TA/Prabhupada 0295 - ஒரு உயிருள்ள சக்தி மற்ற அனைத்து ஜீவாத்மாக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்கிறது



Lecture -- Seattle, October 4, 1968

இந்த வாழ்க்கை, இந்த மனித வாழ்க்கை... நாம் இப்பொழுது பெற்றிருப்பது... மற்ற பிறவிகளில் நாம் புலன்களின் சுகத்தை முழுமையாக இறுதிவரை அனுபவித்துவிட்டோம். இந்த மனித வாழ்க்கையில் நம்மால் எவ்வளவு அனுபவிக்க முடியும்? மற்ற பிறவிகளில்... டார்வினின் கொள்கைப்படி, இந்த மனித வாழ்க்கைக்கு முன்பு குரங்கு இனம் இருந்ததாம். ஆக இந்த குரங்கு... உங்களுக்கு அனுபவம் இருக்காது. இந்தியாவில் நாங்கள் பார்த்திருக்கிறோம். ஒவ்வொரு குரங்கிற்கும், குறைந்தது நூறு பெண் குரங்குகள், அது கூடவே சுத்தும். நூறு பெண் குரங்குகள். ஆக அத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் நம்மால் எவ்வளவு அனுபவிக்க முடிகிறது? ஒவ்வொரு குரங்குக்கும் ஒரு கூட்டமே இருக்கும், மற்றும் ஒவ்வொரு கூட்டத்திலும், ஒரு குரங்குக்கு குறைந்தது ஐம்பது, அறுபது, குறைந்தபட்சம் இருபத்தி-ஐந்து பெண் குரங்குகளாவது இருக்கும். அதுபோலவே பன்றியின் வாழ்க்கையில், அவைகளுக்கும் டஜன் கணக்கில்.... டஜன் பெண் பன்றிகள். மேலும் அவைகளுக்கு வித்தியாசமே தெரியாது, "யார் என் தாய், யார் என் சகோதரி, யார் என் உறவினர்." புரிகிறதா? ஆக அவைகள் அப்படி அனுபவிக்கின்றன. ஆக மனித வாழ்க்கையும் அதற்காகத் தான் என்று நினைக்கிறீர்களா - குரங்குகளையும், பன்றிகளையும், பூனைகளையும் நாய்களையும் போல்? புலனின்பத்தை நிறைவேற்றுவது தான் மனித வாழ்க்கையின் இலக்கா? இல்லை. அதை நாம் வாழ்க்கையில் பல்வேறு உயிரினங்களில் பிறவி எடுத்து ஏற்கனவே அனுபவித்துவிட்டோம். இப்பொழுது செய்யவேண்டியது என்ன? வேதாந்தம் கூறுகிறது, அதாதோ ப்ரஹ்ம ஜிஞாஸா. இந்த வாழ்க்கை, ப்ரஹ்மன் என்றால் என்னவென்பதை கேட்டு புரிந்துகொள்வதற்குத் தான். ப்ரஹ்மன் என்றால் என்ன? ஈஷ்வர: பரம: ப்ரஹ்ம அதாவது, ஈஷ்வர: பரம: க்ருஷ்ண: (பிரம்ம சம்ஹிதா 5.1). கிருஷ்ணர் பர-ப்ரஹ்மன் ஆவார். ப்ரஹ்மன், நாம் எல்லோரும் ப்ரஹ்மன், ஆனால் அவர் பர-ப்ரஹ்மன், மீஉயர்ந்த ப்ரஹ்மன். ஈஷ்வர: பரம: க்ருஷ்ண (பிரம்ம சம்ஹிதா 5.1). எப்படி என்றால், நீங்கள் எல்லோரும் அமெரிக்கர்கள், ஆனால் உங்கள் ஜனாதிபதி ஜான்சன் மீஉயர்ந்த அமெரிக்கன். அது தெளிவான விஷயம். வேதங்கள் கூறுவது என்னவென்றால், அனைவருக்கும் மீஉயர்ந்தவர், அந்த கடவுள். நித்யொ நித்யாநாம் சேதனஸ் சேதனாநாம் (கதா உபநிஷத் 2.2.13). கடவுள் யார்? அவர் பிழையற்றவர், நித்தியமானவர், தலைச்சிறந்த உயிர்வாழி. அதுதான் கடவுள். ஏகோ பஹூனாம் விததாதி காமான். ஏகோ பஹூனாம் விததாதி காமான். இதன் பொருள் என்னவென்றால், ஒரு உயிர் சக்தி மற்ற அனைத்து உயிர்வாழிகளின் தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. எப்படி ஒரு குடும்பத்தில், தந்தை