TA/Prabhupada 0417 - இந்த ஜென்மத்தில் மற்றும் அல்ல, அடுத்த ஜென்மத்திலும் மகிழ்ச்சி அடையுங்கள்



Lecture & Initiation -- Seattle, October 20, 1968

ஆக இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தில் பங்கேற்று, இந்த ஜென்மத்தில் மட்டும் அல்ல, அடுத்த ஜென்மத்திலும் மகிழ்ச்சி அடையலாம். இந்த ஜென்மத்திலேயே கிருஷ்ணருடனான அன்பு பரிமாற்றத்தை பூரணமாக்க முடிந்தால், நூறு சதவீதம் நிறைவேற்றியதாகும். இல்லாவிட்டால், எவ்வளவு சதவீதம் இந்த ஜென்மத்தில் நிறைவேறியதோ, அது அப்படியே இருக்கும். வீண் போகாது. பகவத்-கீதையில் உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது,


ஸுசினாம் ஸ்ரீமதாம் கேஹே யோக ப்ரஷ்டோ ஸன்ஜாயதே (பகவத் கீதை 6.41)


யாரொருவரால் இந்த யோக பயிற்சியை நூறு சதவீதம் பூர்த்தி செய்ய முடிவதில்லையோ, அவனுக்கு அடுத்த ஜென்மத்தில் ஒரு பணக்கார குடும்பத்திலோ அல்லது நல்லற அந்தண குடும்பத்தில் பிறக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஆக இரண்டு வழிகள். மிகத் தூய்மையான ஒரு குடும்பத்தில் பிறக்கலாம் அல்லது பணக்கார குடும்பத்தில் பிறக்கலாம். குறைந்த பட்சம் மனிதப் பிறவி உறுதியாக கிடைக்கிறது. ஆனால் இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தில் பயிற்சி எடுக்காவிட்டால், அடுத்த ஜென்மம் என்னவாக இருக்கும் என்று சொல்லமுடியாது. 8,400,000 வகையான உயிரினங்கள் இருக்கின்றன. அவற்றில் எதிலாவது இடமாற்றப் படலாம். ஒரு மரமாக இடமாற்றப் பட்டால்... எடுத்துக்காட்டாக நான் ஸான் ஃப்ரான்ஸிஸ்கோவில் பார்த்திருக்கிறேன். "இந்த மரம் ஏழாயிரம் வருடங்களாக நின்று கொண்டிருக்கிறது." என்றார்கள். அவை ஏழாயிரம் வருடங்களாக மேசையின் மேல் நிற்கின்றன. பள்ளிக்கூடத்தில் சிறுவர்கள் சிலசமயங்களில் ஆசிரியரால் தண்டிக்க படுவார்கள், "மேசையின் மேல் எழுந்து நில்." என. அதுபோலவே இயற்கையின் கட்டளையால் இந்த மரங்களும் தண்டிக்கப் பட்டிருக்கின்றன, "எழுந்து நில்." என. ஆக மரமாகவோ அல்லது நாயாகவோ, ஒரு பூனையாகவோ அல்லது எலியாகக் கூட பிறப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. எவ்வளவு உயிரினங்கள் இருக்கின்றன. இந்த மனித வாழ்வு வடிவத்தில் கிடைத்த வாய்ப்பை தவற விடக்கூடாது. கிருஷ்ணருக்காக அன்பைப் பக்குவப் படுத்திக் கொள்வது மூலம், இந்த ஜென்மத்தில் மட்டுமஅல்ல, அடுத்த ஜென்மத்திலும் மகிழ்ச்சியாக இருக்கலாம்.