TA/Prabhupada 0832 - தெய்வபக்திக்கு அடுத்தது சுத்தமாகும்



Lecture on SB 3.25.16 -- Bombay, November 16, 1974

அனைத்து அழுக்கு விஷயங்களிலிருந்தும் மனம் சுத்தப்படுத்தப்பட வேண்டும் என்பதே செயல்முறை. மனம் நண்பன்; மனம் எதிரி.அனைவருக்கும். அது சுத்திகரிக்கப்பட்டால், அது நண்பன், அது அழுக்காக இருந்தால் ... உங்களை அசுத்தமாக வைத்திருந்தால், நீங்கள் மாசுபட்டிருந்தால் சில நோய்களை பெறுவீர்கள். நீங்கள் உங்களை சுத்தமாக வைத்திருந்தால், நீங்கள் மாசுபடுத்த மாட்டீர்கள். நீங்கள் நடவடிக்கை எடுத்தால், மீதமுள்ள ... ஆகவே, வேத நாகரிகத்தின் படி, ஒருவர் தன்னை ஒரு நாளுக்கு மூன்று முறை தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும், திரி-சந்தியா. அதிகாலையில், மீண்டும் நண்பகலில், மீண்டும் மாலையில். பிராமண விதிகளை வழக்கங்களை கண்டிப்பாக பின்பற்றுபவர்கள் ... வைஷ்ணவர் கூட. வைஷ்ணவர் என்றால் அவர் ஏற்கனவே பிராமணராக இருக்கிறார். எனவே அவர் விதிகளை பின்பற்ற வேண்டும் மற்றும் ... ஸத்யம் ஷமோ தமஸ் திதிக்ஷா ஆர்ஜவம் ஜ்ஞானம் விஜ்ஞானம் ஆஸ்திக்யம்... (ப.கீ 18.42)

எனவே தூய்மை என்பது தெய்வபக்திக்கு அடுத்தது. அதனால்... உண்மையில், நமது பௌதிக நிபந்தனைக்குட்பட்ட வாழ்க்கை என்றால் மனம் அழுக்குகளால் மூடப்பட்டிருக்கும், அனைத்து அசுத்தமான, அழுக்கான விஷயங்கள். அதுதான் நோய். நாம் தமோ-குணம் மற்றும் ரஜோ-குணத்தின் கீழ் நிலையில் இருக்கும்போது, இந்த அழுக்கு விஷயங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. எனவே ஒருவர் தன்னை தமோ-குணம் மற்றும் ரஜோ-குணம் என்ற நிலையில் இருந்து சத்வ-குணம் வரை உயர்த்த வேண்டும். செயல்முறை பரிந்துரைக்கப்படுகிறது, மனதை எவ்வாறு சுத்தப்படுத்துவது: ஷ்ருண்வதாம் ஸ்வ-கதா: க்ருஷ்ண: புண்ய-ஷ்ரவண-கீர்தன: (ஸ்ரீ.பா 1.2.17) ஒருவர் கிருஷ்ணர் கதையை கேட்க வேண்டும். கிருஷ்ணர் அனைவரின் இதயத்திலும் இருக்கிறார், அவர் ஒரு நிபந்தனைக்குட்பட்ட ஆத்மாவைப் பார்க்கும்போது... தனிப்பட்ட ஆன்மா கிருஷ்ணரின் அங்க உறுப்புகள் என்பதால், கிருஷ்ணர் விரும்புகிறார் "இந்த தனிப்பட்ட ஆன்மா, மோசமான, அவர் பௌதிக இன்பத்திற்காக மிகவும் இணைக்கப்பட்டவர், இது அவரது பிணைப்பிற்கான - பிறப்பு, மற்றும் இறப்பு, முதுமை, மற்றும் நோய்க்கு காரணம், அவர் மிகவும் முட்டாள், அவர் அதை கவனத்தில் கொள்ளவில்லை 'நான் ஏன் பிறப்பு, இறப்பு, முதுமை மற்றும் நோய் ஆகியவற்றை மீண்டும் மீண்டும் பெற வேண்டும்?' "அவர் மிகவும் முட்டாள் ஆகிவிட்டார். மூடஹா. எனவே அவை இவ்வாறு கூறப்பட்டுள்ளது: மூடஹா, கழுதை. கழுதை ... கழுதை ஏன் இவ்வளவு சுமக்கிறது என்று அதற்கு தெரிவதில்லை அது போல, வண்ணானின் துணிகளை. எதற்காக? அதற்கு எந்த லாபமும் இல்லை. துணி எதுவும் அதற்கு சொந்தமானது அல்ல. வண்ணான் ஒரு புல் கட்டை கொடுக்கிறார், இது எல்லா இடங்களிலும் கிடைக்கும். என்றால் ... ஆனால் கழுதை நினைக்கிறது "இந்த புல் வண்ணான் கொடுத்தது." ஆகையால், ஒரு துணி கூட எனக்கு சொந்தமில்லை என்றாலும், நான் அதிக சுமையைச் சுமக்க வேண்டும். "

