TA/Prabhupada 0372 - அனாதி கராம பலே பாடலின் பொருள்



Anadi Karama Phale and Purport - Los Angeles

அனாதி கரம-பஃலே. அனாதி கரம-பஃலே பொரி பவார்ணவ-ஜலே தரிபாரே நா தேகி உபாய. இது பக்திவினோத தாகுரால் பாடப்பட்ட ஒரு பாடல், கட்டுண்ட ஆத்மாவின் நிலையை விவரிக்கும் பாடல். பக்திவினோத் தாகுர், தன்னை நமதில் ஒருவராக, ஒரு சாதாரண மனிதனாக எண்ணி கூறுகிறார், கடந்தகாலத்தில் நான் செய்த பலன்நோக்குச் செயல்களால் இந்த அறியாமைக் கடலில் விழுந்திருக்கிறேன், மேலும் இந்த பெறுங்கடலிலிருந்து மீண்டு வருவதற்கு எந்த வழியும் எனக்கு தென்படவில்லை. இது ஒரு விஷக்கடலைப் போல் தான், எ விஷய-ஹலாஹலே, திவா-நிஷி ஹியா ஜ்வாலே. காரமான உணவை உண்டு நெஞ்செரிச்சல் ஏற்படுவதுப் போல் தான், நாமும் புலனுகர்ச்சியால் இன்பம் பெற முயல்கிறோம், ஆனால் வாஸ்தவத்தில், நேர்மாறாக அது நம் நெஞ்செரிச்சலுக்கான காரணம் ஆகிவிடுகிறது. எ விஷய-ஹலாஹலே, திவா-நிஷி ஹியா ஜ்வாலே, அந்த எரிச்சல் இருபத்தி நான்கு மணி நேரம், இரவும் பகலும் இருந்து கொண்டே இருக்கும். மன கபு ஸுக நாஹி பாய, இதனால் என் மனம் ஒருபோதும் நிறைவு அடைவதில்லை. ஆசா-பாச-சத-சத க்லேஷ தெய் அபிரத, நான் எப்பொழுதும் இன்பத்தைப் பெறுவதற்கு ஆயிரக்கணக்கான திட்டங்களை செய்து கொண்டிருக்கிறேன், ஆனால் வாஸ்தவத்தில் அவை எல்லாம் எனக்கு இருபத்தி நான்கு மணி நேரமும் தொல்லை கொடுக்கின்றன.

ப்ரவ்ருத்தி-ஊர்மிய தாஹே கேல, அது அப்படியே கடலின் அலைகளைப் போல் தான், எப்பொழுதும் ஒன்றின் மேல் ஒன்று மோதிக் கொண்டிருக்கும். இது தான் என் நிலைமை. காம-க்ரோத-ஆதி சய, பாதபாரே தேய் பாய, அதை தவிர்த்து எத்தனை திருடர்களும் அயோக்கியர்களும் இருக்கிறார்கள். குறிப்பாக அவை ஆறு நபர்கள், அதாவது காமம், கோபம், பொறாமை, மாயை, மற்றும் பலர். அவைகள் எப்போதும் இருக்கின்றன. எனக்கு அவைகளை நினைத்தாலே பயம். அபஸான ஹோய்லோ ஆஸி பேலா, இப்படி என் வாழ்க்கை கடந்து போகிறது, நான் என் முடிவை நோக்கி செல்கின்றன. க்ஞான-கர்ம டக துயி, மோரே ப்ரதாரியா லோய், இதுவே நிலைமை என்றாலும், இரண்டு வகையான செயல்கள், அதாவது மனக் கற்பனைகளும் பலன்நோக்குச் செயல்களும் என்னை ஏமாற்றுகின்றன. க்ஞான-கர்ம டக, டக என்றால் ஏமாற்றுபவன். க்ஞான-கர்ம டக துயி, மோரே ப்ரதாரியா லோய், அவைகள் என்னை திசை திருப்புகின்றன, மற்றும் அபஷேஷே பேஃலே ஸிந்து-ஜலே, என்னை திசை திருப்பி, அவை என்னை கடற்கரைக்கு அழைத்துச் சென்று, கடலின் அடிவாரத்தில் தள்ளிவிடுகின்றன. எ ஹேனோ ஸமயே பந்து, துமி க்ருஷ்ண க்ருபா-ஸிந்து, இந்த சூழ்நிலையில், என் அன்புக்குரிய கிருஷ்ணா, நீ தான் எனக்கு ஒரே துணைவன், துமி க்ருஷ்ண க்ருபா-ஸிந்து. க்ருபா கொரி தொலொ மொரே பலே, இப்போது இந்த அறியாமை கடலிலிருந்து வெளியேறும் சக்தி என்னிடம் இல்லை, ஆகையால் நான் உன் தாமரை பாதங்களில் வேண்டிக்கொள்கிறேன். உனது சக்தியால், தயவு செய்து என்னை மீட்டெடு. பதித-கிங்கரே தரி பாத-பத்ம-துலி கொரி, இறுதியில் நான் உன் நித்திய தாசன் தானே. ஆகையால் எப்படியோ நான் இந்த கடலில் விழுந்துவிட்டேன், நீ தயவு செய்து என்னை மீட்டெடுத்து, உன் தாமரை பாதங்களில் என்னையும் ஒரு தூசாக நிலைப்படுத்து. தேஹோ பக்திவினோத ஆஷ்ரய, பக்திவினோத் தாகுர் வேண்டிக்கொள்கிறார், "தயவு செய்து உன் தாமரை பாதங்களில் எனக்கு அடைக்கலம் தா." ஆமி தவ நித்ய-தாஸ, வாஸ்தவத்தில் நான் உன் நித்திய தாசன். பூலியா மாயார பாஸ, எப்படியோ நான் உன்னை மறந்து மாயையின் வலையில் சிக்கிவிட்டேன். பத்த ஹொயெ ஆசி தொயாமொய், என் அன்புக்குரிய நாதா, நான் இவ்வாறு சிக்கியிருக்கிறேன். தயவு செய்து என்னை காப்பாற்று.