TA/Prabhupada 0904- நீ கடவுளின் சொத்தை கொள்ளை அடித்திருக்கிறாய்



730418 - Lecture SB 01.08.26 - Los Angeles

எனவேதான் குந்தி கூறுகிறார், இந்த போதையூட்டும் நிலையான மத:3, ஏத4மான-மத3: (ஸ்ரீமத் பா 1.8.26), அதிகப்படுத்தும், புமான், இத்தகைய நபர்கள், நைவார்ஹதி, அவர்கள் உணர்ச்சியுடன் அழைக்க முடியாது: "ஜெய ராதா -மாதவா. " அவர்களால் உணர்ச்சியுடன் அழைக்க முடியாது. அது சாத்தியமில்லை. அவர்களின் உணர்ச்சி, ஆன்மீக உணர்ச்சி தொலைந்து விட்டது. அவர்களால் உணர்ச்சியுடன் அழைக்க முடியாது ஏனெனில் அவர்களுக்கு அது தெரியாது. "ஓ, இந்த கடவுள் ஏழை மனிதர்களுக்காக தான். அவர்களுக்கு போதுமான உணவு கிடைக்காது. எனவே அவர்கள் கோயிலுக்கு போய் " ஓ கடவுளே, எங்களுடைய தினசரி உணவை அளியுங்கள்" என்று வேண்டட்டும். நமக்குப் போதுமான உணவு இருக்கிறது. நான் ஏன் கோவிலுக்கு போகவேண்டும்? இதுதான் அவர்கள் கருத்து. எனவே தான் தற்போது, இந்த பொருளாதார முன்னேற்ற காலத்தில். யாருக்கும் கோவிலுக்கோ சர்ச்சுக்கோ போவதற்கு ஆர்வமில்லை. "இது என்ன முட்டாள்தனம்? நான் ஏன் சர்ச்சுக்குப் போய் உணவை கேட்கவேண்டும். நம்முடைய பொருளாதார நிலையை முன்னேற்றிக் கொண்டால் தேவையான உணவு கிடைக்கும்."

கம்யூனிஸ்ட் நாடுகளில் உள்ளதைப் போல. அவர்கள் அப்படித்தான் செய்கிறார்கள். கம்யூனிஸ்ட் நாடுகளில், கிராமங்களில் பிரச்சாரம் செய்கிறார்கள். அவர்கள் மக்களை சர்ச்சுக்கு போய் உணவை வேண்டிக் கொள்ளச் சொல்வார்கள் அப்பாவியான மக்களும், வழக்கம் போல " ஓ தேவனே எங்களுக்கு எங்கள் தினசரி ரொட்டியை தாரும் என்று வேண்டுவர். மேலும் அவர்கள் வெளியே வரும்போது, இந்தக் கம்யூனிஸ்டுகள், மக்களிடம் "உங்களுடைய ரொட்டி துண்டு கிடைத்ததா?" என்று கேட்பார்கள். அவர்கள் கூறுவார்கள்  : "இல்லை ஐயா, சரி தான், எங்களிடம் கேளுங்கள்." பிறகு அவர்கள் கேட்பார்கள் : "ஓ, கம்யூனிஸ்டு தோழர்களே, எனக்கு ரொட்டியைத் தாருங்கள்." (சிரிப்பு) அந்த கம்யூனிஸ்டு நண்பர் ஒரு வண்டி நிறைய ரொட்டியை எடுத்துச் சென்றிருப்பார். "வேண்டிய அளவு எடுத்துக்கொள். எனவே யார் சிறந்தவர்? நாங்கள் சிறந்தவர்களா அல்லது உங்கள் கடவுள் சிறந்தவரா?" அவர்கள் கூறுவார்கள் "இல்லை ஐயா நீங்கள்தான் சிறந்தவர்." ஏனெனில் அவர்களுக்கு எந்த புத்தியும் இல்லை. "அயோக்கியனே, இந்த ரொட்டிகளை நீ எங்கிருந்து பெற்றாய்?" என்று கேட்க மாட்டார்கள். (சிரிப்பு) "உன்னுடைய சொந்த தொழிற்சாலையில் தயாரித்தாயா? ரொட்டிக்குத் தேவையான தானியங்களை உன் தொழிற்சாலையில் உன்னால் உருவாக்க முடியுமா?" ஏனெனில் அவர்களுக்கு எந்த புத்தியும் இல்லை.

