TA/Prabhupada 0262 - பக்தி என்றால் ஹிருஷிகேஷவிற்கு சேவை செய்வது, புலன்களின் எஜமானர்



Lecture -- Seattle, September 27, 1968

தமால கிருஷ்ணன்: பிரபுபாதரே, ஒருவேளை நமக்கு சேவை செய்ய வேண்டும் என்ற விஷயம் தெரிந்திருந்து, சேவை செய்ய விருப்பமும் இருந்து, ஆனால் நம் சேவை மிகவும் மோசமாக இருந்தால், அப்போது என்ன செய்வது? பிரபுபாதர் : ஆம். ஒருபோதும் நான் சிறப்பாக சேவை செய்தேன் என்று நினைக்காதீர்கள். அதுதான் உன்னை உன்னத நிலையில் வைக்கும். நம் சேவை முழுமை அடையவில்லை என்று தான் எப்பொழுதும் நினைக்க வேண்டும். ஆம். அது மிகவும் நல்ல சிந்தனை. சைதன்ய மகாபிரபு, நமக்கு கற்றுத் தந்தது போல் தான்... அவர் கூறினார், "என் அன்பு நண்பர்களே, கிருஷ்ணருக்காக என்னிடம் ஒரு துணுக்கு கூட பக்தி இல்லை என்பதை நம்புங்கள். நான் கண்ணீர் விடுவது எதற்காக என்று நீங்கள் கேட்டால், நான் ஒரு பெரிய பக்தன என்று வெறும் உங்கள்முன் நாடகம் போடுவதற்காகத் தான், என்பது தான் அதற்கு பதில். உண்மையில் என்னிடம் கிருஷ்ணருக்காக ஒரு துணுக்களவு கூட அன்பு கிடையாது. இந்த அழுகை வெறும் என்னுடைய நாடகம் தான்." "நீங்கள் ஏன் அப்படி கூறுகிறீர்கள்?" " இப்பொழுது விஷயம் என்னவென்றால், நான் கிருஷ்ணரை காண முடியாத பட்சத்திலும் இன்னுமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அப்படி என்றால் கிருஷ்ணரின் மேல் எனக்கு அன்பு இல்லை என்று தான் அர்த்தம். நான் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். கிருஷ்ணரை காண முடியாத பட்சத்தில் முன்னரே இறந்திருக்க வேண்டும்." ஆக நாம் இப்படி சிந்திக்க வேண்டும். இதுதான் உதாரணம். கிருஷ்ணருக்கு பணிபுரிவதில் நீங்கள் எவ்வளவு கைத்தேர்ந்தவராக இருந்தாலும், நீங்கள் எப்பொழுதும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால்... கிருஷ்ணர் எல்லையற்றவர், நீங்கள் எவ்வளவு சிறப்பாக சேவை செய்தாலும் அது அவரை முழுமையாக சென்றடையாது. அது எப்பொழுதுமே முழுமையடையாமல் தான் இருக்கும், ஏனென்றால் நாம் வரம்பெல்லைகளுக்கு உடபட்டவர்கள். ஆனால் கிருஷ்ணர் மிகவும் கருணையுள்ளவர். நீங்கள் முழுமனத்துடன் செய்யும் சிறு சேவையை கூட அவர் ஏற்றுக்கொள்கிறார். அது தான் கிருஷ்ணருடைய அழகு. ஸ்வல்பம் அபி அஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத். மேலும் கிருஷ்ணர் உன்னுடைய சிறிய சேவையை ஏற்றுக்கொண்டால், பிறகு உன் வாழ்வு போற்றத்தக்கது. ஆக, கிருஷ்ணருக்கு முழுமையாக சேவை செய்வது, முழுமையாக அன்பு செலுத்துவது சாத்தியம் இல்லை, ஏனென்றால் அவர் எல்லையற்றவர். இந்தியாவில் ஒரு வழிபாடு முறை இருக்கிறது, கங்கை நதியின் வழிபாடு. கங்கை நதி மிகவும் புனிதமான நதியாகக் கருதப்படுகிறது. ஆக அவர்கள் கங்கை நதியில், சற்று நீரை எடுத்து அதிலேயே அர்ப்பணிப்பார்கள். சிறிய பானையிலோ, கையளவோ, நீரை கங்கையிலிருந்து எடுத்து, பக்தியுடன் மந்திரத்தை சொல்லி கங்கை நதியிலேயே அதை அர்ப்பணிக்க வேண்டும். ஆக நீ ஒரு குவளை தண்ணீரை கங்கையிலிருந்து எடுத்து கங்கைக்கே அர்ப்பணித்தால், இதில் கங்கைக்கு இலாபமா நஷ்டமா? கங்கையிலிருந்து ஒரு குவளை நீரை எடுத்து கங்கைக்கே