TA/Prabhupada 0370 - என்னைப் பொருத்தவரை, நான் எந்த புகழையும் ஏற்றுக்கொள்வதில்லை



Conversation with Prof. Kotovsky -- June 22, 1971, Moscow

என்த வைதீகமான இந்துவும் வரலாம், ஆனால் எங்களிடம் தகுந்த ஆயுதங்கள் இருக்கின்றன, வேதங்களின் அடிப்படையான ஆதாரங்கள். ஆகையால் யாரும் இதுவரை வரவில்லை. கிறித்துவ பாதிரியாரும் கூட... அமெரிக்காவைச் சேர்ந்த கிறித்துவ பாதிரியார்களின் அன்பையும் நான் பெற்றிருக்கிறேன். அவர்கள் சொன்னார்கள் "இந்த இளைஞர்கள், அவர்கள் அமெரிக்கர்கள், கிறித்துவர்கள் மற்றும் யூதர்கள். இவர்கள் கடவுளுக்காக இவ்வளவு மும்முரமாக இருக்கிறார்கள் ஆனால் எங்களால் இவர்களை கறை சேர்க்க முடியவில்லை. அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். அவர்கள் தந்தையார், பெற்றோர்கள் என்னிடம் வருகிறார்கள். மற்றும் என்னை தாழ்ந்து வணங்கி கூறுகிறார்கள், "ஸ்வாமிஜி, தாங்கள் வந்தது எங்கள் பாக்கியம். நீங்கள் கடவுள் உணர்வை போதிக்கிறீர்கள். ஆக நேர்மாறாக, எனக்கு பல்வேறு நாடுகளிலிருந்து வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தியாவிலிருந்தும், நீங்கள் இந்தியாவைப் பற்றி கேட்டதால், வெவ்வேறு பிரிவினர்களும் என் முன்னால் பல நூற்றுக்கணக்கான ஸ்வாமிகள் அங்கே சென்றுள்ளார், ஆனால் ஒருவரை கூட கிருஷ்ண உணர்வுள்ள வராக மாற்றமுடியவில்லை. அவர்கள் அதை ஒப்புக் கொள்கிறார்கள். மற்றும் என்னைப் பொருத்தவரை, நான் எந்த புகழையும் ஏற்றுக்கொள்வதில்லை, வேத ஞானத்தை தத்ரூபமாக அளிப்பதால் நான் உறுதியாக இருக்கிறேன், எந்த கலப்படமும் இல்லாமல் இருப்பதால், இது பயனுள்ளதாக இருக்கிறது. அதுதான் என் பங்களிப்பு. உன்னிடம் சரியான மருந்து இருந்து அதை நோயாளிக்கு அளித்தால், அவன் தேவலையாகி விடுவான் என்று உறுதியாக இருக்கலாம், அப்படித்தான்.