TA/Prabhupada 0643 - கிருஷ்ணப் பிரக்ஞையில் முன்னேறியவர் அனைவரும் கிருஷ்ணருக்காக பணியாற்றவேண்டும்



Lecture on BG 6.1 -- Los Angeles, February 13, 1969

பிரபுபாதர்: என்னது?

பக்தர்: பிரபுபாத, அது பகவத் கீதையில் எழுதப்பட்டுள்ளது, நாம் இப்போதுதான் படித்ததில், கிருஷ்ணர் நமக்கு வழங்குவார் என்கிற நம்பிக்கை கொள்வதை பற்றி. மேலும் தொடர்ந்து கீதையில் சொல்லப்பட்டுள்ளது அதாவது, தனக்கு தானே உதவி செய்பவர்களுக்கு பகவான் உதவி செய்வார் என்று.

பிரபுபாதர்: ஆம்.

பக்தர்: இப்போது நாம் எவ்வாறு தீர்மானிப்பது நாம் என்ன செய்ய...?

பிரபுபாதர்: தனக்கு தானே உதவி செய்வதென்றால் நீங்கள் கிருஷ்ணரிடம் சரணடைவது; அதுதான் தனக்கு தானே உதவி செய்வது. மேலும் நீங்கள் , "ஓ என்னால் என்னை பாதுகாத்து கொள்ள முடியும்," என்று நினைத்தால் அப்போது நீங்கள் உங்களுக்கு உதவவில்லை. இந்த விரலைப் போல், அது ஆரோக்கியமாக இருக்கும் வரை, செயல்படும், அங்கு சில பிரச்சினை இருந்தால், நான் இதற்கு ஆயிரக்கணக்கில் பணம் செலவழிக்கலாம். ஆனால் இந்த விரல் என் உடலிலிருந்து வெட்டி எடுக்கப்பட்டால், இந்த விரலை உங்கள் கால்களால் நசுக்கினால், நான் அதை பற்றி அக்கறை கொள்ள மாட்டேன். அதேபோல், தனக்கு தானே உதவி செய்வது என்பது நம்மை சரியான நிலையில் வைப்பது, கிருஷ்ணரின் அங்க உறுப்புகளாக. அதுதான் உண்மையான உதவி. இல்லையெனில் எவ்வாறு நீங்கள் உதவ முடியும்? விரல் தன்னை கையின் சரியான நிலையில் வைத்து தனக்கு தானே உதவும், மேலும் உடல் முழுவதிற்கும் உழைக்கும். அதுதான் சரியான நிலை. விரல் நினைத்தால் அதாவது, "நான் இந்த உடலிலிருந்து தனிப்பட்டு மேலும் எனக்கு நானே உதவி கொள்கிறேன்," அது இறந்துவிடும். ஆகையால் நீங்கள் இவ்வாறு நினைத்தவுடன், அதாவது "நான் சுதந்திரமாக வாழ்வேன், கிருஷ்ணர் மேல் அக்கறை கொள்ளாமல்," அதுதான் என்னுடைய இறப்பு, நான் கிருஷ்ணரின் அங்க உறுப்புகளாக உடனடியாக என்னை ஈடுபடுத்திக் கொண்டால், அதுதான் என்னுடைய வாழ்க்கை.

ஆகையால் தனக்கு தானே உதவுதல் என்றால் ஒருவருடைய நிலையை அறிந்துக் கொள்வதாகும் மேலும் அதை நோக்கி செயல் புரிவது. அதுதான் உதவி செய்தல். தன்னுடைய நிலை என்னவென்று தெரியாமல், ஒருவர் எவ்வாறு தனக்கு தானே உதவ முடியும்? அது சாத்தியமல்ல. என்ன?