சூத்திரர்கள், அவர்கள் சூத்திரர் என்று அழைக்கப்படுகின்றனர். சூத்திரன் என்றால் எந்த புத்தியும் இல்லாதவன். அவர்கள் அதனை அப்படியே எடுத்துக் கொள்வார்கள். ஆனால் பிராமணன் என்பவன், அறிவில் முன்னேறியவன். அவன் உடனடியாக கேள்வி கேட்பான் : "அயோக்கியனே, இந்த ரொட்டியைத் நீ எங்கிருந்து பெற்றாய்?" இதுதான் பிராமணனுடைய கேள்வி. உன்னால் ரொட்டியை உருவாக்க முடியாது. கடவுளின் தானியத்தை நீ வெறுமனே உருமாற்றி இருக்கிறாய்.... தானியம், கோதுமை கடவுளால் அளிக்கப்பட்டது. நீ வெறுமனே ஒரு மாற்றம்தான் செய்திருக்கிறாய் ஆனால் ஒன்றிலிருந்து இன்னொன்றாக மாற்றுவதனால்,

அது உன்னுடைய சொத்தாக ஆகிவிடாது உதாரணத்திற்கு நான் ஒரு தச்சனிடம் சில விறகுகளையும், கருவிகளையும், ஊதியத்தையும் கொடுக்கிறேன் அவன் ஒரு அழகிய நல்ல பெட்டியை செய்கிறான். அந்தப் பெட்டி யாருக்குச் சொந்தம்? தச்சனுக்கா அல்லது அதற்கான பொருட்களை அளித்தவருக்கா? அது யாருக்கு சொந்தமாகும்? "நான் இந்த கட்டையை இவ்வளவு அழகிய பெட்டியாக மாற்றியதனால் அது எனக்குத்தான் சொந்தம்." என்று அந்த தச்சன் சொல்ல முடியாது. இல்லை. இது உன்னுடையது அல்ல. அதைப் போலவே, அயோக்கியனே இதற்கான சேர்மான பொருட்களை யார் உனக்கு அளிக்கிறார்? அது கிருஷ்ணர் தான். கிருஷ்ணர் கூறுகிறார் : பூ4மிர் ஆபோ 'நலோ வாயு: க2ம்' மனோ பு3த்3தி4ர் ஏவ... (ப்ரக்ரு'திர் மே அஷ்டதா4 ப.கீ 7.4). "இது எனக்குச் சொந்தமானவை." நீ கடலையும், நிலத்தையும், வானத்தையும், நெருப்பையும், காற்றையும் உருவாக்கவில்லை. இவையெல்லாம் உன்னுடைய படைப்பு அல்ல. உன்னால் இந்த பௌதிக விஷயங்களை தேஜோ-வாரி-ம்ரு'தா3ம்' வினிமய:, கலப்பதனாலும், மாற்றுவதனாலும், உருமாற்றம் தான் செய்ய முடியும். உன்னால் நிலத்திலிருந்து மண்ணை எடுத்து, கடலில் இருந்து நீரை எடுத்து, அவற்றை கலந்து அதனை நெருப்பிலிட முடியும். பின்னர் அது செங்கல் ஆகிறது. பிறகு நீ அந்த செங்கற்களை எல்லாம் அடுக்கி வைத்து ஒரு வானளாவிய கட்டடத்தை செய்யலாம். ஆனால் இந்த வானளாவிய கட்டிடம் உன்னுடையது என்று கூறும் அயோக்கியனான நீ, இதன் அடிப்படை பொருட்களை எங்கிருந்து பெற்றாய் ? இதுதான் புத்திசாலித்தனமான கேள்வி. நீ கடவுளின் சொத்தை கொள்ளை அடித்திருக்கிறாய், மேலும் அது உன்னுடைய சொத்தாக உரிமை கோருகிறாய். இது தான் ஞானம். இதுதான் ஞானம்.