திரும்பவும் கொடுப்பதால், கங்கைக்கு என்ன இலாபம்? ஆனால் உன் வழிபாடு முறை, உன் நம்பிக்கை, மற்றும் தாயார் கங்கையின்மீது உள்ள உன் அன்பு, அதாவது "கங்கை தாயே, உனக்கு இந்த சிறிதளவு நீரை காணிக்கையாக செலுத்துகிறேன்," அதுதான் ஏற்க்கப் படும். அதுபோலவே, கிருஷ்ணருக்கு கொடுப்பதற்கு நிமிடம் என்ன இருக்கிறது ? எல்லாமே கிருஷ்ணருக்கு தான் சொந்தமானது. இந்த பழங்களை கிருஷ்ணருக்கு அர்ப்பணித்திருக்கிறோம். இந்த பழங்கள் நமக்கா சொந்தம்? இந்த பழங்களை உற்பத்தி செய்தது யார்? நானா உற்பத்தி செய்தேன்? ஒரு பழத்தையோ, தானியங்களையோ, பாலையோ உருவாக்கும் அறிவாற்றல் எந்த மனிதனுக்காவது இருக்கிறதா? பல பெரிய விஞ்ஞானிகள் இருக்கிறார்கள். அவர்கள் இதையெல்லாம் உற்பத்தி செய்யட்டும் பார்க்கலாம். பசு புல்லை தின்றுவிட்டு உங்களுக்கு பாலை தருகிறது. அறிவியலை வைத்து, புல்லை பாலாக மாற்றுங்கள் பார்க்கலாம். அப்பொழுது கூட முட்டாள்கள் கடவுள் இருக்கிறார் என்பதை ஒப்புக்கொள்வதில்லை. புரிகிறதா? அவர்கள் அந்த அளவுக்கு அயோக்கியர்களாக இருக்கிறார்கள்: "அறிவியலாம்." ஆக உங்கள் அறிவியல் என்ன முட்டாள்தனமா? பசுக்கள் புல்லை தின்று உங்களுக்கு பாலை தருகின்றன. உங்கள் மனைவியிடம் புல்லை கொடுத்து பாலை உற்பத்தி செய்யுங்களேன் பார்க்கலாம். எதற்காக கடைக்கு சென்று வாங்குகிரீர்கள்? ஆனால் இந்த புல்லை மனிதனுக்கு கொடுத்தால், அவள் இறந்துவிடுவாள். ஆக அனைத்துமே கடவுளின் சட்டப்படி, கிருஷ்ணரின் சட்டப்படி இயங்குகிறது, அப்படி இருந்தும், "கடவுள் இல்லை. நான் தான் கடவுள். கடவுள் இறந்துவிட்டார்." என்று அவர்கள் கூறுகிறார்கள். அவர்கள் அவ்வளவு முட்டாள்களாக , ஏமாளிகளாக ஆகிவிட்டார்கள். இந்த கூட்டத்திற்கு அவர்கள் ஏன் வருவதில்லை ? "ஓ, இந்த ஸ்வாமிஜி கடவுளை பற்றி பேசுகிறார், பழைய கதைகள். (சிரிப்பு) நாம் புதிதாக எதையாவது கண்டுபிடிப்போம்." புரிகிறதா? மேலும் எல்லா அபத்தமான விஷயங்களை யாராவது பேசினால், "ஓ, அவர்... நான்கு மணி நேரம் பூஜ்யத்தை பற்றி பேசினார்." பாருங்கள். மாண்ட்ரீல் ஊரில், ஒருவர் கூறினார், "ஸ்வாமிஜி, அவர் அற்புதமானவர். நான்கு மணி நேரம் பூஜ்யத்தை பற்றி பேசினார்." நான்கு மணி நேரம் பூஜ்யத்தை பற்றி விரும்பி கேட்டார்களாம், அந்த அளவுக்கு முட்டாள்கள். புரிகிறதா? (சிரிப்பு) பூஜ்யத்தின் மதிப்பு என்ன ? அதற்கு நான்கு மணிநேரம் வேறு வீணடித்தீர்களா? மொத்தத்தில் அது வெறும் பூஜ்ஜியம் தானே அடா. ஆக மக்கள் இதைத் தான் விரும்புகிறார்கள். நாம் எளிமையான விஷயங்களை சொன்னால் - "கடவுள் சிறந்தவர். நீ அவரது சேவகன், நித்தியமான சேவகன். உனக்கென்று எந்த சக்தியும் கிடையாது. நீ எப்பொழுதும் கடவுளைச் சார்ந்து தான் இருக்கிறாய். நீ உன்னுடைய தொண்டாற்றும் மனப்பான்மையை கடவுளிடம் காட்டு, நீ மிகவும் சந்தோஷமாக இருப்பாய்," இப்படி நாம் கூறினால், அவர்கள் "ஐயோ இது அவ்வளவு இனிமையாக இல்லையே," என்பார்கள். ஆக அவர்கள் ஏமாற விரும்புகிறார்கள். எனவே பலவகையான ஏமாற்றுக்காரர்கள் வந்து ஏமாற்றி விட்டு செல்கிறார்கள், அவ்வளவு தான். மக்கள் ஏமாற விரும்புகிறார்கள். எளிதான விஷயங்களை அவர்கள் விரும்புவதில்லை.