TA/Prabhupada 0572 - என் தேவாலயத்தில் உன்னைப் பேச அனுமதிக்க மாட்டேன், என ஏன் சொல்லவேண்டும்



Press Interview -- December 30, 1968, Los Angeles


செய்தியாளர்: நீங்கள் நிஜமாகவே நினைக்கிறீர்களா; நடைமுறையில், உங்கள் இயக்கத்திற்கு அமெரிக்காவில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என?


பிரபுபாதர்: இதுவரை இதற்கு பெறும் வாய்ப்பு இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். [இடைவேளை...]


செய்தியாளர்: தங்கள் கற்பித்தல், மோசே அல்லது கர்த்தர் அல்லது வேறு எந்த பெரிய மத தலைவர்களிலிருந்து, வாஸ்தவத்தில் வேறுபட்டது அல்ல. மக்கள் பத்துக்கட்டளைகளின் பொருளைப் பின்பற்றினால், அது தானே இதுவும்.


பிரபுபாதர்: நாங்கள் மக்களை கேட்டுக்கொள்கிறோம்... "நீங்கள் உங்கள் மதத்தை விட்டு இந்த மதத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். எங்களிடம் வாருங்கள்." என்று நாங்கள் சொல்வதில்லை. ஆனால் குறைந்த பட்சம் உங்களுடைய கொள்கைகளையாவது பின்பற்றுங்கள். மேலும்... ஒரு மாணவனைப் போல் தான். படிப்பை முடித்த பிறகு... சில சமயங்களில் இந்தியாவில் பல்கலைக்கழகத்தில் எம். ஏ. தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் அவர்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகத்திற்கு மேல் படிப்பிற்காக வருகிறார்கள். ஏன் வருகிறான்? மேலும் தெளிவடைய தான். அதுபோலவே, நிங்கள் எந்த மதத்தின் சாத்திரத்தை வேணாலும் பின்பற்றலாம், ஆனால் இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தில் உங்களுக்கு மேலும் தெளிவு கிடைத்தால், மற்றும் நீங்கள் கடவுள் விஷயத்தில் மும்முரமாக இருந்தால், ஏன் அதை நீங்கள் ஏற்க்கக் கூடாது? "ஓ, நான் கிறித்துவன், நான் யூதன். என்னால் உன் சந்திப்பிற்கு வரமுடியாது." என்று சொல்வதற்கு என்ன காரணம்? "ஓ, என் தேவாலயத்தில் உன்னைப் பேச அனுமதிக்க மாட்டேன்." என ஏன் சொல்லவேண்டும்? நான் கடவுளைப் பற்றி பேசினால் உனக்கு அதில் என்ன ஆட்சேபம் இருக்கிறது?


செய்தியாளர்: எனக்கு நீங்கள் கூறுவதில் பரிபூரண சம்மதம். உங்களுக்கு தெரிந்திருக்கும் மற்றும் நானும் சமீபத்தில் அறிந்துள்ளேன், உதாரணமாக, ஒரு கத்தோலிக்கத் திருச்சபையைச் சார்ந்தவர் வேறொரு சபையின் காரணத்தால் இங்கு வருவதற்கு கூட அனுமதிக்கப்பட மாட்டார்கள். அது சமீபத்தில் மாறிவிட்டது.