TA/Prabhupada 0788 - நாம் ஏன் மகிழ்ச்சியாய் இல்லை என்பதை புரிந்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும்



Lecture on BG 4.10 -- Vrndavana, August 2, 1974

வீத-ராக-பய-க்ரோதா
மன்-மயா மாம் உபாஷ்ரிதா:
பஹவோ ஜ்ஞான-தபஸா
பூதா மத்-பாவம் ஆகதா:
(ப.கீ 4.10)

பாவம் என்றால் இயற்கையும் என்று பொருள். நாம் இயற்கையை அழைப்பது போல, ஸ்வ-பாவ, ஸ்வ-பாவ. எனவே மத்-பாவம் ... இது ஒரு இயல்பு, இந்த பௌதிக இயல்பு ... இதுவும் கிருஷ்ணரின் பாவம், அதாவது இதுவும் கிருஷ்ணரின் இயல்பு. கிருஷ்ணருக்கு அப்பால் எதுவும் இல்லை, ஆனால் இது வெளிப்புற இயல்பு. பூமிர் ஆபோ 'நலோ வாயு:... (ப.கீ 7.4). பின்னா மே ப்ரக்ருதிர் அஷ்டதா. பின்னா என்றால் பிரிக்கப்பட்ட ஆற்றல் என்று பொருள். ஆற்றல் வேலை செய்கிறது. இது கிருஷ்ணரின் இயல்பு என்றாலும், அது பிரிக்கப்பட்ட இயல்பு.

நான் பேசுவதைப் பதிவு செய்யப்படுவது போலவே. அது மறுபடியும் ஒலிக்கப்படும் போது, ​​நீங்கள் அதே ஒலியைக் கேட்பீர்கள், ஆனால் அது என்னிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ளது. இதேபோல், இந்த பௌதிக இயல்பும் கிருஷ்ணரின் இயல்பு ஆகும்.

கிருஷ்ணருக்கு அப்பால் எதுவும் இல்லை. இரண்டு இயல்புகள் உள்ளன: ஆன்மீக இயல்பு மற்றும் பௌதிக இயல்பு. எனவே பௌதிக இயல்பு என்பது வெளிப்புற ஆற்றல் என்றும், ஆன்மீக இயல்பு என்றால் உள் ஆற்றல் என்றும் பொருள். நாம் ஆன்மீக இயல்பு, சிறிய அளவில். நாம் பௌதிக இயற்கையிலோ அல்லது ஆன்மீக இயல்பிலோ இருக்க முடியும். எனவே நாம் ஓரளவு (ஆன்மீக) இயல்பில். மூன்று இயல்புகள் உள்ளன: வெளிப்பக்க இயல்பு, உள்பக்க இயல்பு மற்றும் விளிம்பு. எனவே, எவ்வளவு காலமாக நாம் பௌதிக இயல்பு, வெளிப்பக்க இயல்பில் உள்ளோமோ, நாம் மகிழ்ச்சியற்றவர்கள். இதுதான் நிலை.

ஒரு மீனைப் போலவே, அதை நிலத்தில் போடும்போது, ​​அது மகிழிச்சியில்லாமல் மரணிக்கும். இதேபோல், நீங்கள் - ஒரு நிலத்தின் உயிரினம், நீங்கள் தண்ணீரில் போடப்பட்டால், நீங்கள் மகிழ்ச்சி அடைய மாட்டீர்கள். மற்றும் மரணிப்பீர்கள். எனவே நாம் ஆன்மீக இயல்புடையவர்கள் என்பதால்... கிருஷ்ணரால் விளக்கப்பட்டுள்ளபடி, இந்த பௌதிக இயல்பு அபாரா. அபாரா என்றால் தாழ்ந்தது, நமக்கு பொருந்தாது. எனவே நாம் மகிழ்ச்சியடையவில்லை. எவ்வளவு காலம் நாம் பௌதிக இயல்பில் நிலைத்திருப்போமோ அவ்வளவு காலம், நாம் மகிழ்ச்சியற்றவர்களாக இருக்க வேண்டும்.

இந்த உடலைப் போல. இந்த உடல் பௌதிக இயல்பால் ஆனது, நாம் இந்த உடலுக்குள் இருக்கிறோம். தேஹினோ 'ஸ்மின் யதா தேஹே கௌமாரம் யௌவனம் ஜரா (ப.கீ 2.13). எவ்வளவு காலம் நமக்கு இந்த உடல் - பௌதிக உடல் கிடைத்துள்ளதோ, நாம் மகிழ்ச்சியற்றவர்களாக இருக்க வேண்டும். முதலில், நாம் ஏன் மகிழ்ச்சியடையவில்லை என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். நாம் இந்த பௌதிக உடலில் இருப்பதால் நாம் மகிழ்ச்சியடையவில்லை. மற்றும் ... அந்த மகிழ்ச்சியின்மை என்பது என்ன? இது ஜன்ம-ம்ருத்யு-ஜரா-வ்யாதி (ப.கீ 13.9) என்ற நான்கு விஷயங்களில் முடிவடைகிறது. பிறப்பதற்கும் மீண்டும் இறப்பதற்கும், நாம் நீண்ட காலம் வாழும்போது நாம் ஏதேனும் நோயால் பாதிக்கப்பட வேண்டும், நாம் வயதாக வேண்டும். எளிய உண்மை.

எனவே புத்திசாலித்தனமான நபர்கள் இந்த பௌதிகம் சார்ந்த இருப்பு பற்றிய பரிதாப நிலையை அறிந்திருக்க வேண்டும் ... மற்றும் அதிலிருந்து வெளியேற முயற்சிக்கவும். ஏதேனும் சந்தேகம் இருக்கிறதா? இதுதான் உண்மை. எனவே இந்த பௌதிக இருப்பிலிருந்து எவ்வாறு வெளியேறுவது என்பது நம் ஒரே பணியாகும். இது நம் ஒரே பணி. இங்கு விஷயங்களை எவ்வாறு சரிசெய்து மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்பதல்ல. அது கர்மீ (முட்டாள்கள்) என்று அழைக்கப்படுகிறது. இந்த பௌதிக உலகில் இவ்வளவு காலம் நீங்கள் இங்கு இருப்பீர்கள் என்பது ஒரு உண்மை, எவ்வளவு தான் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க விஷயங்களை சீர்படுத்த முயற்சி செய்தாலும், அது ஒருபோதும் சாத்தியமில்லை. அது ஒருபோதும் சாத்தியமில்லை. மேற்கத்திய உலகில் பொருள் ரீதியாக மகிழ்ச்சியாக இருக்க முயற்சிக்கின்றனர். உண்மையில் மகிழ்ச்சி என்றால் என்ன என்று அவர்களுக்குத் தெரியாது, ஆனால் பௌதிக மகிழ்ச்சி என்பது பாலியல் வாழ்க்கை என்று பொருள். எனவே அவர்கள் ஒவ்வொரு நாளும் பாலியல் வாழ்க்கை அனுபவிக்கிறார்கள். இன்னும், அவர்கள் மகிழ்ச்சி இருக்கிறதா என்று நிர்வாண நடனத்தை காண செல்கிறார்கள். மகிழ்ச்சி ஏன் இருக்கும்? எந்த மகிழ்ச்சியும் இருக்க முடியாது. ஆனால் இது சீர்படுத்துதல். அவர்கள் இந்த வழியில் அல்லது அந்த வழியில் முயற்சி செய்கிறார்கள். அவ்வளவுதான்.