TA/Prabhupada 0822 - வெறும் கீர்த்தனத்தின் மூலமாக நீங்கள் பக்தியடையலாம்



Lecture on SB 3.28.18 -- Nairobi, October 27, 1975

ஹரிகேஷ: மொழிபெயர்ப்பு: "பகவானுடைய பெருமை எப்போதும் பாடத் தகுந்தது, அவரது புகழ் அவர் பக்தர்களின் புகழை மேம்படுத்தும். எனவே ஒருவர் முழுமுதற் கடவுளையும் அவரது பக்தர்களையும் தியானத்தில் கொள்ள வேண்டும். தன் மனம் ஒருநிலைப்படும் வரை அவர் அழிவற்ற பகவானின் ரூபத்தை தியானிக்க வேண்டும்."

பிரபுபாதர்:

கீர்தன்ய-தீர்த-யஷஸம்
புண்ய-ஷ்லோக-யஷஸ்கரம்
த்யாயேத் தேவம் ஸமக்ராங்கம்
யாவன் ந ச்யவதே மன:
(ஸ்ரீ.பா. 3.28.18).

இதுவே தியானம் எனப்படும். யாவன் - நாம் தியானிக்கும் பொருளிலிருந்து மனம் விலகிச் செல்லும் வரை, ஒருவர் கீர்த்தனம் பயில வேண்டும். கீர்த்தனீய சதா ஹரி (சி.சி. Adi 17. 31). பக்தர்கள் எப்போதும் 24 மணி நேரமும் ஜெபம் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று சைதன்ய மகாபிரபு பரிந்துரைக்கிறார். கீர்த்தன்ய: "பாடத் தகுதி வாய்ந்தது" ஏன் பாட தகுதி வாய்ந்தது? புண்ய ஷ்லோகஸ்ய. புண்ய ஷ்லோகஸ்ய... புண்ய ஷ்லோக யஷஸ்கரம். மனம் ஒரு நிலைப் படாவிட்டாலும் - கீர்த்தனா என்றால் மனதை நிலைப்படுத்துவது - ஆனால் மனத்தை நிலைப்படுத்த விட்டாலும் உனக்கு லாபம் தான். பகவானை அதிகமாக போற்றிக் கீர்த்தனை செய்வதன் மூலம் புனிதம் அடைந்து கொண்டே இருப்பாய். புரிய வேண்டும் என்ற அவசியமில்லை, சதா ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை ஜெபம் செய்து கொண்டிருந்தாலே நீ புனிதமடைந்து விடுவாய். புண்ய-ஷ்லோக. கிருஷ்ணரின் இன்னொரு பெயர், புண்ய-ஷ்லோக, உத்தம-ஷ்லோக. "கிருஷ்ணா" என்று ஜெபித்தாலே நீ புனிதம் அடைவாய்.

எனவே த்யாயேத் தேவம் ஸமக்ராங்கம். தியானம் தாமரைத் திருவடியில் இருந்து தொடங்க வேண்டும். கீர்த்தனையை தொடங்கியவுடன் தாமரைத் திருவடிகளில் மனதை ஒருமுகப்படுத்த வேண்டும். எடுத்தவுடனேயே முகத்திற்கு தாவுதல் கூடாது. தாமரைத் திருவடிகளை தியானிப்பது பழகவேண்டும் பின்பு மேலே சென்று முட்டிக் கால்களை, பின்பு தொடைகளை, பின்பு வயிற்றை, பின்பு மார்பை. இப்படியாக, கடைசியாக முகத்திற்கு செல்ல வேண்டும். இதுவே சரியான முறை. இது இரண்டாம் காண்டத்தில் விளக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணரை எப்படி நினைப்பது என்பதுதான் செயல்முறை மன்-மனா பவ மத்-பக்த: (ப.கீ. 18.65). அதுவே தியானம். அது கீர்த்தனை மூலம் எளிதாகிறது. ஹரிதாஸ் தாகூரை போல ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை 24 மணி நேரமும் ஜபித்தால்... அது சாத்தியமில்லை.. எவ்வளவு முடியுமோ அவ்வளவு. தீர்த-யஷஸ. கீர்தன... அதுவும் கீர்த்தனம் தான். நாம் கிருஷ்ணரைப் பற்றி பேசுகிறோம், கிருஷ்ணரைப் பற்றி படிக்கிறோம், கிருஷ்ணரின் வழிகாட்டுதல்களான பகவத்கீதையை அல்லது கிருஷ்ணரின் பெருமைகளை ஸ்ரீமத் பாகவதத்தில் படிக்கிறோம். அதுவும் கீர்த்தனம் தான். கீர்த்தனம் என்பது வெறும் இசைக்கருவிகளை வைத்துக்கொண்டு பாடுவது மட்டுமல்ல. இல்லை. கிருஷ்ணரைப் பற்றி எதைப் பேசினாலும் அது கீர்த்தனம் தான்.