பக்தர்: அவ்வாறெனில் நாம் எப்போதும் வேற்றுமையாக செயல்பட முயற்சிக்க வேண்டும் மேலும் எப்போதும் கிருஷ்ணருக்கு சேவை செய்ய முயற்ச்சிக்க வேண்டும் மேலும் கிருஷ்ணர் நமக்கு சேவை செய்யும்படி அல்ல. எப்போதும் கிருஷ்ணருக்கு சேவை செய்ய முயற்சிக்க வேண்டும் என்னும் உணர்வு வேண்டும், நாம் இதை செய்தால் கிருஷ்ணர் நமக்கு கொடுப்பார் என்று கூறக்கூடாது, கிருஷ்ணர் நமக்கு உதவி செய்யவார்.

பிரபுபாதர்: நீங்கள் கிருஷ்ணருக்கு சேவை செய்கிறீர்கள், அவ்வாறென்றால் நீங்கள் செய்துக் கொண்டிருக்கிறீர்கள. சேவை செய்தல் என்றால் நீங்கள் செய்துக் கொண்டிருக்கிறீர்கள். சேவை செய்தல் என்பதற்கு உங்கள் பொருள் என்ன? உண்மையில் நீங்கள் யாருக்காவது உபசரித்தால், நீங்கள் ஏதோ செய்துக் கொண்டிருக்கிறீர்கள் அல்லவா? நீங்கள் கிருஷ்ணருக்கு சேவை செய்வதில் ஈடுபட்டிருக்கிறீர்கள் எப்படி? நீங்கள் கிருஷ்ண உணர்வை பற்றி சமயப் போதனை செய்யப் போகிறீர்கள், நீங்கள் சமைக்கிறீர்கள், சுத்தம் செய்கிறீர்கள், இன்னும் பல, ஏதவாது செய்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆகையால் கிருஷ்ணருக்கு உதவுதல் என்றால் செய்துக் கொண்டிருப்பது. கிருஷ்ணருக்கு உதவி செய்தல் என்றால் கெட்டியாக உட்கார்ந்துக் கொண்டிருப்பது என்று பொருள்படாது. அது கிருஷ்ண உணர்வு கிரியைகள். உழைப்பால் ஏதாகிலும் சொத்து இருந்தால், அதை கிருஷ்ணருக்காக பயன்படுத்துங்கள். அதுதான் பக்தி. இப்போது நம்மிடம் இருக்கிறது, என்ன சொத்து நம்மிடம் உள்ளது? நம்மிடம் இந்த மனம் இருக்கிறது. சரி, கிருஷ்ணரை நினையுங்கள். நமக்கு இந்த கைகள் இருக்கிறது - கோயிலை கழுவுங்கள் அல்லது கிருஷ்ணருக்கு சமையல் செய்யுங்கள். நமக்கு இந்த கால்கள் இருக்கிறது - கிருஷ்ணரின் கோயிலுக்கு செல்லுங்கள். நமக்கு இந்த மூக்கு இருக்கிறது - ஓ, கிருஷ்ணருக்கு அளித்த பூக்களை நுகருங்கள். ஆகையால் நீங்கள் ஈடுபடலாம். ஆகையால் கிருஷ்ண உணர்வில் ஈடுபடுவதென்றால் வேலை செய்வது, செயலாற்றல். அர்ஜுன், அவர் செயல்புரிய மறுத்தார். மேலும் கிருஷ்ணர் அவரை செயலாற்ற தூண்டுகிறார். முழு பகவத் கீதையும் இதுதான். கிருஷ்ண உணர்வு என்றால் வேலை இல்லை என்பதல்ல. நீங்கள் கிருஷ்ண உணர்வில் ஈடுபடுதல் என்றால் வேலை செய்வது - கிருஷ்ணருக்கு. கிருஷ்ணர் கூறவில்லை, நிச்சயமாக இந்த அத்தியாயத்தில் கிருஷ்ணர் வேறு கூறுகிறார்.... அவர் கூறவில்லை அர்ஜுன, "என் அன்புத் தோழா அர்ஜுன, நீ இந்த உலகைப் பற்றி அக்கறை கொள்ளாதே. கீழே உட்கார்ந்து, மேலும் என் என்னைப் பற்றி தியானம் செய்." நீங்கள் பகவத் கீதையில் பார்த்திருக்கிறீர்களா? இந்த தியானம் என்றால் முட்டாள்தனமான அனைத்து செயல்களையும் நிறுத்துதல், கெட்டியாக கீழே உட்காருவது. ஆனால் கிருஷ்ண உணர்வில் முன்னேற்றமடைந்தவர்கள், அவர்கள் கிருஷ்ணருக்காக வேலை செய்ய வேண்டும். ஒரு குழந்தையைப் போல். வெறுமனே வீட்டில் தொந்தரவு செய்வது. தாய் கூறுகிறாள், "என் அன்பு குழந்தாய், இங்கு உட்கார்." ஆனால் அவனால் நன்கு வேலை செய்ய முடியும் என்றால், "ஓ ஆம்," தாய் கேட்பாள், "என் அன்பு மகனே, நீ இதை செய்ய வேண்டும், நீ அதை செய்ய வேண்டும்." ஆகையால் முட்டாள்தனத்திற்காக கெட்டியாக கீழே உட்கார்ந்திருப்பது விவேகமுள்ளவர்களுக்கு அல்ல. அந்த முட்டாள்தனத்திற்கு, அதிக நேரம் கீழே உட்கார்ந்திருந்தால், குறைந்தது அவன் எந்த முட்டாள்தனமும் செய்யாமல் இருப்பான், அவ்வளவு தான். முட்டாள்தனத்திற்கு மறுப்பு. அது நேர்மறையானதல்ல. இதோ உள்ளது நேர்மறையான செயல்கள்.

