TA/Prabhupada 0453 - இதை நம்புங்கள்! கிருஷ்ணரைவிட மேலான உன்னத அதிகாரி வேறு யாருமில்லை



Lecture on SB 7.9.5 -- Mayapur, February 25, 1977

பகவானுக்கு உணர்ச்சி, சிந்தனை, உணர்வு இல்லை என்று நினைக்காதிர்கள். இல்லை. அனைத்தும் அங்கு இருக்கிறது. அவரிடம் இந்த உணர்வு இல்லையெனில், நமக்கு எங்கிருந்து கிடைத்தது? ஏனென்றால் அனைத்தும் பகவானிடமிருந்து வருகிறது. ஜன்மாதி அஸ்ய யத: (ஸ்ரீ.பா. 1.1.1). அதாதோ ப்ரம்மா ஜிஞாசா. பிரமன் என்றால் என்ன? பிரமன் என்றால் அனைத்திற்கும் மூலமான அவதாரம். அதுதான் பிரமன். ப்ருஹத்வாத் புருஹனத்வாத். ஆகையால் இந்த உணர்வு அங்கு பகவானிடம் இல்லையென்றால், பிறகு எவ்வாறு அவர் பகவானாவார், இந்த உணர்வு? எவ்வாறு என்றால் ஒரு களங்கமற்ற குழந்தை வந்து நமக்கு மரியாதை கொடுத்தால், உடனடியாக நாம் உணர்வு பூர்வமாக இரக்கம் கொள்வோம்: "ஓ இதோ ஒரு அருமையான பிள்ளை." ஆகையால் பகவான் கிருஷ்ணர், நரசிம்ம-தேவ், அவரும் பரிப்லுத: ஆகிறார், உணர்வுபூர்வமான இரக்கம், சாதாரண இரக்கமல்ல, உணர்ச்சிவசமாக அதாவது "இந்த குழந்தை எவ்வளவு அப்பாவியாக இருக்கிறான்." அதனால் உணர்ச்சிவசத்துடன், உத்தாப்ய, உடனடியாக அவனை தூக்கினார்: "என் அன்புக் குழந்தையே, எழுந்திரு." மேலும் உடனடியாக அவர் கையை அவன் தலை மீது வைத்தார். உத்தாப்ய தச்-சீர்ஷ்ணி அததாத் கராம்புஜம். கராம்புஜா, கமலக் கைகள், கமல உள்ளங்கை. ஆகையால் இந்த உணர்வு அங்கு இருக்கிறது. மேலும் அவருக்கு வேண்டும் ..... ஏனென்றால் இந்த பையன் குழப்பமடைந்திருந்தான் அதாவது இவ்வளவு பெரிய ஸ்ரீமூர்த்தி தூணிலிருந்து வந்திருக்கிறது, மேலும் அவன் தந்தை, மாபெரும் அரக்கன், இறந்துவிட்டான், உண்மையிலேயே அவன் மனதளவில் குழப்பமாக இருக்கிறான். ஆகையினால் வித்ரஸ்த-தியாம் க்ருதாபயம்: "என் அன்பு மகனே, பயப்படாதே. அனைத்தும் சரியாகவே உள்ளது. நான் இருக்கிறேன், அதனால் இங்கு பயம் இல்லை. சாந்தப்படுத்திக்கொள். நான் உனக்கு பாதுகாப்பு அளிக்கிறேன்." ஆகையால் இது தான் பரிமாற்றம். அதனால் அதிகமாக தேவையில்லை ... அதனால் சிறந்த கல்விமானாக, வேதாந்தி மேலும் ..... வெறுமனே இந்த செயல்கள் தான் தேவை: நீங்கள் அப்பாவியாகுங்கள், முழுமுதற் கடவுளை ஏற்றுக் கொள்ளுங்கள், அவருடைய கமலப் பாதங்களில் சரணடையுங்கள் - அனைத்தும் நிறைவு பெற்றுவிடும். இதுதான் தேவைப்படுகிறது: எளிமை. கிருஷ்ணரின் மீது நம்பிக்கை. கிருஷ்ணர் கூறுவதை போல், மத்த: பரதரம் நான்யத் கிஞ்சித் அஸ்தி தனஞ்ஜய (ப. கீ. 7.7). இதை நம்புங்கள்! கிருஷ்ணரைவிட மேலான உன்னத அதிகாரி வேறு யாருமில்லை. மேலும் அவர் கூறுகிறார், மன்-மனா பவ மத்-பக்தோ மத்- யாஜீ மாம் நமஸ்குரு (ப. கீ. 