TA/Prabhupada 0317 - கிருஷ்ணரிடம் சரணடைவதில்லை, இது தான் வியாதி



Lecture on BG 4.7 -- Bombay, March 27, 1974


தர்மம் என்றால் என்னவென்று புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். கடவுள் ஒருவர்தான். கடவுளால் எங்கேயும் "இதுதான் சரியான மற்றும் மதம் அது சரியான மதம் இல்லை." என்று கூற முடியாது. கடவுள், பகவான் கிருஷ்ணர் பகவத்-கீதையில் கூறுகிறார்... இங்கே கூறப்பட்டிருக்கிறது


யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி (பகவத்-கீதை 4.7)


பரித்ராணாய ஸாதூ... அடுத்த படத்தில் அவர் கூறுகிறார்


பரித்ராணாய ஸாதூனாம் வினாஷாய ச துஷ்க்ருதாம் தர்ம-ஸம்ஸதாபனார்தாய ஸம்பவாமி யுகே யுகே (பகவத்-கீதை 4.8)


கிருஷ்ணரின் இரண்டு நோக்கங்கள். ஏனென்றால் அவர் ஏற்கனவே விவரிக்கிறார், பூதானாம் ஈஷ்வர. "எல்லா உயிர்வாழீகளும் என் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள்." ஆக தர்மத்தை நிகழ்த்துவதில் முரண்பாடுகள் இருக்கும்போது, அவர் தண்டிக்கவோ அல்லது பலனளிக்கவோ வேண்டி இருக்கிறது. பரித்ராணாய ஸாதூனாம் வினாஷாய ச துஷ்க்ருதாம். இரண்டு விஷயங்கள். உதாரணமாக சட்டத்தை மதிப்பவர்களை காப்பதும், சட்டத்தை மதிக்காதவர்களை கண்டிப்பதும் அரசாங்கத்தின் கடமை. இவை அரசாங்கத்தின் இரண்டு கடமைகள். மற்றும் மீஉயர்ந்த அரசாங்கம் அதாவது கிருஷ்ணர்... ஏனென்றால் இந்த கருத்தது எங்கிருந்து வந்தது? சட்டத்தை மதிக்கும் நபருக்கு அரசாங்கம் பலனளிக்கிறது, அதாவது பாதுகாப்பு தருகிறது, மற்றும் சட்டத்தை மதிக்காதவர்களுக்கும் பாதுகாப்பு தருகிறது ஆனால் தண்டனையின் விதிக்கிறது. ஆக கிருஷ்ணர் பகவத்-கீதையில் கூறும்படி, தர்மம் என்றால்


ஸர்வ–தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ (பகவத்-கீதை 18.66)


இதுதான் தர்மம். இதுதான் தர்மம். மேலும் நம்முடைய தர்மமும், அதாவது இயல்புத்தன்மையும் அதுதான். ஏனென்றால் நமதில் ஒவ்வொருவரும் யாரிடமாவது சரணடைகிறோம். யாரை வேண்டுமானாலும் ஆராயுங்கள். அவனுக்கு யாராவது எஜமானாக இருப்பார், அவ்விடத்தில் அவன் சரணடைந்திருப்பான். அது அவன் குடும்பத்தினர், அவன் மனைவி, அல்லது அவன் அரசாங்கம், அவன் சமுதாயம், அவன் அரசியல் கட்சி, யாராகவும் இருக்கலாம். எங்கு சென்றாலும் சரணடைவது இயல்புத்தன்மை. அதை உன்னால் தவிர்க்க முடியாது. மாஸ்காவில் பேராசிரியர் கடாவ்ஸ்கியுடன் இதைத்தான் விவாதித்தேன். நான் அவரைக் கேட்டேன், "பொது உடைமை உங்களது தத்துவம். எங்களிடம் கிருஷ்ணரின் தத்துவம் இருக்கிறது. தத்துவங்களில் வித்தியாசம் எங்கே இருக்கிறது? நீங்கள் லெனினிடம் சரணடைந்திருக்கிறீர்கள், மற்றும் நாங்கள் கிருஷ்ணரிடம் சரணடைந்திருக்கிறோம். வித்தியாசம் எங்கே இருக்கிறது? எல்லாரும் சரணடைய வேண்டியிருக்கிறது. எங்கு சரணடைகிறான் என்பது முக்கியமில்லை. சரியாக சரணடைந்தால் எல்லாம் சரியாக இருக்கும். சரணடைவதில் தவறு இருந்தால், எதுவும் சரியாக இருக்காது. இதுதான் தத்துவம். ஆக நாம் சரணடைகிறோம். ஸ்ரீ சைதன்ய மஹாப்ரபு இதை விளக்கியிருக்கிறார்.


