TA/Prabhupada 0795 - நவீன உலகம் செயல் தீவிரத்தில் உள்ளது -ஆனால் முட்டாள்தனமான, அறியாமை மிக்க செயல் தீவிரத்த



Lecture on SB 1.2.24 -- Los Angeles, August 27, 1972

உதாரணம் என்னவென்றால் : உங்கள் வேலை முடிய வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், நெருப்பு தேவைப்படுகிறது. விறகு கூட நெருப்பின் மற்றொரு நிலை தான். புகை கூட நெருப்பின் மற்றொரு நிலை தான். ஆனால் நெருப்பு அவசியம்., அதைப்போலவே, சத்துவ குணத்தின் தளத்திற்கு வருவதும் அவசியம். குறிப்பாக இந்த மனிதப் பிறப்பில். பிற பிறவிகளில், அவர்கள் பெரும்பாலும் அறியாமையில் இருக்கின்றனர். இந்த பூமியைப் போல. பூமிக்கு மரங்களையும் தாவரங்களையும் உற்பத்தி செய்யும் திறன் உள்ளது. ஆனால் சில நிலங்கள் உள்ளன, அவை எதையும் உற்பத்தி செய்யாது, பாலைவனம். அதற்கு அந்தத் திறன் உள்ளது. நீங்கள் தண்ணீர் ஊற்றினால், அதற்கு விளைவிக்கக் கூடிய திறன் உள்ளது. ஆனால், அதைப்போலவே இந்த தமோ குணமும், தமோ குணத்தில் இருக்கும் அந்த உயிர் வாழிகளும், அவர்களால் பூரண உண்மையைப் பற்றிய ஞானத்தை பெற முடியாது. அது சாத்தியமல்ல. எனவேதான் இது படிப்படியான பரிணாம வளர்ச்சி, தமோ குணத்தில் இருந்து ரஜோ குணத்திற்கு. மேலும் ரஜோ குணத்தில், சிறிதளவு செயல்பாடு உள்ளது. விலங்குகளைப் போல, அவைகளும் செயல்களை பெற்றிருக்கின்றன. ஒரு நாயைப் போல, நாம் கடற்கரையிலும் பிற இடங்களிலும் பார்த்திருக்கிறோம். வெகுவேகமாக அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருக்கும், ஆனால் அதில் எந்த அர்த்தமும் இல்லை. ஒரு குரங்கு கூட சுறுசுறுப்பாக செயல்படும். நீங்கள் உங்கள் நாட்டில் குரங்கை பார்த்ததில்லை. எங்கள் நாட்டில் குரங்குகள் உள்ளது. தேவையில்லாத தொந்தரவுகளை உருவாக்கும். ஆனால் அவை மிக சுறுசுறுப்பாக இருக்கும். ஆனால் மனிதன், அந்த அளவிற்கு சுறுசுறுப்பாக செயல் படுவதில்லை. அவனுடைய செயல்பாடுகள் மூளையைக் கொண்டு தான் உள்ளன.

எனவே சுறுசுறுப்பாக செயல்படுவதில் முட்டாள் தனத்துடன் இருந்தால், அதில் எந்தப் பொருளும் இல்லை. புத்தியை உபயோகிக்காமல், வெறுமனே செயல்பட்டுக் கொண்டிருந்தால் அது மிகவும் ஆபத்தானது. நிதானமான செயல்பாடுகள் தேவை. ஒரு உயர் நீதிமன்றத்தின் நீதிபதி யைப் போல. அவருக்கு அதிகமான தொகை ஊதியமாக வழங்கப்படுகிறது, ஆனால் அவர் தன் நாற்காலியில் உட்கார்ந்து வெறுமனே சிந்தித்துக் கொண்டு தான் இருக்கிறார். " நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு உழைக்கிறோம், எங்களுக்கு இந்த அளவுக்கு ஊதியம் கிடைப்பது இல்லை. இவருக்கு இவ்வளவு பெரிய ஊதியமா. அவர் வெறுமனே உட்கார்ந்து கொண்டிருக்கிறார்." என்று பிறர் நினைக்கலாம். காரணம், முட்டாள்தனமான செயல்பாடுகளுக்கு எந்த மதிப்பும் கிடையாது. அது ஆபத்தானது. ஆக, இந்த நவீன உலகம், மிக சுறுசுறுப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது, ஆனால் அவர்கள் முட்டாள்தனமாக செயல்படுகிறார்கள். தமோ குணத்திலும், ரஜோ குணத்திலும் உள்ளார்கள், ரஜஸ் தமஸ். எனவேதான் இந்த செயல்பாடுகளில் குழப்பம் உள்ளது. முட்டாள்தனமான செயல்களினால், விபத்துகள் நடக்கும். நிதானமான செயல்பாடுகள் தேவைப்படுகிறது. காரணம், நீங்கள் நெருப்பின் தளத்திற்கு வராமல் உங்களால், பௌதிக விஷயங்களை பயன்படுத்த முடியாது. நெருப்பு தேவைப்படுகிறது.அதைப்போலத்தான். அதைப்போலவே, உங்கள் வாழ்க்கையை வெற்றிகரமாக்கிக் கொள்ள, நீர் வாழ் உயிரினங்களில் இருந்து தாவர வாழ்விற்கு, தாவரங்களிலிருந்து புழு பூச்சியின் வாழ்க்கைக்கு, புழு பூச்சிகளின் வாழ்விலிருந்து ஊர்வனவற்றிற்கு என படிப்படியான பரிணாம வளர்ச்சி இருக்கின்றது. மேலும் ஊர்வனவற்றில் இருந்து பறப்பனவற்றிற்கு, அதன்பிறகு விலங்குகளின் வாழ்க்கை, பிறகு மனித வாழ்க்கை, பிறகு நாகரீகமான வாழ்க்கை. இந்த வகையில், படிப்படியான பரிணாம வளர்ச்சியின் படி, நாம் மனித வாழ்வின் தளத்திற்கு வருகிறோம். மேலும் வேத அறிவு மனிதர்களுக்கானது தான் மற்ற உயிரினங்களுக்கானது அல்ல.