TA/Prabhupada 0293 - பன்னிரெண்டு விதமான ரஸஸ், மனநிலை உள்ளது



Lecture -- Seattle, October 4, 1968

கிருஷ்ண என்றால், "எல்லா விதத்திலும் ஈர்க்கக்கூடியவர்." அவர் அழகுணர்ச்சி உள்ள ஒருவரை கவரக்கூடியவர், விவேகமுள்ளவர்களை ஈர்க்கக்கூடியவர், அவர் அரசியல்வாதிகளை ஈர்க்கக்கூடியவர், விஞ்ஞானிகளை கவரக்கூடியவர், கயவர்களை ஈர்க்கக்கூடியவர். கயவர்களுக்கு கூட. கிருஷ்ணர் கம்சனின் அரங்கத்தில் புகுந்த போது, வெவ்வேறு நபர்கள் அவரை வெவ்வேறு விதமாக பார்த்தார்கள். விருந்தாவனத்திலிருந்து அழைக்கப்பட்டவர்கள், அவர்கள் இளம் பெண்கள். அவர்கள் கிருஷ்ணரை பார்த்து, "ஓ, அழகு மிக்கவர்," என்று நினைத்தார்கள். மல்யுத்த வீரர்கள், கிருஷ்ணரை பலமான இடியைப் போல் பார்த்தார்கள். அவர்களும் கிருஷ்ணரை பார்த்தார்கள், ஆனால் அவர்கள் கூறினார்கள், "ஓ, இவன் இடியைப் போல் சக்திவாய்ந்தவன்." எப்படி என்றால், நீங்கள் எவ்வளவு பலசாலியாக இருந்தாலும், ஒரு இடி விழுந்தால் எல்லாம் முடிந்துவிடும். ஆக அவர்கள் கிருஷ்ணரை ஒரு இடியைப் போல் பார்த்தார்கள், அந்த மல்யுத்த வீரர்கள். ஆம். மேலும் வயது முதிர்ந்தவர்கள், மூத்த தாய்மார்கள், கிருஷ்ணரை ஒரு அன்புக்குரிய குழந்தையாக பார்த்தார்கள். ஆக நீங்கள் கிருஷ்ணருடன் எவ்வகையிலும் உறவை ஏற்படுதிக் கொள்ளலாம். பன்னிரெண்டு விதமான ரசங்கள், ரசனைகள் உள்ளன. எப்படி என்றால், சிலசமயம் நாடகங்களில், நாம் பரிதாபமிக்க காட்சியை, கொடூரமான காட்சியை பார்க்க விரும்புவோம். ஒருவன் மற்றொருவனை கொலை செய்துகொண்டிருப்பான், அதை பார்த்து மகிழ்வோம். வெவ்வேறு விதமான மக்கள் இருக்கிறார்கள்... வெவ்வேறு விதமான விளையாட்டுகள் உள்ளன. மாண்ட்ரீல் நகரத்தில் உள்ள எங்கள் மாணவர்களில் ஒருவர்; அவர் சொல்லிக் கொண்டிருந்தார், அதாவது அவர் தந்தை, ஸ்பென் நாட்டில் நடக்கும் மாட்டுச் சண்டையில் பங்கேற்று மகிழ்வாராம். அந்த காளை, சண்டையில் கொல்லப்பட்டால், அவருக்கு அதில் ஒரு சந்தோஷமாம் - வெவ்வேறு விதமான மனிதர்கள். ஒருவன் அதை பார்த்து, "இது ஒரே கொடூரம்," என்பான், மற்றொருவன் அதையே பார்த்து, "ஓ, இது மிகவும் நன்றாக இருக்கிறது," என்று மகிழ்வான். புரிகிறதா? ஆக கிருஷ்ணர் அனைவரையும் கவரக்கூடியவர். நீங்கள் கொடூரமான விஷயங்களை விரும்பினால், கிருஷ்ணர் நரசிம்ஹதேவராக தோற்றம் அளிப்பார், "ஆ." (கர்ச்சனை செய்து - எல்லோரும் சிரிக்கிறார்கள்) ஆம். மேலும் நீங்கள் கிருஷ்ணரை ஒரு அன்பிற்குரிய நண்பனாக பார்க்க விரும்பினால், அவர் வம்ஸி-தாரீ, விருந்தாவன-விஹாரீ. நீங்கள் கிருஷ்ணரை