TA/Prabhupada 0738 – கிருஷ்ணரும் பலராமரும் மீண்டும் சைதன்யர் மற்றும் நித்யானந்தராக அவதரித்தனர்



Lecture on CC Adi-lila 1.2 -- Mayapur, March 26, 1975

எனவே இங்கே க்ருஷ்ண சைதன்ய மற்றும் நித்யானந்தா, அவர்களின் அடையாளம் பகவான் கிருஷ்ணரும் பலராமரும் இப்போது, ​​கிருஷ்ணா அவதாரத்தில், இந்த இரண்டு சகோதரர்களும் இடையர்களாக இருந்தனர் மற்றும் கோபிக்களின் நண்பர்களாக, தாய் யசோதா மற்றும் நந்த மஹாராஜாவின் மகன்களாக இருந்தனர் அதுவே விரிந்தாவனத்தின் உண்மையான வாழ்க்கை. கிருஷ்ணரும் பலராமரும் கிராமத்தில் மாடு மேய்ப்பவராக இருந்தனர் அதுதான் கிருஷ்ணர் மற்றும் பலராமரின் ஆரம்பகால வரலாறு. அவர்கள் மதுராவுக்குச் சென்றபோது அவர்களின் மற்றொரு வேலை, அவர்கள் கம்சன் மற்றும் பிற மல்யுத்த வீரர்களைக் கொன்றனர், பின்னர், அவர்கள் துவாரகாவுக்குச் சென்றபோது, ​​அவர்கள் பல அரக்கர்களுடன் சண்டையிட வேண்டியிருந்தது. ஆனால் அவர்களின் குழந்தை பருவ வாழ்க்கையில், பதினாறாம் ஆண்டு வரை, அவர்கள் வ்ரிந்தாவனத்தில் இருந்தனர், மகிழ்ச்சியான வாழ்க்கை, அன்பு. அது பரித்ராணாய ஸாதூனாம் (ப.கீ 4.8). சாதுக்கள், பக்தர்கள், அவர்கள் எப்போதுமே கிருஷ்ணர், பலராமர் மற்றும் அவர்களது நண்பர்களைப் பார்க்க ஆர்வமாக உள்ளனர். பிரிவினை காரணமாக அவர்கள் எப்போதும் மிகவும் வேதனைப்படுகிறார்கள். அவர்களுக்கு வாழ்க்கையில் புத்துணர்ச்சி அளிக்க, கிருஷ்ணரும் பலராமரும் அவர்களின் குழந்தை பருவ நாட்களில் விரிந்தாவனத்தில் விளையாடினார்கள் விரிந்தாவனத்திற்கு வெளியே மதுராவிலிருந்து துவாரகா மற்றும் பிற இடங்கள் வரை அவர்களின் வேலை வினாஷாய ச துஷ்க்ருதாம் : கொல்வது எனவே அவர்களுக்கு இரண்டு வேலைகள் உள்ளன: ஒன்று பக்தர்களை சமாதானப்படுத்துவதற்கும், மற்றொன்று அரக்கர்களைக் கொல்வதற்கும். நிச்சயமாக, கிருஷ்ணரும் பலராமரும் அவர்கள் பூரணமான உண்மை. கொலை செய்வதற்கும் நேசிப்பதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அவர்கள் ... முழுமையானவர்கள். கொல்லப்பட்டவர்கள் இந்த பந்தங்களிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

