ஞம், அதுவெல்லாம்... பல்வகையான யக்ஞங்கள் இருக்கின்றன... சில சமயம் இந்தியாவில், அவர்கள் யக்ஞம் என்ற பெயரில் எதையோ செய்வார்கள். அதில் பணம் சம்பாதிக்கிறார்கள். அவ்வளவுதான். அது பலனளிக்காது, ஏனென்றால் அவர்கள் யக்ஞம் செய்வதற்கு தகுதியுள்ள பிராம்மணர்கள் அல்ல. யக்ஞ அனுஷ்டானங்களை செய்ய தகுதியுள்ள பிராம்மணர்கள் யாருமே தற்போது இல்லை. யக்ஞ அதிகாரம் பெற்ற பிராம்மணர்கள் தன் வேத மந்திர உச்சாடனத்தின் பிழையின்மையை சோதித்துப் பார்ப்பார்கள். சோதனை என்னவென்றால், ஒரு விலங்கை தீயில் அர்ப்பணித்து, அதற்கு மீண்டும் ஒரு புதிய, இளம் உடலை வழங்கி, திரும்பி வெளியே வர வைப்பார்கள். அப்பொழுது அந்த அந்த யக்ஞம் சரியாக செய்யப்பட்டதா என்று தீர்மானிக்கப்படும். யக்ஞ பிராம்மணர்கள், சரியாக வேத மந்திரத்தை உச்சரிக்கிறார்களா இல்லையா. இது தான் சோதனை. ஆனால் இந்த காலத்தில் அப்படிப்பட்ட பிராம்மணர்கள் எங்கே? எனவே எந்த யக்ஞமும் பரிந்துரைக்கப்படுவதில்லை. கலௌ பஞ்ச விவர்ஜயேத் அஷ்வமேதம், அவலம்பம் சன்யாசம் பால-பாயித்ரிகம், தேவரேண சுத-பித்ரு கலௌ பஞ்ச விவர்ஜயேத் (சைதன்ய சரிதாம்ருதம் 17.164). எனவே இந்த யுகத்தில் எந்த யக்ஞமும் கிடையாது. யக்ஞ பிராம்மணர்களே இல்லை. இது தான் ஒரே யக்ஞம் : ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜபித்து பேரின்பத்தில் ஆடுங்கள். இது தான் ஒரே யக்ஞம். ஆக ராஜ்யம் சுராணாம் அபி சாதிபத்யம் (பகவத் கீதை 2.8). முன்னர் தேவர்களின் இராஜ்ஜியத்தை வென்ற பல அரக்கர்கள் இருந்தார்கள். ராஜ்யம் சுராணாம் அபி சாதிபத்யம். ஹிரண்ய கஷிபுவைப் போல் தான். அவன் இந்திரனின் இராஜ்ஜியத்தின் மீது கூடத் தன் அதிகாரத்தைச் செலுத்தினான். இந்த்ராரி-வ்யாகுலம் லோகம் ம்ருதயந்தி யுகே யுகே (ஸ்ரீமத் பாகவதம் 1.3.28). இந்த்ராரி. இந்த்ராரி என்றால் இந்திரனின் எதிரி என்று அர்த்தம். இந்திரன் சுவர்க்க லோகத்தின் மன்னன் மற்றும் எதிரிகள் என்றால் ராட்சசர்கள். தேவர்களும், அவர்களது எதிரிகளான ராட்சசர்களும். நமக்கு எப்படி பல எதிரிகள் இருக்கிறார்களோ அப்படித்ததான். நாம் ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜபிப்பதால், பல விமர்சகர்களும், பற்பல எதிரிகளும் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பிடிப்பதில்லை. ஆக இது எப்போதும் உள்ளது தான். இப்போது எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. முன்பு, சிலர் மட்டுமே இருந்தனர். இப்போது பலர் இருக்கிறார்கள். ஆகவெ இந்த்ராரி-வ்யாகுலம் லோகம். இந்த அரக்கர்களின் எண்ணிக்கை, அரக்க குணம் படைத்த மக்கள்தொகை எப்போது அதிகரிக்கிறதோ, அப்போது