18.65). இதுதான் அறிவுரை. அனைத்து அறிவுரைகளுக்கும் இதுதான் கருப்பொருள். கிருஷ்ணரை நம்புங்கள், பூரணத்துவம் பெற்றவர். இதோ இருக்கிறார் கிருஷ்ணர். இங்கு கிருஷ்ணர் இருக்கிறார் என்று நம்புங்கள். அப்பாவி குழந்தைகள் நம்புவார்கள், ஆனால் நம்முடையாய் முளை மிகவும் மந்தமானது, நாம் விசாரணை செய்வோம், "ஸ்ரீமூர்த்தி கல்லால் அல்லது பித்தளையால் அல்லது மரத்தால் செய்யப்பட்டதா?" ஏனென்றால் நாம் அப்பாவிகள் அல்ல. நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் இந்த ஸ்ரீமூர்த்தி ஏதோ பித்தளையால் செய்யப்பட்டது என்று. அது பித்தளையாக இருந்தாலும், பித்தளை பகவான் இல்லையா? பித்தளையும் பகவான் தான். ஏனென்றால் கிருஷ்ணர் கூறுகிறார், பூமிர் ஆபோ 'னலோ வாயு: கம் மனோ புத்திர் ஏவ ச அஹங்கார இதீயம் மே பின்னா ப்ரக்ருதிர் அஷ்டதா (ப. கீ. 7.4). அனைத்தும் கிருஷ்ணரே. கிருஷ்ணர் இல்லாமல் வாழ்க்கை இல்லை. ஆகையால் கிருஷ்ணர் ஏன் அவர் விருப்பப்படி தோன்றக் கூடாது? அவர் பித்தளையில் தோன்றலாம். அவர் கல்லில் தோன்றலாம். அவர் மரத்தில் தோன்றலாம். அவர் நகையில் தோன்றலாம். அவர் ஓவியத்தில் தோன்றலாம். அவர் விரும்பும் எந்த விதத்திலும்... அது தான் அனைத்து சக்தியும் நிறைந்தவர். ஆனால் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் அதாவது "கிருஷ்ணர் இங்கு இருக்கிறார்." இவ்வாறு எடுத்துக் கொள்ளாதீர்கள் அதாவது "கிருஷ்ணரும் ஸ்ரீமூர்த்தியும் வெவ்வேறு, மேலும் இங்கு நாம் பித்தளை ஸ்ரீமூர்த்தி வைத்திருக்கிறோம்." இல்லை. அத்வைதம் அச்சுதம் அனாதிம் ஆனந்த-ரூபம் (பிச. 5.33). அத்வைத. அவருக்கு பல விரிவாக்கம் உள்ளது, ஆனால் அவை அனைத்தும் ஒன்றே. ஆகையால் அதேபோல், அவருடைய பெயரில் பிரதிநிதிக்கப்படுகிறார். 'பின்னத்வான் நாம்-நாமினோ: (ஸிஸி. மத்திய 17.133). நீங்கள் கிருஷ்ணரின் தெய்வீகமான பெயரை உச்சாடனம் செய்யும் பொது, இந்த ஒலியின் அதிர்வு மேலும் கிருஷ்ணர் வேறு என்று நினைக்காதீர்கள். இல்லை. 'பின்னத்வான். நாம சிந்தாமணி: க்ரு 'ஷ்ணஷ். கிருஷ்ணர் சிந்தாமணி: ஆவார், அதேபோல், அவருடைய தெய்வீகமான பெயரும் சிந்தாமணியாகும். நாம சிந்தாமணி: க்ரு 'ஷ்ணஷ் சைதன்ய-ரஸ-விக்ரஹ:. சைதன்ய, உணர்ச்சி நிறைந்த, நாம சிந்தாமணி: க்ரு 'ஷ்ணஷ். நாம் பெயருடன் இணைந்துக் கொண்டால், அதை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும், அதாவது கிருஷ்ணர் முழுமையாக உங்கள் சேவையை உணர்கிறார். நீங்கள் வேண்டுகோள் விடுகிறீர்கள், "ஹே கிருஷ்ண! ஹே ராதாராணி! கருணையோடு உங்கள் சேவையில் என்னை ஈடுபடுத்துங்கள்." ஹரே கிருஷ்ண மந்திர என்றால், ஹரே கிருஷ்ண, "ஹே கிருஷ்ண, ஹே ராதாராணி, ஹே சக்தி, கருணையோடு உங்கள் சேவையில் என்னை ஈடுபடுத்துங்கள்." ஐய் நந்த-தனுஜ கிண்கரம் பதிதம் மாம் விஷமே பவாம்புதௌ. இது சைதன்ய மஹாபிரபுவின் கற்பித்தல். "ஓ என் பகவானே, நந்த-தனுஜ..." நீங்கள் அவருடைய பெயரையம், அவருடைய கிரியைகளையும், சில பகதர்களுடன் இணைக்கும் பொது, கிருஷ்ணர் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார். அவர் தனித்தன்மையுடையவர் அல்ல. கிருஷ்ணருக்கு பெயர் இல்லை, ஆனால் அவர் அவருடைய பக்தர்களுடன் காரியங்கள் மேற்கொள்ளும் போது, அவருக்கு பெயர் உள்ளது. எவ்வாறு என்றால் கிருஷ்ணர் நந்த மஹாராஜுடன் நடந்துக் கொள்ளும் போது, அந்த நந்த மஹாராஜாவின் மர காலணியை.... யசோதாமயி குழந்தை கிருஷ்ணனைக் கேட்டார் - அந்த சித்திரத்தை பார்த்தாயா - "உன் தந்தையின் காலணியை உன்னால் கொண்டு வர முடியுமா?" "ஆம்!" உடனடியாக