TA/Prabhupada 0593 - இயன்ற அளவு விரைவாக கிருஷ்ண பிரக்ஞைக்குள் வாருங்கள்- மகிழ்ச்சியை பெறுவீர்கள்



Lecture on BG 2.20 -- Hyderabad, November 25, 1972

பிரபுபாதர்: எனவே நாம் அனைவரும் கிருஷ்ணரின் பகுதி, மமைவாம்சோ ஜீவ-பூதா (பகவத் கீதை 15.7) எனவே நம் உறவு நித்தியமானது. இப்போது நாம் மறந்துவிட்டோம் நான் கிருஷ்ணரருக்கு சொந்தமானவன் அல்ல; நான் அமெரிக்காவிற்கு சொந்தமானவன் " என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். "நான் இந்தியாவிற்கு சொந்தமானவன் இது நம் மாயை. எனவே சரியான முறையில் ... செவியுறுவது சரியான முறை அவரது காது வழியாக அணுகுங்கள்: "நீங்கள் அமெரிக்கர் அல்ல, நீங்கள் கிருஷ்ணருக்குச் சொந்தமானவர் , நீங்கள் அமெரிக்கர் அல்ல." நீங்கள் இந்தியர் அல்ல. நீங்கள் கிருஷ்ணருக்குச் சொந்தமானவர்தான். "இந்த வழியில், செவியுறுதல், அவர் இவ்வாறு கூறலாம்:" ஓ, ஆமாம், நான் கிருஷ்ணருக்கு சொந்தம் தான். "இதுதான் வழி நாம் தொடர்ந்து சொல்ல வேண்டும்: "நீங்கள் அமெரிக்கர் அல்ல, நீங்கள் இந்தியர் அல்ல, நீங்கள் ரஷ்யர் அல்ல. நீங்கள் கிருஷ்ணருக்கு சொந்தம். நீங்கள் கிருஷ்ணருக்கு சொந்தம்." பின்னர் ஒவ்வொரு மந்திரத்திற்கும் மதிப்பு கிடைக்கிறது; பின்னர் அவர் வருகிறார், "ஓ, ஆமாம், நான் கிருஷ்ணருக்கு சொந்தம்" பிரம்ம-பூத பிரசா ... "நான் ஏன் ரஷ்யன் மற்றும் அமெரிக்கன், இது அது என்று நினைத்தேன்?" பிரம்ம- பூத - பிரசன்னாத்மா ந க்ஷோசதி ந கங்க்ஷதி (பகவத் கீதை 18.54) அவர் அந்த நிலைக்கு வந்தவுடனேயே அவருக்கு புலம்பல் இல்லை இங்கே, அமெரிக்கன் அல்லது இந்திய அல்லது ரஷ்யனாக, நமக்கு இரண்டு விஷயங்கள் கிடைத்துள்ளன: புலம்பல் மற்றும் ஏக்கம் எல்லாரும் தம்மிடம் இல்லாததை பெரிதும் விரும்புகிறார்கள், : "நான் இதை வைத்திருக்க வேண்டும்." அவர் வைத்திருப்பதை இழந்தால், அவர் புலம்புகிறார்: "ஓ, நான் இழந்துவிட்டேன்." எனவே இந்த இரண்டு விஷயங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. நீங்கள் கிருஷ்ண உணர்வுக்கு வராத வரை உங்கள், இந்த இரண்டு வேலைகளும் தொடரும், புலம்புவதும், ஏக்கப்படுவதும் தொடரும். நீங்கள் கிருஷ்ண உணர்வுக்கு வந்தவுடன், நீங்கள் மகிழ்ச்சியடைகிறீர்கள். புலம்புவதற்கு எந்த காரணமும் இல்லை. ஏக்கப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை. எல்லாம் நிறைவு பெறுகிறது . கிருஷ்ணர் முழுமையானவர். எனவே அவர் சுதந்திரமாகிறார். அது பிரம்ம-பூத நிலை. எனவே இது செவியுறுவதனால் விழிப்படையும். எனவே வேத மந்திரத்தை ஷ்ருதி என்று அழைக்கிறார்கள். இந்த விழிப்புணர்வை ஒருவர் காது வழியாகப் பெற வேண்டும். ஷ்ரவனம் கீர்த்தனம் விஷ்னோ (ஸ்ரீமத் பாகவதம் 7.5.23) எப்போதும் ஒருவர் விஷ்ணுவைப் பற்றி கேட்க வேண்டும், பாட வேண்டும். ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே / ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே. பின்னர் கேதோ-தர்பன-மார்ஜனம் (சைதன்ய சரிதாம்ருதம் அந்திய லீலை 20.12), அனைத்தும் சுத்தப்படுத்தப்படும், "நான் கிருஷ்ணரின் நித்திய சேவகன்" என்பதை அவர் புரிந்துகொள்வார்.

பிரபுபாதா: நீங்கள் வைணவராக மாறும்போது, ​​பிராமணத்துவம் அதில் சேர்ந்துள்ளது. பொது செயல்முறை என்னவென்றால், ஒருவர் சத்வ-குண நிலைக்கு வராவிட்டால் கிருஷ்ண உணர்வு என்ன என்பதை அவரால் புரிந்து கொள்ள முடியாது. அதுதான் பொது விதி. ஆனால் இந்த கிருஷ்ணர் , பக்தி சேவை, கிருஷ்ணர் பக்தி இயக்கம், மிகவும் அருமையானது கிருஷ்ணர் பற்றி செவியுறுவதன் மூலம், நீங்கள் உடனடியாக பிராமண நிலைக்கு வருவீர்கள் நஷ்ட-ப்ராயேஷு அபத்ரேஷு நித்யம் பாகவத-ஸேவயா (ஸ்ரீமத் பாகவதம் 1.2.18) அபத்ர அபத்ர என்பது இயற்கையின் இந்த மூன்று குணங்கள். பிராமண குணங்கள் கூட. சூத்ர தரம், வைசிய தரம், அல்லது சத்திரிய தரம், அல்லது பிராமண தரம். அவர்கள் அனைவரும் அபத்ராக்கள். ஏனெனில் பிராமண தரத்தில், மீண்டும் அதே அடையாளம் வருகிறது. "ஓ, நான் பிராமணன் பிறப்பு இல்லாமல் யாரும் பிராமணனாக மாற முடியாது. நான் சிறந்தவன். நான் பிராமணன். " இந்த தவறான கௌரவம் வருகிறது. எனவே அவர் பிணைக்கப்படுகிறார். பிராமண குணங்களில் கூட ஆனால் அவர் ஆன்மீக தளத்திற்கு வரும்போது, ​​உண்மையில், சைதன்யா மஹாபிரபு சொன்னது போல "நான் பிராமணன் அல்ல, நான் சன்யாசி அல்ல, நான் க்ருஹஸ்தன் இல்லை, நான் பிரம்மசாரி இல்லை," இல்லை, இல்லை, இல்லை ... இந்த எட்டு கொள்கைகள், வர்ணாசிரமம் , அவர் மறுக்கிறார் பிறகு நீங்கள் என்ன? கோபி-பர்து பாத-கமலயோர் தாச -தாசனுதாசா (சைதன்ய சரிதாம்ருதம் மத்ய லீலை 13.80) "நான் கிருஷ்ணரின் சேவகனின் சேவகன்." இதுவே தன்னையுணர்தல்.