TA/Prabhupada 0750 – நாம் ஏன் தாயாருக்கு மரியாதை செலுத்தவேண்டும்



Lecture on BG 9.10 -- Melbourne, April 26, 1976

ம்ரித்யு-ஸம்ஸார-வர்த்தமனி என்றால் என்னவென்று ஆராய்ச்சி செய்ய பள்ளி, கல்லூரி அல்லது நிறுவனம் இல்லை. நாம் வாழ்வை விசாரிக்க முடியாத அளவுக்கு வீழ்ந்துவிட்டோம். அது தன்னை தற்காத்து கொள்ள முடியாத விலங்கினை போல். விலங்கு இறைச்சி கூடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது, அனைவருக்கும் தெரியும். ஆனால் விலங்குக்கு "நான் ஏன் இறைச்சிக் கூடத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறேன்?" என்று விசாரிக்கும் திறன் இல்லை. அதற்கு திறன் இல்லை. இறைச்சிக் கூடத்திற்கு கொண்டு செல்லப்படுவதற்கு எதிராக எந்தவொரு எதிர்ப்பையும் செய்ய அதற்கு திறன் இல்லை. ம்ரித்யு-ஸம்ஸார-வர்த்தமனி. நாம் இறைச்சிக் கூடத்திற்குச் சென்று இருக்கிறோம். ஆனால் மனிதர், அவர் வலுக்கட்டாயமாக இறைச்சிக் கூடத்திற்கு அவரை வதம் செய்ய அழைத்துச் செல்லப்பட்டால், "இந்த மனிதன் என்னை ஏன் இறைச்சிக் கூடத்திற்கு அழைத்துச் செல்கிறான்?" என்று நாம் கூச்சலிடுவோம். ஆனால் விலங்குக்கு இல்லை ... அவைகள் உணர்ந்தாலும், அழுதாலும், கண்களில் கண்ணீர் இருக்கிறது, சில நேரங்களில் நாம் பார்த்திருக்கிறோம். "நாங்கள் எந்த தவறும் இல்லாமல் இறைச்சிக் கூடத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறோம், நாங்கள் எந்தத் தீங்கும் செய்யவில்லை" என்பது அந்த விலங்குகளுக்குத் தெரியும். பசுக்களை போல. அவைகள் புல்லை தின்று, அதற்கு ஈடாக உங்களுக்கு மிகவும் சத்தான உணவு, பால் தருகிறார்கள். ஆனால் நாமோ மிகவும் கொடூரமானவர்களாகவும், நன்றியற்றவர்களாகவும் இருக்கிறோம், நாம் மாடுகளை இறைச்சிக் கூடத்திற்கு அழைத்துச் செல்கிறோம்.

பசு, வேத நாகரிகத்தின் படி, தாயாக கருதப்படுகிறது. ஏன் அம்மா இல்லை? அவள் பால் தருகிறாள். அம்மா ஏன் மரியாதைக்குரியவர்? அம்மாவுக்கு நாம் ஏன் மரியாதை செலுத்துகிறோம்? ஏனென்றால் நீங்கள் உதவியற்றவராக இருக்கும்போது, ​​நம்மால் எதையும் சாப்பிட முடியாது, ஒரு தாய் மட்டுமே மார்பகத்திலிருந்து பால் ஊட்டுகிறாள். அம்மா என்றால் யார் உணவு வழங்குகிறாரோ அவர். எனவே மாடு உணவு வழங்கினால், பால் - பால் மிகவும் சத்தானதாகவும், வைட்டமின் நிறைந்ததாகவும் இருக்கிறது - அது அம்மாவுக்கு சமம். சாஸ்திரத்தில் வேத நாகரிகத்தின் படி ஏழு தாய்மார்கள் உள்ளனர். ஏழு தாய்மார்கள். ஒரு தாய் உண்மையான தாய், யாருடைய வயிற்றில் இருந்து நாம் பிறந்திருக்கிறோமோ. ஆதோ மாதா. இது நீங்கள் அறிந்த உண்மையான அம்மா. குரு-பத்னி, ஆன்மீக குரு அல்லது ஆசிரியரின் மனைவி, அவர் ஒரு தாய். ஆதோ மாதா, குரு பத்னி, ப்ராஹ்மணி. ஒரு பிராமணரின் மனைவி, அவளும் தாய். உண்மையில் ஒரு நாகரிக மனிதன் தனது சொந்த மனைவியைத் தவிர மற்ற எல்லா பெண்களையும் தாயாகவே பார்க்கிறான். ஏழு அல்ல, எட்டு - எல்லோரும்.

மாத்ரவத்
பர- த்ரவியெஷு லொஸ்த்ரவத்
( சாணக்யா-ஸ்லோகம் 10 )

ஒரு கற்றறிந்த அறிஞர் அவருக்கு எத்தனை பட்டங்கள் கிடைத்தது என்று அர்த்தமல்ல. ஒரு கற்றறிந்த நபர் என்றால் எல்லா பெண்களையும் தாயாகப் பார்க்கிறார். எனவே எல்லா பெண்களையும் தவிர, குறைந்தது ஏழு பேரை நாம் தாயாக ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆதோ மாதா குரு-பத்னி ப்ராஹ்மணி. ப்ராஹ்மணி. ராஜ-பத்னிகா, ராணியார். ராணியும் ஒரு தாய், ராஜ-பத்னிகா. தேனு, பசு. பசுவும் ஒரு தாய். மற்றும் தாத்ரி, தாதியரும் ஒரு தாய். தேனுர் தாத்ரி ததா ப்ரித்வி. பூமி, அவள் நாம் அனைவருக்கும் பல வகையான உணவுகளைத் தருகிறாள்.

எனவே இது தத்துவம். எனவே நாம் மிகவும் தயவுசெய்து, குறைந்தபட்சம் பசுக்களிடம் கனிவாக இருக்க வேண்டும். ஒருவர் இறைச்சி சாப்பிடுவதற்கு அடிமையாகிவிட்டால், ஆடு, செம்மறி, பன்றி, மீன் போன்ற வேறு சில சிறிய விலங்குகளை அவர் கொல்ல அனுமதிக்க படுவார். மற்ற விலங்குகள் உள்ளன. ஆனால் பகவத் கீதையில் குறிப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது,

கிருஷி கோ ரக்ஷ்யா வாணிஜ்யம்
வைஷ்ய-கர்மா ஸ்வபாவ- ஜம்
(ப கீ 18.44)

கோ ரக்ஷ்யா. இது சமூகத்தில் மிக முக்கியமான விஷயம், பசுக்களுக்கு பாதுகாப்பு அளிப்பது மற்றும் பால் பெறுவது. மற்றும் பால் தயாரிக்கும் வகைகள், இறுதியில் நெய், மிக முக்கியமான விஷயம். இந்தியாவில் இன்னும், ஒவ்வொரு வீட்டிற்கும் போதுமான அளவு நெய் தேவைப்படுகிறது. ஆனால், அவர்கள் இறைச்சி சாப்பிடுபவர்கள் அல்ல. இறைச்சி சாப்பிடுபவர்கள் நெய்யை பொறுத்துக்கொள்ள முடியாது.