வ்யாகுலம் லோகம். மக்கள் சஞ்சலம் அடைகின்றனர். இந்த்ராரி-வ்யாகுலம் லோகம் ம்ருதயந்தி யுகே யுகே. எனவே அப்போது, அந்த நேரத்தில், கிருஷ்ணர் வருவார். ஏதே சாம்ச-கலாஹா பும்சாஹா கிருஷ்ணஸ் து பகவான் ஸ்வயம் (ஸ்ரீமத் பாகவதம் 1.3.28). கிருஷ்ணருக்கு, அதாவது பகவானுக்கு பற்பல பெயர்கள் உள்ளன. ஆனால் அனைத்து நாமங்களையும் குறிப்பிட்டப் பிறகு, பாகவதம் கூறுவது என்னவென்றால்: "இதுவரை குறிப்பிடப்பட்ட அனைத்து நாமங்களும், கிருஷ்ணரின் அபூரணமான வர்ணனைகள். ஆனால் அவருக்கு, கிருஷ்ண என்ற திருநாமம் இருக்கிறது. அவர் தான் உண்மை, பரமபுருஷரான முழுமுதற்..." கிருஷ்ணஸ் து பகவான் ஸ்வயம். மற்றும் அவர் அவதரிக்கின்றார்… இந்த்ராரி-வ்யாகுலம் லோகே. மக்கள் அரக்கர்களின் தாக்குதலால் பொருக்க முடியாத அளவுக்கு சங்கடப்படும் போது, அவர் வருகிறார். மேலும் அவரே உறுதி செய்கிறார். சாஸ்திரம் கூறுவது இதுதான். ஒரு சாஸ்திரம், அவர் இந்த சூழ்நிலையில் வருகிறார் என்கிறது. மேலும் கிருஷ்ணர் கூறுகிறார்: "ஆம், யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத... ததாத்மானம் ஸ்ருஜாமி அஹம் : (பகவத் கீதை 4.7) அந்த நேரத்தில், நான் வருகிறேன்."ஆக இந்த கலியுகத்தில், மக்கள் மிகவும் சஞ்சலமுற்று இருக்கிறார்கள். எனவே, கிருஷ்ணர், ஹரே கிருஷ்ண என்ற தன் திருநாமத்தின் வடிவத்தில் வந்திருக்கிறார். கிருஷ்ணர் தானே வரவில்லை, ஆனால் அவரது திருநாமத்தின் ரூபத்தில் வந்துள்ளார். கிருஷ்ணர் பரிபூரணமானவர் என்பதால், அவருக்கும் அவரது திருநாமத்திற்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. அபின்னத்வான் நாம-நாமினோஹோ (சைதன்ய சரிதாம்ருதம் மத்ய லீலை 17.133). நாம-சிந்தாமணி கிருஷ்ண-சைதன்ய-ரச-விக்ரஹஹ பூர்ணஹ ஷுத்தோ நித்ய-முக்தஹ. அவரது திருநாமம் பூரணமானது. கிருஷ்ணர் எவ்வாறு பரிபூரணமானவரோ, அதுபோலவே கிருஷ்ணரின் திருநாமமும் பரிபூரணமானது. ஷுத்த. இது பௌதிக விஷயம் அல்ல. பூர்ணஹ ஷுத்தஹ நித்யஹ. நித்தியமானது. எப்படி கிருஷ்ணர் நித்தியமானவரோ, அவரது திருநாமமும் நித்தியமானது. பூர்ணஹ ஷுத்தஹ நித்ய-முக்தஹ. ஹரே கிருஷ்ண மந்திர உச்சாடனத்தில் எந்த ஒரு பௌதிக சிந்தனையும் கிடையாது. அபின்னத்வம் நாம-நாமினோஹோ. நாம, திருநாமமும் பகவானும் அபின்னமானவை, எந்த வித்தியாசமும் கிடையாது. ஆக நாம் சந்தோஷமாக இருக்க முடியாது... ராஜ்யம் சுராணாம் அபி சாதிபத்யம் (பகவத் கீதை 2.8). நமக்குத் தேவர்களின் இராஜ்ஜியமே கிடைத்தாலும், 'அசபத்ய', எந்த எதிர்ப்பும் இல்லாமல், அப்படி இருந்தாலும், நமக்குள் பௌதிக சிந்தனைகள் இருக்கும் வரை நம்மால் சந்தோஷமாக இருக்க முடியாது. அது சாத்தியமில்லை. அதுதான் இந்த பதத்தில் விளக்கப்பட்டுள்ளது. மிக்க நன்றி. அவ்வளவுதான்.