TA/Prabhupada 0575 - அவர்கள் இருளிலும் அறியாமையிலும் வைக்கப்பட்டுள்ளார்கள்



Lecture on BG 2.19 -- London, August 25, 1973

ந ஜாயதே ந ம்ரியதே வா கதாசித். கதாசித் என்றால் எந்த நேரத்திலும், கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம், கதாசித். கடந்த காலத்தில், இது ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளது, கடந்த காலத்தில் நாம் இருந்தோம், வேறு விதமான உடலில் இருக்கலாம். தற்போது, நாம்​​ இருக்கிறோம், எதிர்காலத்திலும் நாம் இருப்போம், தொடர்ந்து இருப்போம், வேறு உடலில் இருக்கலாம். ஒருவேளை இல்லாமல் போகலாம். உண்மையில், ததா தேஹாந்தர-ப்ராப்தி: (பகவத் கீதை 2.13) ஏனெனில் இந்த உடலை விட்டுவிட்ட பிறகு, நாம் மற்றொரு உடலை ஏற்க வேண்டும். எனவே இது தொடர்கிறது. மேலும் அறியாமை, தன்னைப் பற்றிய அறிவு இல்லாமல், நாம் அறியாமையில் வைக்கப்படுகிறோம். உலகம் முழுவதும் கல்வி முறை என்று அழைக்கப்படுவதில், அத்தகைய கல்வி இல்லை. அவர்கள் இருளிலும் அறியாமையிலும் வைக்கப்படுகிறார்கள், இன்னும் குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் நிறைய பணம் செலவிடப்படுகிறது. அவர்களிடம் பணம், பெரிய பெரிய உயர்நிலைப் பள்ளிகள் கிடைத்துள்ளன, ஆனால் விளைவு என்ன? எல்லாம் முட்டாள்கள் மற்றும் அயோக்கியர்கள். அவ்வளவுதான். ஏனென்றால் அவர்களுக்குத் தெரியாது. அவர்களுக்குத் தான் யார் என்று தெரியாது. இந்த அறிவு இல்லாமல் ... அறிவு என்றால் தன்னை உணர்தல். "நான் இந்த உடல் அல்ல; நான் ஆத்மா." அது தான் அறிவு. மேலும் எப்படி சாப்பிட வேண்டும், எப்படி தூங்க வேண்டும், எப்படி பாதுகாக்க வேண்டும், பாலியல் வாழ்க்கையை எப்படி அனுபவிக்க வேண்டும் என்ற அறிவு, மேலும் இந்த விஷயத்தைப் பற்றிய புத்தகங்களின் தொகுதிகள், இவை அறிவு அல்ல. அவை பூனைகளுக்கும் நாய்களுக்கும் கூடத் தெரியும். பூனைகள் மற்றும் நாய்கள் ஒருபோதும் பிராய்டின் தத்துவத்தைப் படிப்பதில்லை, ஆனால் பாலியல் வாழ்க்கையை எவ்வாறு அனுபவிப்பது என்பது அவைகளுக்கு தெரியும். எனவே இந்த நாயின் தத்துவம் உங்களுக்கு உதவாது, "எனக்கு இந்த உடல் கிடைத்துள்ளது, உடல் பாலியல் வாழ்க்கையை எப்படி அனுபவிப்பது. "இது நாய் தத்துவம். ஒரு நாய் இந்த விஷயங்களை எல்லாம் அறிந்திருக்கிறது. உங்கள் தத்துவம் பாலியல் வாழ்க்கையிலிருந்து எவ்வாறு விலகி இருக்க வேண்டும் என்பதாக இருக்க வேண்டும். அது அறிவு. தபோ திவ்யம் (ஸ்ரீமத் பாகவதம் 5.5.1) தபஸ்யா. இந்த மனித வாழ்க்கை தவம் செய்வதற்காக உள்ளது. புலன்களைத் திருப்தி செய்வதிலிருந்து விலகி இருக்க வேண்டும். அது அறிவு. பாலியல் வாழ்க்கையை எப்படி அனுபவிப்பது அல்லது புலன்களை எப்படி திருப்தி செய்வது என்பது அல்ல. இது பூனைகள் மற்றும் நாய்களுக்கு எந்தக் கல்வியும் இல்லாமல், எந்தத் தத்துவமும் இல்லாமல் தெரிந்திருக்கிறது. ப்ரவ்ருத்திர் ஏஷா பூதானாம் நிவ்ருத்திஸ் து மஹா-பலா என்ற தத்துவம். ப்ரவ்ருத்தி, ஒவ்வொரு உயிரினமும் இதைப் பெற்றுள்ளது. ப்ரவ்ரதி என்றால் இயற்கைக் குணம் என்று பொருள். அது என்ன? புலனின்பம். லோகே வ்யவாயாமிஷ-மத்ய-ஸேவா நித்யா ஹி ஜந்தோர் (ஸ்ரீமத் பாகவதம் 11.5.11). ஜந்து: என்றால் உயிரினம். நித்ய, எப்பொழுதும், அவன் இயற்கைக் குணம் பெற்றுள்ளான். வ்யவாயாமிஷ-மத்ய-ஸேவா. வ்யவாய. வ்யவாய என்றால் பாலியல் வாழ்க்கை என்றும், ஆமிஷ என்றால் இறைச்சி சாப்பிடுவது என்றும் பொருள். வ்யவாய ஆமிஷ, மத்ய-ஸேவா மற்றும் போதை. அனைத்து உயிரினங்களுக்கு, இயற்கையான உள்ளுணர்வு உள்ளது, எறும்புகளிடம் கூட. இந்த இயற்கைக் குணங்கள் உள்ளது. எறும்புகள் போதையில் இருப்பதை மிகவும் விரும்புகின்றன. எனவே, அவை இனிப்பு, சர்க்கரையை கண்டுபிடிக்கின்றன. இனிப்பு என்பது போதை. ஒருவேளை உங்களுக்கு எல்லாம் தெரியும். மதுபானம் சர்க்கரையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. சர்க்கரை சல்பூரிக் அமிலத்துடன் புளிக்கப்படுகிறது, பின்னர் அது வடிகட்டப்படுகிறது. அதுதான் மது. எனவே அதிக இனிப்பு சாப்பிடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.