TA/Prabhupada 0859 - அது மேற்கத்திய நாகரீகத்தின் குறைபாடு ஆகும். வோக்ஸ் பாப்புலி, பொதுமக்களின் கருத்துக்க



Room Conversation with Director of Research of the Dept. of Social Welfare

இயக்குனர்: ஆனால் மக்கள் இதை மக்கள் தொகையில் மிகச் சிறிய சதவிகிதம் என்று சொல்வார்கள்.

பிரபுபாதர்: இல்லை. அதிக சதவீதம் என்பது கேள்வி இல்லை. ஒரு சிறிய சதவிகிதம் கூட, சில சிறந்தவர்கள் இருக்க வேண்டும் என்று நான் சொன்னேன். குறைந்தபட்சம் மக்கள் "இங்கே சிறந்த மனிதன்" என்று பார்ப்பார்கள். நம்மிடம் இருப்பது போலவே. ஏனென்றால் வெளியிலிருந்து வருபவர்கள் அவர்கள் கீர்த்தனை செய்வதையும் நடனமாடுவையும் பார்த்துக் கற்றுக்கொள்கிறார்கள், வணங்கவும் செய்கிறார்கள். படிப்படியாக அவர்கள் தங்கள் சேவையை வழங்குகிறார்கள்: "தயவுசெய்து என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்." கட்டளையைவிட உதாரணம் சிறந்தது. உங்களிடம் ஒரு சிறந்த மக்களின் குழு இருந்தால், மக்கள் தானாகவே கற்றுக்கொள்வார்கள். அது தான் தேவை. ஆனால் கவலைப்பட தேவையில்லை... சிறந்த மனிதர்களைக் கண்டுபிடிப்பது அபூர்வமானது. பூசாரிகளில் கூட, அவர்கள் குடிப்பழக்கத்திற்காக மருத்துவமனைக்குச் செல்கிறார்கள். நான் முன்பு சில நேரங்களில் ஒரு மருத்துவமனையில், ஐயாயிரம் நோயாளிகள், மது நோயாளிகளைப் பார்த்தேன். அவர்கள் பாதிரியார்கள். அந்தப் பாதிரியார் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். மேலும் அவர்கள் ஓரினச்சேர்க்கையை ஆதரிக்கின்றனர். எனவே சிறந்த குணங்களை கொண்ட மனிதர்கள் எங்கே? அர்ச்சகர் வர்க்கம், அவர்கள் குடிப்பழக்கத்திற்காக மருத்துவமனைக்குச் செல்கிறார்கள், அவர்கள் ஆணுக்கு ஆண் திருமணம் மற்றும் ஓரினச்சேர்க்கையை அனுமதிக்கிறார்கள், பின்னர் சிறந்த மனிதர் எங்கே?

இயக்குனர்: ஆனால் ஓரினச்சேர்க்கை என்பது நோய்...

பிரபுபாதர்: ஒரு நோயா?

இயக்குனர்: ஓரினச்சேர்க்கை ஒரு நோய். நீங்கள் ஏன் ...?

பக்தர்: இது ஒரு நோய் என்று சொன்னார்.

இயக்குனர்: இது ஒரு நோய். பார்வை இல்லாத ஒரு நபரை, நீங்கள் பார்க்காததற்காகத் தண்டிப்பது போல. ஓரினச்சேர்க்கையாளராக இருப்பதற்காக நீங்கள் ஒருவரை தண்டிக்க முடியாது. என்று நம் சமூகம் கூறுகிறது.

பிரபுபாதர்: சரி, எப்படியும், ஆச்சாரிய வர்க்கம், ஓரினச்சேர்க்கைக்கு அனுமதி அளிக்கிறது.

இயக்குனர்: என்ன?

பிரபுபாதர்: அனுமதி. அவர்கள் ஓரினச்சேர்க்கையை அனுமதிக்கிறார்கள்.

இயக்குனர்: ஆமாம், நாங்கள் சொல்கிறோம் ...

