TA/Prabhupada 0844 - வெறுமனே மன்னனை திருப்திபடுத்துவதன் மூலம் கடவுளை திருப்திபடுத்துங்கள்



731216 - Lecture SB 01.15.38 - Los Angeles

எனவே முன்பு, முழு உலகமும், பாரதவர்ஷ.. அதற்கு பாரதவர்ஷ என்று பெயர். அது ஒரு பேரரசரால் நிர்வகிக்கப்பட்டது. எனவே இது, ஸ்வ-ராட் என்று கூறப்படுகிறது. ஸ்வ-ராட் என்றால் முற்றிலும் சுதந்திரமானது. மஹாராஜா யுதிஷ்டிரர் வேறு எந்த ராஜாவையோ வேறு எந்த நாட்டையோ சார்ந்து இருக்கவில்லை. அவர் முற்றிலும் சுதந்திரமாயிருந்தார். அவர் விரும்பியதை அவர் செய்ய முடியும். அதுதான் ராஜா. அதுதான் பேரரசர். ராஜா அல்லது ஜனாதிபதி என்று அழைக்கப்படுபவர் சில மோசமான வாக்காளர்களின் வாக்குகளைச் சார்ந்து இருந்தார் என்றால், அவர் என்ன வகையான ஸ்வ-ராட்? தற்போதைய தருணத்தில், ஜனாதிபதி என்று அழைக்கப்படுபவர் சில பாதகர்களின் வாக்குகளைச் சார்ந்து இருப்பவர். அவ்வளவுதான். யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று இந்த பாதகர்களுக்குத் தெரிவதில்லை, எனவே மற்றொரு பாதகர் தேர்ந்தெடுக்கப்படுகிறார், அவர் சரியாக இல்லாதபோது, ​​அவர்கள் அழுகிறார்கள். நீங்கள் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். இப்போது ஏன் அழுகிறீர்கள்? ஏனென்றால் அவர்கள் பாதகர்கள். அவர்களுக்கு தெரிவதில்லை. எனவே இது தொடர்கிறது. ஆனால் உண்மையில், தேசத் தலைவர் ஸ்வ-ராட் ஆக இருக்க வேண்டும், முழுமையாக சுதந்திரமாக இருக்க வேண்டும். குடிமக்களின் வாக்குகளின் மீது சார்ந்து அல்ல. அவர் கிருஷ்ணரை மட்டுமே சார்ந்து இருக்கிறார். மஹாராஜா யுதிஷ்டிரரைப் போல. அனைத்து பாண்டவர்களும், கிருஷ்ணரின் உத்தரவிற்கு கீழ்படிந்து இருந்தனர்.

எனவே ராஜா அல்லது சக்கரவர்த்தி, கிருஷ்ணரின் பிரதிநிதி. எனவே அவர் மிகவும் மரியாதைக்குரியவர், நரதேவ. ராஜாவின் மற்றொரு பெயர் நரதேவ, "மனித உருவில் கடவுள்." "மனித உருவில் கடவுள்," ராஜா அவ்வளவு மதிக்கப்படுகிறார். ஏனென்றால் அவர் கிருஷ்ணரின் பிரதிநிதி. கிருஷ்ணரின் எந்தவொரு பிரதிநிதியும்... தற்போதைய ராஜாவோ அல்லது ஜனாதிபதியோ அல்ல, ஆனால் இதுவே உத்தமம். எனவே அவர் மிகவும் பக்குவமான பிரதிநிதியாக இருக்க வேண்டும்... விஷ்வநாத சக்ரவர்தீ டாகுர கூறினார், யஸ்ய ப்ரஸாதாத் பகவத்-ப்ரஸாத:. ராஜா கடவுளின் உண்மையான பிரதிநிதி என்றால், ராஜாவை மகிழ்விப்பதன் மூலம், சர்வவல்லமையுள்ள தந்தையான கடவுளை மகிழ்விப்பீர்கள். இது... ஆகவே, மஹாராஜா யுதிஷ்டிரரை அரியணையில் இருத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த குருக்ஷேத்திரப் போரை ஏன் கிருஷ்ணர் விரும்பினார்? ஏனென்றால், "அவர் எனது சரியான பிரதிநிதி, துரியோதனன் அல்ல என்பதை அவர் அறிந்திருந்தார். எனவே யுத்தம் நடக்க வேண்டும், இந்த துரியோதனனும் அவனோடு இருப்பவர்களும் அழிக்கப்பட வேண்டும். மேலும் யுதிஷ்டிரர் அரியணையில் அமர வேண்டும்."

எனவே தேர்வு நடந்தது... இதுவே பரம்பரை. எனவே அடுத்த மன்னர் யுதிஷ்டிரரின் பொறுப்பு... ஏனென்றால் அவர் ஓய்வு பெறப் போகிறார். "எனவே அடுத்த பேரரசர், அவரும் என்னைப் போலவே சமமான தகுதிகளைப் பெற்றவராக இருக்க வேண்டும்." எனவே, ஸுஸமம் குணை: (SB 1.15.38) ஸுஸமம், "சரியான என் பிரதிநிதி எனப்படுகிறது" என் பேரன், பரீக்ஷித்துக்கு சமமான தகுதி உள்ளது. எனவே அவர் மன்னராக வேண்டும்," நிலையற்ற ஒருவர் அல்ல. மஹாராஜா பரீக்ஷித் பிறந்தபோது, ​​முழு குரு வம்சத்திற்கும் அவரே ஒரே வாரிசு. மற்ற அனைவரும் போரில் கொல்லப்பட்டனர். இல்லை. அவர் மரணத்திற்குப் பிறகு பிறந்த குழந்தையும் கூட. அவர் தன் தாயின் கர்ப்பத்திற்குள் இருந்தார். அவரது தாயார் கர்ப்பமாக இருந்தார். அவரது தந்தை, பதினாறு வயது மட்டுமே, அர்ஜுனனின் மகன் அபிமன்யு, போரில் சண்டையிடச் சென்றார். அவர் மிகவும் சிறந்த போர்வீரர். எனவே அவரைக் கொல்ல ஏழு பெரிய மனிதர்கள் தேவைப்பட்டனர்: பீஷ்மர், த்ரோணர், கர்ணன், துர்யோதனன் போன்ற அனைவருமே ஒன்றாக இணைந்தனர். எனவே கருணையே இல்லை. இந்த அபிமன்யு, அவரைக் கொல்ல சுற்றி வளைத்த அனைத்து மாவீரர்களின் பேரனாகவும் கொள்ளுப் பேரனாகவும் இருந்தார். மிகவும் பிரியமான பேரன் அல்லது கொள்ளு பேரன்... பீஷ்மரின் கொள்ளு பேரன், துரியோதனனின் பேரன். ஆனால் அது யுத்தம், க்ஷத்ரியர். நீங்கள் போரிட வந்ததும், எதிர் தரப்பினரைக் கொல்ல வேண்டும். அவர் என் அன்பு மகனோ பேரனோ கொள்ளு பேரனோ என்பது முக்கியமல்ல. இது கடமை.