TA/Prabhupada 0782 - ஜெபிப்பதை கைவிடாதிருந்தால், கிருஷ்ணர் பாதுகாப்பு அளிப்பார்
Lecture on SB 6.1.28-29 -- Philadelphia, July 13, 1975
ஆகவே, அஜமீலா, இளைஞன், ஒரு விபச்சாரியுடன் தொடர்பு கொண்டதன் காரணமாக, அவர் தனது நல்ல குணத்தை இழந்து விபச்சாரியை பராமரிக்கத் திருடவும், ஏமாற்றவும், தொடங்கினார் ஒன்றன் பின் ஒன்றாக. எனவே தவறுதலாக, அல்லது வயது காரணமாக, அவர் விபச்சாரியால் வசீகரிக்கப்பட்டார். கிருஷ்ணர் பார்த்துக்கொண்டிருந்தார். எனவே கிருஷ்ணர் அவருக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்தார், குழந்தையின் மீது அவருக்குள்ள பாசத்தின் காரணமாக, அவர் குறைந்தபட்சம் "நாராயணா, நாராயணா" என்று மீண்டும் மீண்டும் கூறுவார், நாராயணா வா. நாராயணா உணவை எடுத்துக் கொள். நாராயணா உட்கார்." எனவே பாவ-க்ராஹி-ஜனார்தன: (சை.ப ஆதி-கண்டா 11.108). கிருஷ்ணர் மிகவும் கனிவானவர், அவர் நோக்கம் அல்லது சாரத்தை எடுத்துக்கொள்கிறார். ஏனெனில் புனித பெயர் அதன் விளைவைக் கொண்டுள்ளது. எனவே இந்த அஜமீலா, அவரது முட்டாள்தனத்தால், அவர் மகனின் ஜட உடலுடன் பந்தம் கொண்டிருந்தார், ஆனால் அவர் "நாராயணா" என்று சொல்லி கொண்டிருந்ததால், கிருஷ்ணர் அந்த சாரத்தை எடுத்துக்கொண்டார், அவ்வளவுதான், "ஏதோ ஒரு வழியிலோ அல்லது வேறு வழியிலோ, அவர் நாம சங்கீர்த்தனம் செய்கிறார்." நாம சங்கீர்த்தனத்தின் முக்கியத்துவம் மிகவும் அருமையானது. எனவே ஜெபித்தலை விட்டுவிடாதீர்கள். பின்னர் கிருஷ்ணர் உங்களைப் பாதுகாப்பார். இது ஒரு உதாரணம். "ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா," நீங்கள் பயிற்சி செய்யுங்கள். இயற்கையாகவே, நீங்கள் ஆபத்தில் இருக்கும்போது, "ஹரே கிருஷ்ணா" என்று கூறுவீர்கள். இதை செய்யுங்கள். நீங்கள் ஏதாவது செய்ய பயிற்சி செய்தால், ஹரே கிருஷ்ணா என்று கோஷமிடுங்கள், நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள்.
எனவே அது கடினம் அல்ல. உண்மையாக ஜெபியுங்கள். குற்றத்தைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். உணர்வு திருப்திக்காக வேண்டுமென்றே கீழே விழ முயற்சிக்காதீர்கள். அது மிகவும் ஆபத்தானது. அவர் ... வேண்டுமென்றே, அவர் கீழே விழவில்லை. சந்தர்ப்ப வசத்தால், ஒரு விபச்சாரியுடன் தொடர்பு கொண்டார், அவருக்கு உதவ முடியவில்லை ... எனவே சூழ்நிலையால் அவர் கீழே விழுந்தார், விருப்பத்துடன் அல்ல. இதை கவனத்தில் கொள்ள வேண்டும். விருப்பத்துடன் செய்வது, என்பது மிகப் பெரிய குற்றம். ஆனால் சூழ்நிலையில் ஒவ்வொரு வாய்ப்பும் உள்ளது, ஏனென்றால் நாம் வீழ்ந்துவிட்டோம் மற்றும் ஜென்ம ஜென்மமாக முறைகேடுகள் செய்தது. ஏனெனில் பௌதிக வாழ்க்கை என்றால் பாவ வாழ்க்கை. நீங்கள் பொது மக்களை பார்க்கிறீர்கள். அவர்கள் அக்கறை கொள்வதில்லை. இது பாவம் என்று கூட அவர்களுக்குத் தெரியாது. "சட்டவிரோத பாலுறவு கூடாது, இறைச்சி சாப்பிட கூடாது, போதை கூடாது, சூதாட்டம் கூடாது" என்று நாங்கள் சொல்கிறோம். மேற்கத்திய மக்கள், "இது என்ன முட்டாள்தனம்? என்று நினைக்கிறார்கள். இவை ஒரு மனிதனுக்கான பூர்வாங்க வசதிகள், இவற்றை இந்த மனிதர் புறக்கணிக்க சொல்கிறார்." அவர்களுக்கு தெரியாது. எங்கள் மாணவர்கள் சிலர் இந்த நிறுவனத்தை விட்டு வெளியேறினர். அவர்கள் நினைத்தார்கள், அந்த "ஸ்வாமிஜி வாழ்க்கையின் முதன்மை தேவைகளை மறுக்கிறார்." அவர்கள் மிகவும் மந்தமானவர்கள், இது பாவம் என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. சாதாரண மனிதர்கள் மட்டுமல்ல, ஒரு பெரிய மனிதர், இங்கிலாந்தில் லார்ட் ஜெட்லேண்ட். ஆன்மீக சகோதரர் ஒருவர் பிரசங்கிக்கச் சென்றார், லார்ட் ஜெட்லேண்ட், ஜெட்லாண்டின் மார்க்வெஸ் ... அவர் லார்ட் ரொனால்ட்ஷே என்று அழைக்கப்பட்டார். அவர் வங்காள ஆளுநராக இருந்தார். எங்கள் கல்லூரி நாட்களில் அவர் எங்கள் கல்லூரிக்கு வந்தார் ... அவர் ஸ்காட்டிஷ் மனிதர். எனவே மிகவும் பண்புள்ள மற்றும் தத்துவ சிந்தனை உள்ளவர். எனவே அவர் இந்த ஆன்மீக சகோதரரிடம், "நீங்கள் என்னை பிராமணராக ஆக்க முடியுமா?" என்று கேட்டார். "ஆம், ஏன் முடியாது? நீங்கள் இந்த விதிகளையும் ஒழுங்குமுறைகளையும் பின்பற்றுங்கள், நீங்கள் பிராமணராக மாறுவீர்கள்." என்று அவர் முன்மொழிந்தார். ஆகவே, அவர் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைக் கேட்டபோது-சட்டவிரோத பாலுறவு, இறைச்சி சாப்பிடுவது, சூதாட்டம், போதை ஆகியவை இல்லை - அவர், "ஓ, அது சாத்தியமற்றது, அது சாத்தியமில்லை" என்றார். "எங்கள் நாட்டில் அது சாத்தியமில்லை" என்று அவர் மறுத்துவிட்டார். எனவே இது மிகவும் கடினமான வேலை, ஆனால் ஒருவர் இந்த பாவச் செயல்களைக் கைவிட முடிந்தால், அவருடைய வாழ்க்கை மிகவும் தூய்மையாகும். அவர் சுத்திகரிக்கப்படுகிறார். ஒருவர் சுத்திகரிக்கப்படாவிட்டால், அவர் ஹரே கிருஷ்ணா என்று உச்சரிக்க முடியாது, அவரால் கிருஷ்ணா பக்தியை புரிந்து கொள்ளவும் முடியாது.