பிரபுபாதர்: ஆணும் ஆணும் பாதிரியாரால் திருமணம் செய்து வைக்கப்பட்டதாக ஒரு தகவல் இருந்தது. நியுயார்க்கில் ஒரு நாளிதழ் உண்டு, வாட்ச்டவர். அது ஒரு கிரிஸ்துவ நாளிதழ். அதில் நான் பார்த்திருக்கிறேன். அதில் ஆச்சார்ய வர்க்கம் எப்படி ஓரினச்சேர்க்கையை அனுமதிக்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள். அவர்கள் தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள், ஓரினச்சேர்க்கை நிறைவேற்றப்பட்டது, "சரி." பெர்த்தில் நீங்கள் மாணவர்கள் ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவாக, ஓரினச்சேர்க்கையைப் பற்றி விவாதிக்கிறார்கள் என்று சொன்னீர்கள். அதனால் சிறந்த மனிதன் எங்கே? நீங்கள் ஏதாவது உறுதியான காரியத்தை விரும்பினால், மக்களைச் சிறந்த மனிதராக மாற்றப் பயிற்சி அளிக்கவும். அதுதான் இந்தக் கிருஷ்ண பக்தி இயக்கம்.

இயக்குனர்:நீங்கள் என்ன சொல்கிறீர்கள்... உங்களுக்கு எது சிறந்தது என்று தோன்றுகிறதோ அது பிறருக்கு சிறந்தது என்று தோன்றுவதில்லை.

பிரபுபாதர்: நான் சிறந்தவனுக்கு ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்.

இயக்குனர்: ஆமாம், ஆனால் அது ஒரு கருத்து.

பிரபுபாதர்: இல்லை இது கருத்தைச் சார்ந்து இருக்காது. கருத்து, அதன் மதிப்பு என்ன? நாம் எவரிடம் கருத்து கேட்கிறோமோ அவர்கள் எல்லாம் கழுதையைப் போல இருந்தால். ஒருவன் சாஸ்திரம் என்ன கூறுகிறதோ அதை எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, அவனுக்கென்று கருத்து இருக்கக் கூடாது. ஒரு கழுதையிடம் சென்று கருத்து கேட்பதில் என்ன பயன்? எனவே நாய்கள் மற்றும் கழுதைகளைப் போலவே மக்களும் பயிற்றுவிக்கப்படுகிறார்கள், பிறகு அவர்களின் கருத்தால் என்ன பயன்? நீங்கள் செயல்படுத்த வேண்டும் என்றால், நீங்கள் இப்படி செய்ய வேண்டும். நாங்கள் இதை அறிமுகப்படுத்தியதைப் போலவே "தகாத பாலுறவு கூடாது." அவர்களின் கருத்தை நான் பொருட்படுத்தவில்லை. கருத்து என்றாலே... உடனடியாக விவாதம் நடக்கும். மேலும் அவர்களின் கருத்தை எடுத்து என்ன பயன்? இது செய்யப்பட வேண்டும். அதுதான் மேற்கத்திய நாகரிகத்தின் குறைபாடு. வோக்ஸ் பாப்புலி, பொதுமக்களின் கருத்தை எடுத்துக் கொள்ளுதல். ஆனால் இந்தப் பொதுமக்களின் மதிப்பு என்ன? குடிகாரர்கள், புகைப்பிடிப்பவர்கள், இறைச்சி உண்பவர்கள், பெண் வேட்டைக்காரர்கள். என்ன... அவர்கள் முதல்தர மனிதர்கள் அல்ல. அப்படிப்பட்ட மூன்றாம் தர, நான்காம் தர மனிதர்களின் கருத்தால் என்ன பயன்? அத்தகைய கருத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. கிருஷ்ணர் சொன்னது, அது நிலையானது, அவ்வளவுதான். கிருஷ்ணரே பகவான், அவர் கூறியதே இறுதியானது. அதில் எந்த ஜனநாயகமோ, கருத்துவேறுபாடோ இல்லை. நீங்கள் ஒரு மருத்துவரிடம் சிகிச்சைக்காகச் செல்லும்போது, மற்ற நோயாளிகளின் கருத்துக்காக மருத்துவர் தனது மருந்துகளைத் தருவதில்லை: "நான் இந்த மருந்தை இவருக்குப் பரிந்துரைக்கிரேன். இப்போது உங்கள் கருத்தை எனக்குக் கொடுங்கள்." அவர் அதைச் செய்கிறாரா? அனைத்து நோயாளிகளும், அவர்கள் என்ன கருத்து தருவார்கள்? மருத்துவரே சரியான நபர். அவர் என்ன மருந்து எழுதுகிறாரோ, அதுதான். ஆனால் இந்த மேற்கத்திய நாடுகளில் எல்லாமே பொது மக்களின் கருத்து.