TA/Prabhupada 0426 - கற்றறிந்த ஒருவர், வாழ்ந்துக் கொண்டு அல்லது இறந்து போன உடலுக்காக புலம்பமாட்டார்



Lecture on BG 2.11 -- Edinburgh, July 16, 1972

பிரபுபாதர்: மொழிப் பெயர்ப்பு. ப்ரடுயும்ன: மொழிப் பெயர்ப்பு "புனிதமான பகவான் கூறுகிறார்: கற்றறிந்த வார்த்தைகளில் பேசிக் கொண்டிருக்கும் போது, நீங்கள் கவலைபட தேவையற்றதற்காக துக்கமடைந்துக் கொண்டிருக்கிறீர்கள். அறிவாளிகள் வாழ்ந்துக் கொண்டு இருப்பவர்களுக்காகவொ அல்லது இறந்தவர்களுக்காகவோ புலம்பமாட்டார்கள் (ப. கீ. 2.11)." பிரபுபாதர்: "புனிதமான பகவான் கூறுகிறார்: கற்றறிந்த வார்த்தைகளில் பேசிக் கொண்டிருக்கும் போது, நீங்கள் கவலைபட தேவையற்றதற்காக துக்கமடைந்துக் கொண்டிருக்கிறீர்கள். அறிவாளிகள் வாழ்ந்துக் கொண்டு இருப்பவர்களுக்காகவொ அல்லது இறந்தவர்களுக்காகவோ புலம்பமாட்டார்கள்." இது கிருஷ்ண தத்துவம், கிருஷ்ண பக்தி இயக்கம், ஜீவாத்மாக்களின் இயல்பான நிலைமை என்ன என்பதை மக்கள் புரிந்துக் கொள்ள கற்பிப்பதாகும். இங்கு கூறப்பட்டுள்ளது அதாவது கற்றறிந்த ஒருவர், அவர் வாழ்ந்துக் கொண்டு அல்லது இறந்து போன உடலுக்காக புலம்பமாட்டார். (பக்கத்தில்) அவர்கள் முன் வரிசையிலிருந்து நீக்கப்பட வேண்டும். அவர்கள் நீக்கப்பட வேண்டும், அவர்கள் பின்னோக்கிச் செல்ல வேண்டும். தற்போதைய நாகரிகம் உடல் சம்மந்தபட்ட வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது. "நான் இந்த உடல்." "நான் இந்தியன்," "நான் அமெரிக்கன்," "நான்இந்து," "நான் முஸ்லிம்," "நான் கருப்பு," "நான் வெள்ளை," மேலும் மற்றவையும். முழு நாகரிகம் உடல் சம்மந்தபட்ட வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு போய்க் கொண்டிருக்கிறது. அங்கே கற்பதில் முன்னேற்றம் இருப்பினும், பல பல்கலைக்கழகங்களும் கல்வி நிலையங்களும், ஆனால் எந்த இடத்திலும் இந்த கூறப்படும் செய்தி விவாதித்து அல்லது கற்றுத் தரப்படவில்லை, "நான் யார்." சொல்லப் போனால், அவர்களுக்கு கல்வி கற்பதன் மூலம் அவர்கள் இன்னும் அதிகமாக தவறான வழியில் இட்டுச் செல்லப்படுகிறார்கள் அதாவது "நீங்கள் இந்த நாட்டில் பிறந்தவர்கள். உங்களுக்கு தேசப்பற்று இருக்க வேண்டும், உங்கள் நாட்டிற்காக செயல் புரிய வேண்டும்." அல்லது பொதுவாக அழைக்கப்படும் தேசிய அந்தஸ்து கற்பிக்கப்படுகிறது. ஆனால் உண்மையிலியே அவன் யார் என்பதை யாருக்கும் கற்பிக்கப்படவில்லை. அதே நிலையில் இருந்தார் அர்ஜுன், குருஷேத்திர போர் களத்தில் அர்ஜுன். அங்கே போர் நடக்கிறது. அது மேன்மையான இந்தியாவின் சரித்திரம், மஹாபாரதம். அது மஹாபாரத என்று அழைக்கப்படுகிறது. இந்த பகவத்-கீதை மஹாபாரதத்தின் ஒரு பகுதி. மஹாபாரத என்றால் மேன்மையான இந்தியா அல்லது மேன்மையான கோள்கிரகம். அதன்படி