ஆகையால் நேர்மறையற்றவை வாழ்க்கையல்ல. நேர்மையான வாழ்க்கையே வாழ்க்கை. "இதைச் செய்யாதே," வாழ்க்கையல்ல. "இதைச் செய்," இதுதான் வாழ்க்கை. ஆனால் சரியாக செய்யும் பொருட்டு, அங்கே சில காரியங்கள் உள்ளது "செய்யாதே." என்று. "செய்யாதே" என்பது வாழ்க்கையல்ல. "செய்" என்பது தான் வாழ்க்கை. பகவத் கீதை முழுவதும் "செய்." தான் "எனக்காக போரிடு." "செய்யாதே" என்று எதுவுமில்லை. அர்ஜுன் விரும்பினார், "என்னை தூண்டாதே" என்று. மேலும் கிருஷ்ணர் அதை விரும்பவில்லை. "நீ ஆரியன் அல்லதவன் போல் பேசுகிறாய்." குதஸ் த்வா கஷ்மலம் இதம். அனார்ய-ஜுஷ்டம் (ப.கீ. 2.2). "இது போன்ற வார்த்தைகள் ஆரியன் அல்லாதவனால் பேசப்படுவது." அவன் ஆரியன் அல்லாதவனாக குற்றம் சாட்டப்பட்டான். அனார்ய. ஆகையால் கிருஷ்ண உணர்வு என்றால் சோம்பேறியாக உடகார்ந்திருப்பது என்று அர்த்தமல்ல, இல்லை. கிருஷ்ண லீலை முழுமையாக நம்மிடம் உள்ளது கிரியைகள் நிறைந்துள்ளது. நீங்கள் ஆன்மீக உலகிற்கு சென்றால் கிருஷ்ணர் எப்போதும் நடனம் ஆடிக் கொண்டிருப்பார். நீங்கள் இருபத்திநான்கு மணி நேரமும் அங்கு நடனம் ஆடி மேலும் அங்கு உண்ண வேண்டும். எங்கு உட்காருவது? கீழே உட்காருவது என்னும் கேள்விக்கே இடமில்லை. கோபியர் தியானம் செய்வதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கீழே உட்கார்ந்து. (சிரிப்பொலி) கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பூமியில், கிருஷ்ணர்... பகவான் சைதன்ய மஹாபிரபு? அவர் செய்தார், அவர் என்ன செய்தார், நடனம், "ஹரே கிருஷ்ண." பார்த்தீர்களா? நீங்கள் பாருங்கள், ஆன்மா, நீங்கள் ஆன்மீக ஆன்மா, உங்களால் எவ்வாறு அமைதியாக இருக்க முடியும்? அது சாத்தியமல்ல. அர்ஜுன் மறுத்தார், எப்போது... இந்த அத்தியாயத்தில் நீங்கள் அறியலாம் அர்ஜுன் சிபாரிசு செய்யப்பட்ட போது, "என் அன்பு அர்ஜுன, நீ தியானம் செய்." அவர் உடனடியாக மறுத்தார். "என் அன்பு கிருஷ்ண, எனக்கு அது சாத்தியமல்ல. எனக்கு அது சாத்தியமல்ல." அதுதான் உண்மையான விடயம். அவருக்கு அது எப்படி சாத்தியமாகும்? அவர் ஒரு இல்லறத்தார், அவருக்கு இராஜ்யம் வேண்டும், அவர் நாட்டை ஆட்சி செய்ய விரும்புகிறார். எப்படி, தியானம் செய்வதற்கு அவருக்கு ஏது நேரம்? அவர் முழுமையாக மறுத்தார். "என் அன்பு கிருஷ்ண, எனக்கு அது சாத்தியமல்ல." அவர் கூறினார் அதாவது மனத்தை: வாயோர் இவ சூதுஷ்கரம். "அது காற்றைக் கட்டுப்படுத்துவதைப் போன்று கடினமானது." அது உண்மையே. நீங்கள் உங்கள் மனத்தை கிருஷ்ணர் மீது ஈடுபடுத்த வேண்டும். பிறகு அது கட்டுப்படுத்தப்படும். இல்லையெனில், செயற்கை முறையில் அதை கட்டுப்படுத்த முடியாது. அது சாத்தியமல்ல. அர்ஜுன் கூறுகிறார், மற்றவர்களைப் பற்றி என்ன சொல்வது. அர்ஜுன், அர்ஜுன் யார்? நேரில் கிருஷ்ணருடன் உரையாடுகிறார். அவர் சாதாரண மனிதர் என்று நீங்கள் நினைக்கிறிர்களா? அவர் அது சாத்தியமல்ல என்று கூறுகிறார். வாயோர் இவ சூதுஷ்கரம் (ப.கீ. 6.34).

