TA/Prabhupada 0587 - நாம் எல்லோருமே ஆன்மீகத்தில் வெகுப்பசியுடன் தவிக்கின்றோம்



Lecture on BG 2.20 -- Hyderabad, November 25, 1972

ஆக நான் இந்த மேலாடை என்று நினைத்தால் அது என் அறியாமை. இது தான் நடந்துக் கொண்டிருக்கிறது. மனிதநேயத்திற்கு சேவை என்றழைக்கப்படும் செயல்கள் வாஸ்தவத்தில் மேலாடையை துவைப்பது போல் தான். எடுத்துக்காட்டாக உனக்கு பசிக்கும்போது நான் உன் மேலாடையை நன்றாக துவைத்து தந்தால் நீ திருப்தி அடைவாயா? இல்லை. அது சாத்தியம் அல்ல. ஆக நாம் எல்லோருமே ஆன்மீகத்தில் வெகுப்பசியுடன் தவிக்கின்றோம். மேலாடையை துவைத்து இவர்கள் என்ன செய்வார்கள்? இதனால் அமைதி அடையமுடியாது. இந்த மனித நேரத்திற்கு சேவை என்றழைக்கப்படும் செயல்கள் வாஸ்தவத்தில் துவைப்பது போல் தான். இந்த வாஸாம்ஸி-ஜீர்ணானி. அவ்வளவு தான். மற்றும் மரணம் என்பது சிறப்பாக விவரிக்கப் பட்டிருக்கிறது. நம் ஆடை மிகவும் பழையது ஆகி விட்டால் நாம் அதை மாற்றி விடுகிறோம். அதுபோலவே, பிறப்பும் இறப்பும் ஆடையை மாற்றுவது போல் தான். இது மிகவும் எளிதாக விளக்கப் பட்டிருக்கிறது.


வாஸாம்ஸி-ஜீர்ணானி யதா விஹாய (BG 2.22)


ஜீர்ணானி, பழைய ஆடை, நாம் அதை தூர எறிந்துவிடுகிறோம் மற்றும் வேறொரு புதிய ஆடையை ஏற்றுக்கொள்கிறோம். அதுபோலவே, வாஸாம்ஸி-ஜீர்ணானி யதா விஹாய நவானி க்ரஹணாதி (BG 2.22). ஒரு புத்தகம் புதிய ஆடை. அதுபோலவே, நான் ஒரு கிழவன். ஆக நான் முக்தி அடையாமல் இருந்தால், இந்த ஜட உலகில் நிகழ்த்த எனக்கு பல ஆசைதள் இருந்தால், பிறகு நான் மற்றொரு உடலை ஏற்றுக்கொண்டாக வேண்டும். ஆனால் உன்னிடம் வேறு என்த திட்டமும், மேற்கொண்டு என்த ஆசையும் இல்லாவிட்டால், நிஷ்கின்சன... அதை நிஷ்கின்சன என்பார்கள். நிஷ்கின்சனஸ்ய பகவத் பஜனோன்முகஸ்ய. சைதன்ய மகாபிரபு கூறுகிறார், நிஷ்கின்சன. ஒருவன் முழுமையாக விடுபடவேண்டும், இந்த ஜட உலகத்திற்காக முழுமையாக பற்றற்றவனாக இருக்கவேண்டும். ஒருவர் இதனால் அருவருப்பை உணரவேண்டும். அப்பொழுது தான் ஆன்மீக உலகிற்கு செல்ல வாய்ப்பு இருக்கும்.