என்பவர், மனைவியின், பிள்ளைகளின், வேளையாட்களின் - ஒரு சிறிய குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்கிறாரோ, அப்படித்தான். அதுபோலவே, அந்த குடும்பத்தை விரிவுபடுத்தி பார்த்தால்: அரசாங்கம் அதாவது அரசர், குடிமக்கள் அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்கிறார். ஆனால் இதுவெல்லாம் அனைத்தையும் உட்கொண்டதல்ல. பூரணமானதல்ல. நீங்கள் உங்கள் குடும்பத்தை பராமரிக்கலாம், உங்கள் சமூகத்தை பராமரிக்கலாம், உங்கள் நாட்டை பராமரிக்கலாம், ஆனால் உங்களால் உயிர் வாழும் அனைவரையும் பராமரிக்க முடியாது. ஆனால் கோடிக்கணக்கான உயிர்வாழிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு உணவு வழங்குவது யார்? உங்கள் அறையில் உள்ள ஓட்டையில் வாழும் ஆயிரக்கணக்கான எறும்புகளளை பராமரிப்பது யார்? யார் உணவு வழங்குகிறார்? நீங்கள் பச்சை ஏரிக்கு சென்றால், அங்கே ஆயிரக் கணக்கில் வாத்துக்கள் இருக்கின்றன. அவைகளை கவனித்துக் கொள்வது யார்? ஆனால் அவைகளும் வாழ்ந்து தான் கொண்டிருக்கின்றன. இலட்சக்கணக்கான சிட்டுக்குருவிகள், பறவைகள், மிருகங்கள், யானைகளும் உள்ளன. ஒரே நேரத்தில் அது பத்து கிலோ சாப்பிடும். அந்த உணவை வழங்குவது யார்? இங்கு மட்டுமல்ல, இப்படி பல கோடிக்கணக்கான கிரகங்களும் பேரண்டங்களும் எல்லா இடத்திலும் பரவி இருக்கின்றன. அது தான் கடவுள். நித்யோ நித்யாநாம் ஏகோ பஹூநாம் விததாதி காமான். எல்லோரும் அவரை சார்ந்திருக்கிறார்கள், மற்றும் அவரே அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்கிறார், அனைத்து தேவைகளையும். எல்லாம் பரிபூரணமாக உள்ளது. இந்த கிரகத்தைப் போல் தான், தேவையானது அனைத்தும் அதிலேயே பரிபூரணமாக இருக்கிறது. பூர்ணம் இதம் பூர்ணம் அத: பூர்ணாத் பூர்ணம் உதச்யதே பூர்ணஸ்ய பூர்ணம் ஆதாய பூர்ணம் ஏவாவஷிஸ்யதே (ஈஷோபநிஷத் பிரார்த்தனை) ஒவ்வொரு கோள்கிரகமும் உருவாக்கப்பட்ட விதம் எப்படி என்றால் அதில் வாழ தேவையானது அனைத்தும் அதிலேயே பரிபூரணமாக இருக்கிறது. கடல்களிலும் சமுத்திரத்திலும் தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டிருக்கிறது. அந்த தண்ணீர் சூரிய வெப்பத்தால் எடுத்துச் செல்லப்படுகிறது. இங்கு மட்டுமல்ல, மற்ற கிரகங்களிலும் கூட, இதே செயல்முறை நடந்துக் கொண்டிருக்கிறது. அது மேகமாக மாறி, பிறகு நிலம் இருக்கும் இடங்களில் எல்லாம் விநியோகிக்கப்படுகிறது, பிறகு அங்கே காய்கள், பழங்கள் செடிகள் எல்லாம் வளர்கின்றன. ஆக எல்லாம் நிறைவான ஏற்பாடுகள். அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும், அதாவது எல்லாவற்றிலும் இப்பேர்ப்பட்ட முழுமையான ஏற்பாட்டை செய்தது யார். சூரியன் சரியான நேரத்தில் உதிக்கிறது, சந்திரன் சரியான நேரத்தில் உதிக்கிறது, பருவங்கள் சரியான நேரத்தில் மாறுகின்றன. பிறகு எப்படி உங்களால் சொல்ல முடியும்? வேதங்களில் கடவுள் இருக்கிறார் என்பதற்கான ஆதாரம் இருக்கிறது.