TA/Prabhupada 0479 - உங்கள் உண்மைநிலையை உணரும்போதுதான் உண்மையான நடவடிக்கைகள் ஆரம்பமாகின்றன



Lecture -- Seattle, October 7, 1968

ஆகையால் இங்கே கிருஷ்ணர், யோக முறையை பற்றி பகவத் கீதையில் உரையாடுகிறார், மய் யாஸக்த-மனா:. அவர் எற்கனவே ஆறாம் அத்தியாயத்தில் யோக முறையை பற்றி பூர்த்தி செய்துவிட்டார். முதல் ஆறு அத்தியாயங்களில், இது விளக்கப்பட்டுள்ளது, ஜீவாத்மாக்களின் இயல்பான நிலை என்னவென்று. பகவத் கீதையில் பதினெட்டு அத்தியாயங்கள்இருக்கிறது. முதல் ஆறு அத்தியாயங்கள் ஜீவாத்மாக்களின் இயல்பான நிலையை பற்றி மட்டுமே விளக்குகிறது. மேலும் அதை புரிந்துக் கொண்ட பிறகு ... எவ்வாறென்றால் உங்களுடைய உண்மையான நிலையை புரிந்துக் கொண்ட பிறகு, உங்களுடைய நடவடிக்கைகள் உண்மையில் ஆரம்பமாகும். உங்களுடைய உண்மையான நிலை என்னவென்று உங்களுக்கு தெரியாவிட்டால்... ஒருவேளை அலுவலகத்தில், உங்கள் பணி என்னவென்று தீர்மானமாகவில்லை என்றால், எவ்விதமான பணியை நீங்கள் செயல் படுத்த வேண்டும், பிறகு உங்களால் எதையும் நேர்த்தியான முறையில் செய்ய இயலாது. இவர் தட்டெழுத்தர், இவர் எழுத்தர், இவர் சேவகன், இங்கு இது மேலும் அது. எனவே அவர்கள் தங்கள் பணியை செவ்வனே செய்கிறார்கள். ஆகையால் ஒருவர் ஜீவாத்மாக்களின் இயல்பான நிலை என்னவென்று புரிந்துக் கொள்ள வேண்டும். ஆக முதல் ஆறு அத்தியாயங்களில் அது விளக்கப்பட்டுள்ளது. அத்யேன ஷாஸ்தேன உபாசகஸ்ய ஜிவஸ்ய ஸ்வரூப-ப்ராப்தி சாதனம் ச ப்ரதானம் நிம் ப்ரொக்தம். பல்தேவ வித்யாபூஷன பகவத் கீதையை மிகவும் நயமாக வர்ணிக்கும் அதிகாரம் பெற்ற வர்ணனையாளர், அவர் கூறுகிறார் அதாவது, முதல் ஆறு அத்தியாயங்களில், ஜீவாத்மாக்களின் இயல்பான நிலை மிகவும் நயமாக விளக்கப்பட்டுள்ளது. மேலும் ஒருவர் எவ்வாறு தன் இயல்பான நிலையை புரிந்துகொள்வது, அதுவும் விளக்கப்பட்டுள்ளது. ஆக யோக முறை என்றால் தன்னுடைய இயல்பான நிலையை புரிந்துக் கொள்வது. யோக இந்திரிய-சம்யம:. நாம் நமது புலன்களின் செயல்களில் மும்முரமாக இருக்கின்றோம். பௌதிக வாழ்க்கை என்றால் புலன் செயல்களின் வேலையாகும். இந்த மொத்த உலகின் நடவடிக்கைளும், நீங்கள் வீதியில் சென்று நின்றால், அனைவரும் மிகவும் மும்முரமாக இருப்பதை காண்பிர்கள். கடைக்காரர் மும்முரமாக இருப்பார், வாகன ஓட்டுனர் மும்முரமாக இருப்பார். எல்லோரும் மும்முரமாக இருக்கிறார்கள் - மிகவும் மும்முரமாக இருக்கிறார்கள், இதனால் தொழிலில் பல விபத்துகள். அவர்கள் ஏன் இத்தனை மும்முரமாக இருக்கிறார்கள்? நீங்கள் இவர்களுடைய தொழிலை நுட்பமாக ஆராய்ந்தால், அந்த தொழில் புலன் நுகர்வாகும். அவ்வளவு தான். புலன்களை எவ்வாறு திருப்திப்படுத்துவது என்பதில் எல்லோரும் மும்முரமாக இருக்கிறார்கள். இதுதான் பௌதிகம். மேலும் யோக என்றால் புலன்களை கட்டுப்படுத்துவது, என்னுடைய ஆன்மீக நிலையையும், என் இயல்பான நிலையையும் புரிந்துக் கொள்வது. எவ்வாறென்றால் விளையாடுவதற்கு மட்டுமே இயல்பாக பழக்கப்பட்டிருக்கும் சிறுவன், படிப்பில் மனதை ஒரு நிலைப்படுத்த முடியாது, அவனுடைய எதிர்காலம் பற்றிய புரிதல், அல்லது தன்னை உயர்ந்த நிலைக்கு உயர்த்திக்கொள்ளவும் இயலாது. அதேபோல், நாம் குழந்தையைப் போல வாழ்க்கையின் எதிர்காலத்தைப் பற்றி அறியாமல், வெறுமனே புலன்களுடன் விளையாடிக் கொண்டிருக்கிறோம், அதுதான் பௌதிக வாழ்க்கை என்று கூறப்படுகிறது. பௌதிக வாழ்க்கைக்கும் ஆன்மீக வாழ்க்கைக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால், அதாவது ஒருவர் தன் புலன்களை திருப்தி செய்யும் தொழிலில் மட்டுமே ஈடுபட்டிருந்தால், அதுவே பௌதிக வாழ்க்கை என்று கூறப்படுகிறது. மேலும் அவ்வாறு இருக்கும் பல்லாயிரக்கணக்கான ஆன்மீகம் சாராத மனிதர்களில், யாராவது இதை புரிந்துக் கொள்ள முயற்சி செய்தால் ”நான் யார்? எதற்காக இங்கு வந்திருக்கிறேன்? நான் ஏன் வாழ்க்கையில் பல சோகமான நிலையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது? ஏதாவது தீர்வு உள்ளதா...?" இந்த கேள்விகள், எழுந்தால், பிறகு, நடைமுறையில், அவருடைய ஆன்மீக வாழ்க்கை ஆரம்பமாகிறது. மேலும் மனித பிறவி என்பது அதற்காகத்தான்.