ஒரு அன்பிற்குரிய குழந்தையாக பார்க்க விரும்பினால், அப்போது அவர் கோபாலர். நீங்கள் அவரை ஒரு அன்பிற்குரிய நண்பனாக பார்க்க விரும்பினால், அர்ஜுனருக்கு காட்சி அளித்தது போல் இருப்பார். அர்ஜுனரும் கிருஷ்ணரும் போல் தான். ஆக பன்னிரெண்டு விதமான ரசனைகள், உறவு சுவைகள் உள்ளன. கிருஷ்ணரால் இந்த அனைத்து ரசனைகளையும் வெளிபடுத்த முடியும்; எனவேதான் அவர் பெயர் அகில-ரசாம்ருத-சிந்து. அகில-ரசாம்ருத-சிந்து. அகில என்றால் எல்லாம் கொண்ட, ரச என்றால் ரசனை, மனநிலை, மேலும் சிந்து என்றால் சமுத்திரம். எப்படி என்றால், நீங்கள் தண்ணீரை தேடி, பசிபிக் மகா சமுத்திரத்திற்குச் சென்றால், ஓ, எல்லையற்ற தண்ணீர் இருப்பதை உணர்வீர்கள். அங்கே எந்தளவுக்கு தண்ணீர் இருக்கிறது என்பதை ஒப்பிட்டுப் பார்க்கவே முடியாது. அதுபோலவே, நீங்கள் ஏதோ ஒன்றை நாடி கிருஷ்ணரை அணுகினால், அதை கணக்கில்லாத, சமுத்திரத்தைப் போல் அளவில்லாத வழங்கக்கூடியவர் அவர், என்பதை நீங்கள் உணர்வீர்கள். எனவே பகவத் கீதையில் கூறப்பட்டிருக்கிறது, யம் லப்த்வா சாபரம் லாபம் மன்யதே நாதிகம் தத: ஒருவனால் அந்த பூரணமான முழுமுதற் கடவுளை அணுக முடிந்தால், அல்லது அடைய முடிந்தால், பிறகு அவன் திருப்தி பெற்று, "ஓ. எனக்கு இதற்கு மேல் எந்த ஏக்கமும் இல்லை. எனக்கு அனைத்தும் முழுமையாக, பரிபூரண திருப்தியுடன் கிடைத்துவிட்டது," என்பான். யம் லப்த்வா சாபரம் லாபம் மன்யதே நாதிகம் தத: யஸ்மின் ஸ்திதே. மேலும் ஒருவன் அந்த திவ்வியமான நிலையை அடைந்தால், பிறகு என்ன நடக்கும்? குருணாபி துக்கேன ந விசால்யதே (பகவத் கீதை 6.20-23). எப்பேர்ப்பட்ட கடுமையான சோதனைகள், துன்பங்கள் வந்தாலும், அவன் தளர்வடைவதில்லை. எடுத்துக்காட்டாக, ஸ்ரீமத் பாகவதத்தில் பல சம்பவங்கள் இருக்கின்றன. பகவத் கீதையிலும் பாண்டவர்கள் பல துயரங்களில் தள்ளப்பட்டார்கள், ஆனால் அவர்கள் ஒருபோதும் தளர்வடையவில்லை. அவர்கள் ஒருபோதும் கிருஷ்ணரை, "என் அன்புள்ள கிருஷ்ணா, நீ எங்கள் நண்பன். நீ பாண்டவர்களின் நண்பன். நாங்கள் ஏன் இவ்வளவு கடுமையான சோதனைகளுக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம்?" என்று கேட்கவில்லை. இல்லை. அவர்கள் ஒருபோதும் கேட்கவில்லை, ஏனென்றால் "இவ்வளவு துன்பங்களை அனுபவித்தப் பிறகும், கிருஷ்ணர் துணையாக இருப்பதால் நாம் நிச்சயமாக வெற்றி அடைவோம், கிருஷ்ணர் துணையாக இருக்கிறார்," என்று அவர்கள் உறுதியாக இருந்தார்கள். இதுதான் நம்பிக்கை. இதை தான் சரணாகதி, அதாவது சரணடைதல் என்கிறோம்.