TA/Prabhupada 0744 – எவ்வளவு விரைவாக கிருஷ்ணரை காண்கிறீரோ, அவ்வளவு விரைவாய் நிரந்தர வாழ்வை பெறுவீர்கள்



Lecture on SB 7.9.53 -- Vrndavana, April 8, 1976

எனவே பிரஹ்லதா மஹாராஜா தனது தந்தையால் பல வழிகளில் தண்டிக்கப்பட்டார், ஆனால் அவரால் கிருஷ்ணரை மறக்க முடியவில்லை. பக்தி உறுதியானது. எனவே கிருஷ்ணர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார், ப்ரீதோ 'ஹம். ப்ரீதோ 'ஹம். ப்ரஹ்லாத பத்ரம் (ஸ்ரீ.பா 7.9.52) மாம் அப்ரீணத ஆயுஷ்மன் (ஸ்ரீ.பா 7.9.53) ஆயுஷ்மன், ஆசீர்வாதம்: "இப்போது நீங்கள் நீண்ட காலம் வாழலாம்," அல்லது "நித்தியமாக வாழலாம்," ஆயுஷ்மன். ஆயுஷ் என்றால் வாழ்நாள். ஒருவர் கிருஷ்ணரை அணுகும்போது ... மாம் உபேத்ய கௌந்தேய து:காலயம் அஷாஷ்வதம், நாப்னுவந்தி. து:காலயம் (ப.கீ 8.15) எவ்வளவு காலம் நமக்கு இந்த பௌதீக உடல், பௌதீக உலகம் கிடைத்திருக்கிறதோ..., இது து:காலயம் அஷாஷ்வதம். இது பரிதாபகரமான நிலையினால் நிறைந்துள்ளது, அதே நேரத்தில் நிரந்தரமானது அல்ல. பரிதாப நிலையை நாம் ஏற்றுக்கொண்டாலும் எல்லோரும் வாழ முயற்சிக்கிறார்கள். ஒரு வயதானவர் இறக்க விரும்புவதில்லை. அவர் தனது வாழ்க்கையைத் தொடர, அவர் மருத்துவரிடம் செல்கிறார், சில மருந்துகளை எடுத்துக்கொள்கிறார், ஆனால் அவர் வாழ அனுமதிக்கப்பட மாட்டார். அஷாஷ்வதம் நீங்கள் மிகவும் பணக்காரராக இருக்கலாம், நீங்கள் பல மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம், உங்கள் ஆயுளை நீட்டிக்க பல ஊசி பெறலாம், ஆனால் அது சாத்தியமில்லை. அது சாத்தியமில்லை ஆனால் நீங்கள் கிருஷ்ணரைப் பார்த்தவுடன், உங்கள் நித்திய ஜீவனைப் பெறுவீர்கள். நமக்குக் கிடைத்த நித்திய ஜீவன். நாம் நித்தியமானவர்கள். ந ஹன்யதே ஹன்யமானே ஷரீரே (ப.கீ 2.20). உடலின் அழிவுக்குப் பிறகு நாம் இறக்கவில்லை. நாம் மற்றொரு உடலைப் பெறுகிறோம். இது நோய். நீங்கள் கிருஷ்ணரைப் பார்க்கும்போது, ​​கிருஷ்ணரைப் புரிந்து கொள்ளும்போது பார்க்காமல் கூட, நீங்கள் கிருஷ்ணரை வெறுமனே புரிந்து கொண்டால், நீங்கள் நித்தியமாகி விடுவீர்கள்.

ஜன்ம கர்ம ச மே திவ்யம்
யோ ஜாநாதி தத்த்வத:
த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம
நைதி...
(ப.கீ 4.9)

கிருஷ்ணர் கூறுகிறார். கிருஷ்ணரைப் புரிந்து கொள்ள முயற்சிக்கவும். கிருஷ்ணரைப் புரிந்து கொள்வதும் கிருஷ்ணரைப் பார்ப்பது போல தான், ஏனென்றால் அவர் முழுமையானவர் - எந்த வித்தியாசமும் இல்லை. பௌதீக உலகில் நீங்கள் ஏதாவது பார்க்க முடியாத ஒன்றை புரிந்து கொள்கிறீர்கள், இது இருமை. ஆனால் முழுமையான உலகில், நீங்கள் கிருஷ்ணரைப் புரிந்து கொண்டால், நீங்கள் கிருஷ்ணரைக் கேட்டால், நீங்கள் கிருஷ்ணரைப் பார்த்தால், நீங்கள் கிருஷ்ணர் உடன் விளையாடுகிறீர்கள் என்றால், அவை அனைத்தும் ஒன்றாகும் இது முழுமையானது என்று அழைக்கப்படுகிறது. இருமை இல்லை.

எனவே நீங்கள் வெறுமனே கிருஷ்ணர், திவ்யம், தெய்வீக இயல்பு……. புரிந்து கொண்டால் ... கிருஷ்ணர் நம்மை போன்றவர் அல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள்: கிருஷ்ணருக்கு பௌதீக உடல் இல்லை கிருஷ்ணருக்கு கவலை இல்லை, கிருஷ்ணர் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறார்-சில விஷயங்கள், அது கிருஷ்ணரின் இயல்பு என்று நீங்கள் நம்பினால் உடனடியாக நீங்கள் வீட்டிற்கு, கடவுளிடம் மாற்றப்படுவதற்கு தகுதியுடையவர்கள். இது கிருஷ்ணா பக்தி, மிகவும் அருமை கிருஷ்ணர் தன்னை தானே விளக்குகிறார். நீங்கள் அவரிடம் உறுதியாகிவிட்டால், ஆம், கிருஷ்ணர் சொல்வது என்னவென்றால், சரி. " அர்ஜுனன் சொன்னது போலவே, சர்வம் எட்டம் ஸர்வம் ஏதம் ருதம் மன்யே யத் வதஸி கேஷவ: (ப.கீ 10.14) "நீங்கள் என்ன சொன்னாலும் நான் மொத்தமாக ஏற்றுக்கொள்கிறேன். குறை இல்லை, இல்லை ..." ஸர்வம் ஏதம் ருதம் மன்யே : "நீங்கள் என்ன சொன்னாலும் நான் நம்புகிறேன், நான் பின் பற்றுகிறேன், அது கிருஷ்ணர். கிருஷ்ணர் ஏதோ சொல்கிறார், எனக்கு ஏதோ புரிகிறது உங்கள் மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு நீங்கள் முயற்சிக்க வேண்டும்; அது ஒருபோதும் சாத்தியமில்லை. அவர் சொல்வது போல் நீங்கள் கிருஷ்ணரைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே நாம் பகவத்-கீதையை உண்மையுருவில் முன்வைக்கிறோம். அது உண்மையான புரிதல்.