இந்த சிறந்த உதாரணம் அவர் கொடுக்கிறார். சஞ்சலம் ஹி மன: க்ருஷ்ண ப்ரமாதி பலவத் த்ருடம் (ப.கீ. 6.34). "என் அன்பு கிருஷ்ண, நீங்கள் என்னை என் மனத்தைக் கட்டுப்படுத்த கூறுகிறீர்கள். அது மிகவும் சக்தி வாய்ந்தது, மேலும் குழப்பம் உடையது, - "நான் நினைக்கிறன் மனத்தை கட்டுப்படுத்துவது காற்றைக் கட்டுப்படுத்துவதைப் போன்று கடினமானது." அங்கு பலத்த காற்று இருந்தால், உங்களால் அதை கட்டுப்படுத்த முடியுமா? ஆகையால் அவர் இந்த உதாரணம் கொடுக்கிறார். கிருஷ்ணரின் கமலப் பாதங்களில் உங்கள் மனத்தை ஈடுபடுத்தினால்தான் உங்கள் மனத்தை கட்டுப்படுத்த முடியும், அவ்வளவுதான். ஒரு முட்டாள்தனமும் உங்கள் மனத்தினுள் வராது, கிருஷ்ணர்தான் வருவார். அதுதான் தியானத்தின் பூரணத்துவம்.