ஜீவேர ஸ்வரூப ஹய நித்ய-க்ருஷ்ண-தாஸ (சைதன்ய சரிதாம்ருதம் மத்திய லீலை 20.108-109)


நான் சரணடைகிறோம், ஆனால் கிருஷ்ணரிடம் சரணடைவதில்லை. இதுவே நமது நோய். இதுவே நமது நோய். மேலும் இந்த நோயைக் குணப்படுத்துவதே இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தின் நோக்கம். நோயை குணப்படுத்த வேண்டும். கிருஷ்ணரும் வருகிறார். அவர் கூறுகிறார்


யதா யதா ஹி தர்மஸ்ய (பகவத்-கீதை 4.7)


தர்மஸ்ய க்லானி:, தர்மத்தை நிகழ்த்துவதில் முரண்பாடுகள், முரண்பாடுகள் இருக்கும்பொழுது, கிருஷ்ணர் கூறுகிறார், ததாத்மானம் ஸ்ருஜாம்-யஹம். பிறகு அப்யுத்தானம் அதர்மஸ்ய. இதில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. மக்கள் கிருஷ்ணரிடம் சரணடையாமல் இருப்பதற்காக பல கடவுள்களை உற்பத்தி செய்கிறார்கள். சரணடைவதற்காக பல அயோக்கியர்கள் இருக்கிறார்கள். அது தான் அதர்மஸ்ய. கிருஷ்ணரிடம் சரணடைவதுதான் தர்மம், ஆனால் கிருஷ்ணரிடம் சரணடைவதை விட்டுவிட்டு, நாய்கள், பூனைகள் மற்றும் பலரிடம் சரணடய விரும்புகிறார்கள். இது அதர்மம். கிருஷ்ணர், இந்து மதத்தையோ, முஸ்லிம் மதத்தையோ, கிறித்துவ மதத்தையோ ஏற்படுத்துவதற்காக வரவில்லை. அவர் உண்மையான தர்மத்தை நிலைநாட்ட வந்தார். உண்மையான தர்மம் என்றால் நாம் முழுமுதற் கடவுளிடம் சரணடைய வேண்டும். அது தான் உண்மையான தர்மம். எல்லோரும் சரணடைகிறார்கள். எல்லோருக்கும் ஏதாவது ஒரு கருத்து இருக்கும். அதன்படி அவன் அங்கே சரணடைகிறான். அரசியல், சமுதாயம், பொருளாதாரம், மதம், எதுவாக இருந்தாலும் அதில் எல்லோருக்கும் ஏதாவது கருத்து இருக்கிறது. அந்த கருத்தை நிகழ்த்தும் தலைவனும் இருக்கிறான். சரணடைவது நம் இயல்பு . அது உண்மை. ஆனால் நமக்கு யாரிடம் சரணடைவது என்பது தெரியவில்லை. அது தான் பிரச்சினை. மேலும் அந்த சரணடைவு தவறான இடத்தில் இருப்பதால், அனைத்து உலகமும் பெருங்குழப்பத்தில் இருக்கிறது. நாம் வெறும் இந்த சரணடைவிலிருந்து அந்த சரணடைவுக்கு மாறுகிறோம். இனி காங்கிரஸ் கட்சி வேண்டாம். இனிமேல் கம்யூனிஸ்ட் கட்சி. மீண்டும், "இனி கம்யூனிஸ்ட் கட்சி வேண்டாம். இந்த கட்சி, அந்த கட்சி." கட்சி மாறுவதால் என்ன பயன்? ஏனெனில் இந்த கட்சியோ அந்த கட்சியோ, அவர்கள் கிருஷ்ணரிடம் சரணடைவதில்லை. நீ கிருஷ்ணரிடம் சரணடையும் முடிவுக்கு வரும் வரை எந்த நிம்மதியும் இருக்கமுடியாது. அது தான் விஷயம். வெறும் எண்ணை சட்டியிலிருந்து நெருப்புக்கு குதிப்பதால் உன்னை நீ காப்பாற்றிக்கொள்ள முடியாது.