TA/Prabhupada 0340 - உன் வாழ்வு மரணம் அடைவதற்கு இல்லை,ஆனால் இயற்கை உன்னை வலுப்படுத்துகிறது



Lecture on BG 9.1 -- Melbourne, June 29, 1974


நமோ மஹா-வதன்யாய க்ருஷ்ண-ப்ரேம-ப்ரதாயதே க்ருஷ்ணாய க்ருஷ்ண-சைதன்ய-நாம்னே கௌர-த்விஷே நம (சைதன்ய சரிதாம்ருதம் மத்திய லீலை 19.53)


ஸ்ரீல ரூப கோஸ்வாமி, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவை ப்ரயாகில் சந்தித்தபோது... இந்தியாவில் ப்ரயாக என்கிற ஒரு புண்ணிய க்ஷேத்திரம் இருக்கிறது. ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு, சன்யாசம் ஏற்றுக்கொண்டப் பின், ப்ரயாக மற்றும் மற்ற தீர்த்த ஸ்தலங்களுக்கு சென்றார். ஸ்ரீல ரூப கோஸ்வாமி, ராஜ்யத்தில் மந்திரியாக இருந்தார், ஆனால் எல்லாத்தையும் விட்டுவிட்டு இந்த ஹரே கிருஷ்ண இயக்கத்தில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவிடம் வந்து சேர்ந்தார். ஆக முதல் சந்திப்பில் அவர் இந்த ஸ்லோகத்தை வழங்கினார், நமோ மஹா-வதன்யாய. வதன்யாய என்றால் "அதி மிக தயாள குணமுடையவர்." கடவுளின் பல அவதாரங்கள் இருக்கின்றன, ஆனால் ரூப கோஸ்வாமி கூறுகிறார், "கடவுளின் இந்த அவதாரம், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு, எல்லாவற்றிலும் மிக தயாள குணம் கொண்டவர்." நமோ மஹா-வதன்யாய. என் தயாள குணம் கொண்டவர்? க்ருஷ்ண-ப்ரேம-ப்ரதாயதே: "இந்த ஸங்கீர்தன இயக்கத்தால் தாங்கள் தாமதமின்றி கிரிஷ்ணரை அடையும் வழியை அளித்தீர்." கிருஷ்ணரை புரிந்து கொள்வது மிகவும் கடினமானது. கிருஷ்ணரே பகவத் கீதையில் கூருகிறார்,

மனுஷ்யானாம் ஸஹஸ்ரேஷு கஸ்சித் யததி ஸித்தயே (பகவத் கீதை 7.3)

"பல கோடி மனிதர்களிலிருந்து", இந்த யுகத்தில் மற்றும் அல்ல, கடந்த யுகங்களிலிருந்தும் தான். மனுஷ்யானாம் ஸஹஸ்ரேஷு, "பல லக்ஷ்ம் மனிதர்களிலிருந்து, 'கஷ்சித் யததி ஸித்தயே', "ஒருவர் மற்றும் பக்குவம் அடைய முயற்சி செய்கிறார்." பொதுவாக அவர்களுக்கு பக்குவம் அடைவது என்றால் என்னவென்று தெரியாது. முழுமை என்றால் என்னவென்று அவர்களுக்கு தெரியாது. பக்குவம் அடைவது என்றால் ஜன்மம், மரணம், முதிர்ச்சி மற்றும் நோய் என்கிற சுழற்சியை நிறுத்துவது. அதை தான் முழுமை என்பார்கள். எல்லோரும் பக்குவம் அடைய முயற்சி செய்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு முழுமை என்றால் என்னவென்றே தெரியாது. எப்பொழுது நீ இந்த நான்கு குறைகளிலிருந்து விடுபடுகிறாயோ அப்பொழுது அதை முழுமை அடைவது என்பார்கள். அது எவை? ஜன்மம், மரணம், முதிர்ச்சி மற்றும் நோய். எல்லோரும். யாருக்கும் மரணம் அடைய விருப்பம் இருப்பதில்லை ஆனால் வலுப்படுத்தல் இருக்கிறது: நீ மரணம் அடைந்தே ஆகவேண்டும். அது ஒரு குறை. ஆனால் இந்த அயோக்கியற்களுக்கு தெரியாது. நாம் மரணம் அடைந்து தான் ஆகவேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அப்படி கிடையாது. நீ மரணமற்ற ஆன்மா, ஆகையால் உன் வாழ்வு மரணம் அடைவதற்கு இல்லை. ஆனால் இயற்கை உன்னை வலுப்படுத்துகிறது, நீ மரணம் அடைந்தே ஆகவேண்டும் என்று.