TA/Prabhupada 0703 - நீ உன் மனதை முழுமையாக கிருஷ்ணரின் மேல் செலுத்தினால் அது சமாதி



Lecture on BG 6.46-47 -- Los Angeles, February 21, 1969


பக்தர்: பிரபுபாதரே, அஷ்டாங்க யோக முறையில் அடையும் முழுமை அதாவது ஸமாதிக்கும் பக்தி-யோகத்தில் அடையும் சமாதிக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா?


பிரபுபாதர்: ஆம். சமாதி என்றால் விஷ்ணுவின் மேல் முழுமையாக மனதை செலுத்துவது. அது தான் சமாதி. ஆக நீ உன் மனதை முழுமையாக கிருஷ்ணரின் மேல் செலுத்தினால் அது சமாதி. (இடைவேளை) ஏதாவது கேள்வி? அவன் கேட்கட்டும். சரி.


சிறுவன்: ஸ்வாமிஜி, அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அது சேதாரம் விளைக்கும் என்று நீங்கள் கூறியிருந்தீர்கள். ஆனால் அது பக்தர்களுக்கும் பொருந்துமா? அவர்கள் அளவுக்கு அதிகமாக பிரசாதத்தை சாப்பிட்டால் என்ன ஆகும்?


பிரபுபாதர்: நீ நிறைய உண்ண விரும்புகிறாயா?


சிறுவன்: நான் வெறும் எப்படி என்று அறிந்துகொள்ள...


பிரபுபாதர்: நீ அதிகமாக சாப்பிடுவதாக நினைக்கிறாயா? நீ நிறைய சாப்பிடலாம்.


சிறுவன்: நான் நினைத்தேன்...


பிரபுபாதர்: ஆம், நீ நிறைய சாப்பிடலாம். ஆம், மருத்துவ அறிவுரை என்னவென்றால், சாப்பிடுவதில் இரண்டு வகையான தவறுகள் உள்ளன. நிறைய சாப்பிடுவது மற்றும் குறைவாக சாப்பிடுவது. ஆக வயதானவனுக்கு குறைவாக சாப்பிடுவது எனும் தவறு, மிக சிறந்தது. மற்றும் சிறுவர்களுக்கு நிறைய சாப்பிடுவது எனும் தவறு, நல்லது. ஆக நீ நிறைய சாப்பிடலாம். என்னால் முடியாது.

சிறுவன்: தமாலும் விஷ்ணுஜனவும் எப்படி? (சிரிப்பு)


பிரபுபாதர்: அவன் சாப்பிடக்கூடாது. நீ சாப்பிடலாம். உனக்கு எவ்வளவு பிடிக்குமோ அவ்வளவு சாப்பிடலாம். இளவச கூப்பன். (சிரிப்பு)