TA/Prabhupada 0762 - மிகவும் கண்டிப்பாக இருக்க வேண்டும், ஆத்மார்த்தமாக ஜபியிங்கள்.



Lecture on SB 6.1.30 -- Honolulu, May 29, 1976

ப்ரபுபாதா: நம் ஹரே க்ருஷ்ணா இயக்கத்தின் நோக்கம் மநிதநுக்கு கல்வி அளிப்பதே. நீ நம்புகிராயா நம்பவில்லயா ஏந்பது முக்கியம் அல்ல. கடவுள் இருக்கிறார். அவர் தான் எல்லாவற்றுக்கும் அதிபதி. அவரே நேரில் வந்து போதிக்கிறார். போக்தாரம் யஞ்ய தபஸாம் ஸர்வ லோக மஹேஸ்வரம் ஸுஹ்ருதம் ஸர்வ புதாநாம் (கீதை 5.29) நானே அதிபதி. நானே எல்லாவற்றயும் அநுபவிப்பவன் மற்றும் நான் எல்லாருடைய நன்பன். இந்த கடிநமான லௌகிக வாழ்கையிலிருந்து விடுபடவேண்டுமானால், நானே உனக்கு சிறந்த நண்பன். ஸுஹ்ருதம் ஸர்வ புதானாம். ஏனெனில், அவர் நமக்கு தந்தையாவார். அஹம் பீஜ ப்ரத: (கீதை 14.4)... தந்தையைவிட சிறந்த நண்பனாக யாரால் இருக்க முடியும்? ஆம் ? "என் மகன் சந்தோஷமாக இருக்கவேண்டும்" இவ்வாரே ஓரு தந்தை எப்பொழுதும் விரும்புகிறார். இது இயற்கையானது. பிச்சைக்கேட்பதற்க்கு அவசியம் இல்லை "அப்பா என்மேல் அன்பாக இரு" என்று. அவர் ஏற்கணவே அன்பானவர் தான். ஆனால் நாம் தந்தைக்கு விரோதமாக சயல் பட்டால், கஷ்டங்கள் நம்மை சூழ்ந்துக்கொள்கின்றன. அது போலவே, கடவுள் நம் தந்தை, இயற்கையாகவே அவர் நம் நண்பன் ஆவார். பிறகு அவர் கூறுகிறார் ஸுஹ்ருதம் ஸர்வ புதானாம் அஹம் பீஜ ப்ரத: (கீதை 14.4) "நானே உயிர் விதை அளிப்பவன்..." மனித இனத்துற்க்கு மற்றும் அல்ல, அனைத்து இனங்களுக்கும் தான், அவர்களிலும் உயிர் உண்டு. பின்னர், தனது கர்மா படி, அவர்களுக்கு வெவ்வேறு ஆடைகள் கிடைக்கின்றன.. இந்த கூட்டத்தில் எப்படி நாம் வெவ்வேறு ஆடைகள் அணிந்துள்ளோமோ அப்படி தான். நாம் ஒவ்வொருவரும் மநிதர்கள்; ஆடை வேராக இறுக்கலாம். அது வேரு விஷயம். அதன் போல், உயிர் வாழும் ஜீவன் ஒவ்வொன்றும் கடவுளுடைய அம்சம் தான். ஆனால் சிலர் மனிதர்களாவர், சிலர் பூனை ஆவர், சிலர் மரங்களாவர், சிலர் பூச்சீகளாவர், சிலர் தேவர்களாவர், சிலர் ப்ரம்மா, சிலர் எறும்பு வகைகளாவர். அவர்கள் அப்படி ஆக விருப்ப பட்டதனால், கடவுள் அவருக்கு அந்த வாய்ப்பை அளிக்கிறார். " சரி. உனக்கு இப்படி வாழ்க்கையை அநுபவிக்க ஆசையா ? சரி, நீ அப்படியே ஆவாய். இது தான் ஏற்பாடு, கடவுள் இருக்கிறார், அவர் எல்லோருக்கும் தன்தை. அவர் எல்லோருக்கும் நண்பன். அவர் எப்போதும் தயாராக இருக்கிறார். தானே நேரில் வன்து வேண்டுககிறார். அவர் கருணைமிக்கவர். கேட்ட உடனையே. நிஷம்ய ம்ரியமாணஸ்ய முகதோ ஹரி கீர்த்தனம் பர்துர் நாம மஹாராஜா பார்ஷத: ஸஹஸாபதன் (பாகவதம் 6.1.30)

பகவான் நிறைய தூதர்களை அனுப்பி உள்ளார். "யாராவது என்னிடம் வர ஆசை உள்ளவற்களா பாருங்கள்." இந்த தூதர்கள் தர்ப்போழுதே - அவர்கள் எல்லா இடங்களிலும் பயணம் செய்து வருகிறார்கள் - அதனால் "இதோ இங்கு ஒருவன், 'நாராயணா' இவ்வாரு ஜபிக்கின்றான். வாருங்கள். அவனை அழைத்து செல்வோம். "இதோ இவன் 'நாராயணா' இப்பெயரை ஜபிக்கின்றான். ஆம்" பர்துர் நாம மஹாராஜா நிஷம்ய. " ஒ, இது மிகவும் அற்புதம். இவன் 'நாராயணா' இப்பெயரை ஜபிக்கின்றான். உடனையே. அங்கு இருக்கும் எம தூதற்களை - " யாரு நீங்கள், யேன் அவனை உபத்ரவிக்கிறீர்கள் ? நில்லுங்கள் !" பகவன்நாமத்தை ஜபம் செய்ய இந்த வாய்ப்பை பயன் படுத்துங்கள். ஹரேர் நாம ஹரேர் நாம ஹரேர் நாம ஏவ கேவலம் (சை. சரி 17.21). நீங்கள் எப்போதும் பாதுகாப்பாக இருப்பீர்கள். யமதூதர்கள், உங்களை நெருங்கமுடியாது. இது அவ்வளவு திறன் உள்ளது. அப்போ இந்த வாய்யப்பை ஏற்றுக்கொள்ளுங்கள், ஹரே க்றுஷ்ணா ஜபிப்தற்க்கு. நீங்கள் எல்லோரும் இவ்வாரு செய்கிறீர்கள் அதனால் எனக்கு மிகவும் சன்தோஷம், ஆனால் மிகவும் கண்டிப்பாக இருக்க வேண்டும், ஆத்மார்த்தமாக ஜபியிங்கள். உங்கள் வாழ்க்கை பயனுள்ளதாகும், உங்கள் அடுத்த வாழ்க்கையும் வீண் போவதிலிறுன்து காப்பாற்றப்படும், எல்லாம் நல்லபடியாகும். மிக்க நன்றி.

பக்தர்கள்: ஜய.