TA/Prabhupada 0772 - வேத கலாச்சாரத்தின் முழு ப்ரயோஜனமே அது தான், எப்படி மக்களுக்கு முக்தியை வழங்குவது



Lecture on SB 1.5.13 -- New Vrindaban, June 13, 1969

ப்ரபுபாதா : ஸ்ரீமத் பாகவதத்தின் ஒவ்வொரு வார்த்தையும், பல தொகுப்புகள் நிறைந்த விளக்கத்தின் பொருளானவை, ஒவ்வொரு வார்த்தையும். இது தான் ஸ்ரீமத் பாகவதம். வித்யா பாகவதாவதி. ஸ்ரீமத் பாகவதத்தை புரிந்துக் கொள்ளும் திறனை வைத்து ஒருவரின் கற்றலைப் புரிந்துக் கொள்ளலாம். வித்யா. வித்யா என்றால் கற்றல், இந்த அறிவியலோ அந்த அறிவியலோ கிடையாது. உண்மையுருவில் எப்பொழுது ஸ்ரீமத் பாகவதத்தை ஒருவரால் புரிந்துக் கொள்ள முடிகிறதோ, அப்பொழுது அவன் கற்றலின் முடிவான உயர்வை வென்றதாக கருதலாம். அவதி. அவதி என்றால் கற்றலின் எல்லை. வித்யா-பாகவதாவதி. இப்பொழுது இங்கே நாரதர் கூருகிறார், அகில பந்த முக்தயே: "நீ எவ்வாரு இந்த இலக்கியத்தை மக்களிடம் வழங்கவேண்டும் என்றால் அவர் வாழ்வின் இந்த கட்டுப்பட்ட நிலையிலிருந்து விடுபட வேண்டும், அவர் கட்டுப்பட்ட நிலையில் மேலும் மேலும் சிக்குவதுப்போல் அல்ல... " அது தான் நாரதர் வ்யாஸதேவருக்கு அளித்த கற்ப்பித்தலின் முக்கிய நோக்கம்: "நீர் எதர்காக கட்டுப்பட்ட நிலையை நீடிக்கும் வகையில் வீண் இலக்கியத்தை வழங்க வேண்டும் ?" வேத கலாச்சாரத்தின் நோக்கம் உயிர் வாழீகளை இந்த பௌதீக அடிமைத்தனத்திலிருந்து விடுபவிப்பதே. கற்றலின் குறிக்கோள் என்னவென்று மக்களுக்கு தெரியவில்லை. கற்றலின் நோக்கம், கலாச்சாரத்தின் நோக்கம், கலாச்சாரத்தின் பூர்ணத்துவம், எவ்வாரு மக்களை கட்டுப்பட்ட நிலையிலிருந்து விடுபவிப்பது என்பதாக இருக்க வேண்டும். வேத கலாச்சாரத்தின் முழு ப்ரயோஜனமே அது தான், எப்படி மக்களுக்கு முக்தியை வழங்குவது. ஆகயால் சொல்லப் படுவது என்னவென்றால்: அகில பந்த முக்தயே (பாகவதம் 1.5.13). ஸமாதீனா, அகிலஸ்ய பந்தஸ்ய முக்தயே, அகிலஸ்ய பந்தஸ்ய. நாம் நிரந்தரமாய் ஜட இயற்கையின் சட்டத்தால் கட்டுப்பட்டுள்ள நிலையில் இருக்கிரோம். இது தான் நம் நிலை. மற்றும் நாரதர் வ்யாஸதேவருக்கு வழங்கும் கற்ப்பித்தல் என்னவென்றால் " அவர்கள் முக்தி அடையும்படி இலக்கியத்தை வழங்கு. அவர்கள் மேன்மேலும் இந்த கட்டுப்பட்ட வாழ்வில் சிக்குவதற்கு வாய்ப்பை தராதே." அகில பந்த. அகில. அகில என்றால் எல்லாவற்றையும். மேலும் இத்தகையான இலக்கியத்தை யாரால் வழங்க முடியும் ? அதுவும் கூரப் பட்டிருக்கிறது, அதோ மகாபாக பவான் அமோக த்ருக் (பாகவதம் 1.5.13). யார் ஒருவரின் சிந்தனை தெளிவாக இருக்கிறதோ அவரால் முடியும். ( ஒரு குழந்தையை நோக்கி: ) இவனால் சற்று தொந்தரவு. பெண்மணி : இவனால் உங்களுக்கு ஏதாவது தொந்தரவா ? ப்ரபுபாதர் : ஆம். பெண்மணி. சரி.

ப்ரபுபாதா: தெளிவான சிந்தனை. தெளிவான சிந்தனை இல்லாவிட்டால் எப்படி நலன்புரியும் காரியங்களை செய்யமுடியும் ? உனக்கு நலன் புரிவது என்றால் என்னவென்றே தெரியாது. அவன் சிந்தனை முடப்பட்டிருக்கிறது. ஒருவரின் சிந்தனை முடப்பட்டிருந்தால்... உங்களுக்கு உங்கள் பயணத்தின் இலக்கு என்னவென்று தெரியாவிட்டால், எப்படி முன்னேர முடியும் ? அதுக்குத் தான் இந்த தகுதி... மநித நேயத்திற்கு நல்லது செய்ய துணிந்தவர்களுக்கு, தெளிவான சிந்தனை இருக்கவேண்டும். இத்தகு தெளிவான சிந்தனை எங்கே இருக்கிறது ? எல்லோரும் தலைவர் அகிறார்கள். எல்லோரும் மக்களுக்கு வழி காட்ட முயற்ச்சி செய்கின்றனர். ஆனால் அவனே குருட்டாம்போக்கில் இருக்கிறான். அவனுக்கே வாழ்க்கையின் குரிக்கோள் என்னவென்று தெரியவில்லை. ந தே விது: ஸ்வார்த்த கதீம் ஹி விஷ்ணும் ( பாகவதம் 7.5.31). அதனால் தான்... வ்யாஸதேவரால் அதை செய்ய முடியும் ஏன் என்றால் அவரிடம் தெளிவான சிந்தனை இருக்கிறது. நாரதர் உறுதிப்படுத்துகிறார். தன் சீடனைப்பற்றி, அவர் திறனைப்பற்றி நாரதருக்கு தெரியும். குருவுக்குத் தெரியும் தன் சீடன் எந்த நிலையில் இருக்கிறான் என்று. எப்படி ஒரு மருத்துவனுக்கு, நாடித்துடிப்பை பார்த்தே, ஒரு சிறந்த மருத்துவனால் நோயாளியின் நிலமையை கணிக்க முடியும், தகுந்த சிகிச்சை செய்து, பிரகு மருந்தையும் வழங்குகிறான். அதுபோலவே, உண்மயிலேயே ஆன்மீக குருவாக இருப்பவர், அவரால் சீடனின் நாடித்துடிப்பை உணர முடியும், மற்றும் அவன் குணமாகும்படி மருந்தை வழங்குகிறார்.