அந்த மேன்மையான இந்தியாவின் சரித்திரத்தில், இரண்டு சிற்றப்பன்-பெரியப்பன் சகோதரர்களுக்குள் அங்கே போர் நடந்தது. பாண்டவர்களும் குரு வம்சமும். பாண்டவர்களும் குரு வம்சமும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், குரு வம்சம் என்று அறியப்பட்டது. மேலும் அந்த நேரத்தில், 5,000 வருட காலத்தில், குரு வம்சம் உலகம் முழுவதும் ஆட்சி செய்துக் கொண்டிருந்தது. இப்போது, பாரத-வர்ஷ என்று நமக்கு தெரிவது கூறாக்கப்பட்ட ஒரு சிறு பகுதியாகும். முற்காலத்தில் இந்த கோள் கிரகம் பாரத-வர்ஷ என்று அறியப்பட்டது. அதற்கு முன்பாக, பல ஆயிரம் வருடங்களிலிருந்து, இந்த கோள் கிரகம் இலாவ்ருத-வர்ஷ என்று அறியப்பட்டது. ஆனால் அங்கு ஒரு சிறந்த சக்கரவர்த்தி பரத என்ற பெயருடன் இருந்தார். அவர் பெயராக, இந்த கோள் கிரகம் பாரத-வர்ஷ என்று அறியப்பட்ட்து. ஆனால் படிப்படியாக, நாளடைவில், மக்கள் ஒரு தொகுதியிலிருந்து பிரிந்தனர். எவ்வாறு என்றால் நமக்கு இந்தியாவில் அனுபவம் உள்ளது, சொல்லப் போனால்20 வருடம், அல்லது 25 வருடங்களுக்கு முன், அங்கே பாகிஸ்தான் இருந்ததில்லை. ஏதோ ஒரு வகையில், அங்கே பாகிஸ்தானின் மற்றொரு பிரிவு ஏற்பட்டது. ஆனால் உண்மையிலேயே, நீண்ட காலங்களுக்கு முன் இந்த கோள் கிரகம் பிரிந்த பகுதிகலாக இல்லை. ஒரே கோள் கிரகம், மேலும் ஒரே மன்னன், அத்துடன் கலாச்சாரமும் ஒன்றாகவே இருந்தது. கலாச்சாரம் வேத கலாச்சாரமாக இருந்தது, மேலும் அரசர் ஒருவரே. நான் உங்களிடம் கூறியது போல் குரு வம்ச அரசர்கள், அவர்கள் உலகம் முழுவதும் ஆட்சி செய்தார்கள். அது முடியாட்சி. ஆகையால் ஒரே குடும்பத்தில் இருக்கும் சிற்றப்பன்-பெரியப்பன் சகோதரர்களுக்குள் அங்கே போர் நடந்தது. மேலும் அதுதான் இந்த பகவத்-கீதையின் கருப்பொருளாகும். பகவத்-கீதை போர்க்களத்தில் பேசப்பட்டது. போர்க்களத்தில், நமக்கு சிறிது நேரம் தான் இருந்தது. இரண்டு குழுவினரும் போர்க்களத்தில் சந்தித்த போது இந்த பகவத்-கீதை பேசப்பட்டது. மேலும் அர்ஜுன், எதிர் குழுவினரை பார்த்த பிறகு, அதாவது எதிர் குழுவினர், அவர்கள் அனைவரும் அவன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், அனைவரும் குடும்ப அங்கத்தினர், ஏனென்றால் இது சிற்றப்பன்-பெரியப்பன் சகோதரர்களுக்குள் நடக்கும் போர், ஆகையால் அவர் இரக்கப்பட தொடங்கினார். கருணையுடன், அவர் கிருஷ்ணரிடம், "என் அன்பு கிருஷ்ண, நான் போரிட விரும்பவில்லை. என் பெரியப்பா பிள்ளை சகோதரர்கள் ராஜ்யத்தை அனுபவிக்கட்டும். இந்த போரில் என்னால் அவர்களை கொல்ல முடியாது." இதுதான் பகவத்-கீதையின் சர்ச்சைக்குரிய பொருள். ஆனால் கிருஷ்ணர் அவரை தூண்டிணார் அதாவது "நீ ஒரு ஷத்ரிய. போர் புரிவது உன்னுடைய கடமை. உன் கடமையிலிருந்து நீ ஏன் விலகுகிராய்?"