தலையில் எடுத்து வந்தார். பார்த்தீர்களா? இதுதான் கிருஷ்ண. ஆகையால் நந்த மஹாராஜா மிகவும் சந்தோஷப்பட்டார்: "ஓ, உன் மகன் மிகவும் சிறந்தவன். இந்த சுமையை அவனால் தாங்க முடிகிறது." ஆக இதுதான் நடந்தது. ஆகையினால் சைதன்ய மஹாபிரபு கிருஷ்ணரை, ஐய் நந்த-தனுஜ என்று அழைக்கிறார். "ஓ கிருஷ்ண, நந்த மஹாராஜாவின் உடலில் இருந்து தோன்றியவரே...." எவ்வாறு என்றால் தந்தை உடலைக் கொடுப்பவர், விந்து, விந்து கொடுக்கும் தந்தை, அதேபோல், கிருஷ்ண, அவர் அனைத்திற்கும் மூலமானவராயினும், இருப்பினும், அவர் நந்த மஹாராஜாவின் விந்துக்களால் தோன்றினார். இதுதான் கிருஷ்ண-லீலா. ஐய் நந்த-தனுஜ கிண்கரம் பதிதம் மாம் விஷமே பவாம்புதௌ. (ஸிஸி. 20.32, சிஷ்டாஷ்டக 5). சைதன்ய மஹாபிரபு கிருஷ்ணரை "ஓ சர்வ சக்தி உள்ளவர்." என்று அழைத்தது இல்லை. இது தனித்தன்மை உள்ளது. அவர் கூறுகிறார், ஐய் நந்த-தனுஜ, வரையறுக்கப்பட்ட, "நந்த மஹாராஜாவின் மகன்." நந்த மஹாராஜாவின் மகன். அதனால் இதுதான் பக்தி. அவர் கட்டுப்பாடில்லாதவர். எவ்வாறு என்றால், கிருஷ்ண யசோதாமயியை கண்டு பயந்தார் என்று எண்ணியதும், குந்திதேவி வியப்படைந்தார். அந்த ஸ்லோக உங்களுக்கு தெரியுமா. ஆகையால் அவர் வியப்படைந்தார் ஏனென்றால் "கிருஷ்ண மிகவும் உன்னதமானவர் மேலும் அபாரமானவர் அதாவது அனைவரும் அவரிடம் பயந்தார்கள், ஆனால் அவர் யசோதாமயியை கண்டு பயந்தார்." ஆகையால் இது பக்தர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும், இல்லை அந்த ... நாத்திகர்கள் அல்லது பக்தர் அல்லாதவர்களுக்கு இதை புரிந்துக் கொள்ள முடியாது. ஆகையினால் கிருஷ்ணர் கூறுகிறார், பக்த்யா மாம் அபிஜானாதி (ப. கீ. 18.55). பக்தர்கள் மட்டுமே, வேறு யாருமல்ல. மற்றவர்கள், அவர்களுக்கு இந்த ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க புரிந்துக் கொள்ள அனுமதி இல்லை. நீங்கள் கிருஷ்ணரை புரிந்துக் கொள்ள வேண்டுமென்றால் அது பக்தியால் மட்டுமே முடியும். அறிவாளோ, யோகாவாளோ, கர்மா அல்லது ஞானத்தாளோ ஒன்றுமில்லை - உங்களுக்கு உதவி செய்ய ஒன்றுமில்லை. வெறுமனே ஒரு பக்தர். மேலும் எவ்வாறு ஒரு பக்தராவது? அது எவ்வளவு சுலபமானது? இங்கு பாருங்கள் பிரகலாத மஹாராஜ், அப்பாவி குழந்தை, வெறுமனே அவருடைய மரியாதையை அளிக்கிறார். மேலும் கிருஷ்ணரும் உங்களிடம் கேட்க்கிறார், மன்-மனா பவ மத்-பக்தோ மத்-யாஜீ மாம் நமஸ்குரு (ப. கீ. 18.65). நீங்கள் உளமார இந்த நான்கு உருப்படியை செய்தால் - எப்போதும் கிருஷ்ணரைப் பற்றியே நினைத்து... ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே, (பக்தர்கள் உச்சாடனத்தில் கலந்துக் கொள்கிறார்கள்) ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே. ஆக இது கிருஷ்ணரை நினைத்துக் கொண்டிருப்பது, மன்-மனா. மேலும் நீங்கள் இந்த ஹரே கிருஷ்ண மந்திர கொள்கையில், நீங்கள் முழுமையான பக்தராக இருந்தால் சார்ந்திருக்கலாம். முழுமையான பக்தராக இல்லாவிட்டால் அது மிகவும் கடினமாக இருக்கும். அது சோர்வாக இருக்கும். ஆனால் நாம் பயிற்சி செய்யலாம். அப்யாஸ-யோக-யுக்தேன (ப. கீ. 8.8).