இப்போது இதே இரண்டு சகோதரர்களும் மீண்டும் ,ஸ்ரீ க்ருஷ்ண சைதன்ய-நித்யானந்த. - ஆக இறங்கியுள்ளனர் ஸஹோதிதௌ: ஒரே நேரத்தில் அவர்கள் தோன்றினார்கள் ஒருவர் தோன்றி மற்றொருவர் தோன்றவில்லை என்பதல்ல. இல்லை. அவர்கள் இருவரும், ஸஹோதிதௌ. மேலும் அவர்கள் சூரியன் மற்றும் சந்திரனுடன் ஒப்பிடப்படுகின்றனர் சூரியன் மற்றும் சந்திரனின் வேலை இருளைக் போக்குவதாகும். பகல் நேரத்தில் சூரியன் உதயமாகும், இரவில் சந்திரன் உதயமாகும். ஆனால் இந்த சூரியன் மற்றும் சந்திரன், அற்புதமான சூரியன் மற்றும் சந்திரன், சித்ரௌ, , அவர்கள் ஒன்றாக தோன்றியுள்ளனர். ஆனால் அவர்களின் வேலை ஒன்றே, தமோ-நுதௌ. நாம் இருளில் இருப்பதால், இருளைப் போக்குவதே வேலை. இந்த பொருள் உலகில் வாழும் எவரும், இருளில் இருக்கிறார். இருள் என்றால் அறியாமை அவர்கள் பெரும்பாலும் விலங்குகள். இவ்வளவு நாகரீகம் அடைந்த மக்கள், இவ்வளவு உடையணிந்து பல்கலைக்கழக கல்வி பட்டங்கள் பெற்று அவர்கள் எப்படி விலங்குகள்  ? அவர்கள் ஏன் இருளில் இருக்கிறார்கள்? "ஆம், அவர்கள் இருளில் இருக்கிறார்கள். "என்ன ஆதாரம்?" அவர்களுக்கு கிருஷ்ணா பக்தி இல்லை என்பது தான் ஆதாரம். இதுவே சான்று. இது அவர்களின் இருள். யாரிடமாவது ஒவ்வொவொன்றாக கேளுங்கள், அவர்களுக்கு கிருஷ்ணர் பற்றி என்ன தெரியும் ? என்று கேளுங்கள் எல்லோரும் அறியாதவர்கள், இருட்டில் இருப்பவர்கள் எனவே அதுவே சான்று. இது எப்படி ஆதாரம்? இப்போது, ​​கிருஷ்ணர் கூறுகிறார். நாங்கள் சொல்லவில்லை; கிருஷ்ணர் கூறுகிறார். அவர் எப்படி கூறுகிறார்? ந மாம் துஷ்க்ருதினோ மூடா: ப்ரபத்யந்தே நராதமா:, மாயயாபஹ்ருத-ஜ்ஞானா (ப.கீ 7.15). அபஹ்ருத-ஜ்ஞானா என்றால் இருள் என்று பொருள். அவர்களுக்கு பல்கலைக்கழக பட்டங்கள் கிடைத்தாலும், அவர்கள் நாகரீகமானவர்கள் என்று அழைக்கப்பட்டாலும், பொருள் நாகரிகத்தில் மேம்பட்டிருந்தாலும் ஆனால் மாயயாபஹ்ருத-ஜ்ஞானா. அவர்களின் பட்டங்கள் ... அவர்கள் கிருஷ்ணரை முழுமையாக அறியாததால், கிருஷ்ணரே தனிப்பட்ட முறையில் கோரியும் கிருஷ்ணரிடம் சரணடைய வில்லை ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ. (ப.கீ 18.66). அவரே தனிப்பட்ட முறையில் சரணடைய கோருகிறார் இந்த பாதகர்களும் முட்டாள்களும் , இருளில் இருப்பதால் வாழ்க்கையின் குறிக்கோள் என்னவென்று அவர்களுக்குத் தெரியாது கிருஷ்ணர் தானே சரணடைய கோரும் அளவிற்கு மிகவும் கனிவானவர், ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ இதுதான் தத்துவம். எனவே இன்னும் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. ஏன்? நராதமா:. மனிதகுலத்தில் மிகத் தாழ்ந்தவர்கள் அவர்கள் எப்படி நராதமாவாகிவிட்டனர்? ​​துஷ்க்ருதின எப்போதும் பாவ வாழ்க்கையை வாழ்கிறார் பாவ வாழ்க்கை என்றால் என்ன? சட்டவிரோத பாலுறவு, இறைச்சி சாப்பிடுவது, போதை மற்றும் சூதாட்டம். அவர்கள் இந்த விஷயங்களுக்கு அடிமையாக இருப்பதால், அவர்கள் மனிதகுலத்தில் மிகத் தாழ்ந்தவர்கள் து³ஷ்க்ருʼதின மற்றும் நராத⁴ம கல்வி என்று அழைக்கப்படுவதன் மூலம் அவர்கள் எந்த அறிவைப் பெறுகிறார்களோ அது பொய்யான அறிவு. மாயயாபஹ்ருத-ஜ்ஞானா. இதுதான் நிலை