இது கருமி என்று அழைக்கப்படுகிறது. கருமிக்கள், இந்த பெரிய, பெரிய கருமிக்கள், பெரிய, பெரிய கோடீஸ்வரர்கள், அவர்கள் கழுதை போலவே இருக்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் மிகவும் கடினமாக உழைக்கிறார்கள். இந்த பெரிய - சிறிய கருமிகளும் மட்டுமல்ல. - இரவும் பகலும். ஆனால் இரண்டு சப்பாத்திகள் அல்லது மூன்று சப்பாத்திகள் அல்லது அதிகபட்சம், நான்கு சப்பாத்திகள் சாப்பிடுவது. ஆனால் அவர் கடினமாக உழைக்கிறார், மிகவும் கடினமாக. இந்த மூன்று நான்கு சப்பாத்திகளையும் ஏழ்மையான மனிதனால் கூட எளிதாகக் கொண்டிருக்க முடியும், ஆனால் அவர் ஏன் இவ்வளவு கடினமாக உழைக்கிறார்? ஏனென்றால், "இவ்வளவு பெரிய குடும்பத்தை பராமரிப்பதற்கு நான் பொறுப்பு." இதேபோல், ஒரு தலைவரும், பொதுத் தலைவர், ஒரு அரசியல்வாதி, அவரும் அப்படித்தான் நினைக்கிறார், "நான் இல்லாமல், என் தேசத்தின் அனைத்து உறுப்பினர்களும் இறந்துவிடுவார்கள், எனவே நான் இரவும் பகலும் வேலை செய்ய வேண்டும். நான் இறக்கும் வரை அல்லது யாரோ ஒருவரால் கொல்லப்படும் வரை, நான் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும்." இவை அழுக்கு விஷயங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அஹம் மமேதி (ஸ்ரீ.பா 5.5.8). அஹம் மமேதி. அஹம் மமாபிமாநோத்தை:. இந்த மோசமான விஷயங்களை ... தனிப்பட்ட, சமூக, அரசியல், வகுப்புவாத அல்லது தேசியமாக எடுத்துக் கொள்ளுங்கள். எந்த வழியிலும். இந்த இரண்டு விஷயங்கள், அஹம் மமேதி (ஸ்ரீ.பா 5.5.8), மிகவும் முக்கியமானது. "நான் இந்த குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் இந்த தேசத்தைச் சேர்ந்தவன். நான் அத்தகைய சமூகத்தைச் சேர்ந்தவன். இப்படி இப்படியான கடமை எனக்கு கிடைத்துள்ளது." ஆனால் இவை அனைத்தும் தவறான பெயர்கள் என்று அவருக்குத் தெரியாது. அது அறியாமை என்று அழைக்கப்படுகிறது. எனவே சைதன்யா மஹாபிரபு தனது அறிவுறுத்தலைத் தொடங்குகிறார், அந்த ஜீவேர ஸ்வரூப ஹய நித்ய-க்ருஷ்ண-தாஸ (சை.ச. மத்யா 20.108-109). உண்மையான நிலை கிருஷ்ணரின் நித்திய வேலைக்காரன். அதுதான் உண்மையான நிலை. ஆனால் அவர், “நான் இந்த குடும்பத்தின் வேலைக்காரன். நான் இந்த தேசத்தின் வேலைக்காரன். நான் இந்த சமூகத்தின் வேலைக்காரன், வேலைக்காரன் ... " என்று நினைக்கிறார். நிறைய. அஹம் மமேதி (ஸ்ரீ.பா 5.5.8). இது அறியாமையால் ஏற்படுகிறது, இது தமோ குணத்தின் முறை. தமோ குணம்.