TA/Prabhupada 0912 - அறிவில் முன்னேறியவர்கள், கடவுளை உள்ளும் புறமும் காணமுடியும்



730420 - Lecture SB 01.08.28 - Los Angeles

ஸமோ 'ஹம்' ஸர்வ-பூ4தேஷு (ப.கீ 9.29). அவர் அனைவருக்கும் சமமானவர். எனவே இப்போது அவரை புரிந்து கொள்வது உங்கள் திறனை பொறுத்ததே. எனவே குந்தியும் இங்கு இந்த ஸ்லோகத்தில் இதையே கூறுகிறார்: ஸமம்' சரந்தம்' ஸர்வத்ர (ஸ்ரீமத் பா 1.8.28). ஸமம்' சரந்தம்'. சரந்தம் என்றால், அசைபவை. அவர் எல்லா இடத்திற்கும் செல்கிறார், வெளியே, உள்ளே, அவரைப் பார்ப்பதற்கு நாம் நம்முடைய கண்களை தூய்மைப் படுத்திக் கொள்ள வேண்டியது மட்டும் தான். அதுதான் பக்தித் தொண்டு, கடவுளின் இருப்பை உணர்வதற்கு நம்முடைய புலன்களை தூய்மையாக்கி கொள்ளுதல். கடவுள் எல்லா இடத்திலும் இருக்கிறார். அந்தர் ப3ஹி:. அந்தஹ என்றால் உள்ளே, ப3ஹி என்றால் வெளியே. "அறிவில் குறைந்தவர்கள், கடவுளை உள்ளே தேட மட்டும் முயற்சி செய்கிறார்கள். மேலும் அறிவில் முன்னேறியவர்களோ, உங்களை உள்ளும் புறமும் காண முடியும்." இதுதான் வித்தியாசம்.

தியானம், அறிவில் குறைந்த மனிதர்களுக்கானது. தியானம் என்றால் நீங்கள் உங்கள் புலன்களை கட்டுப்படுத்த வேண்டும். யோகப் பயிற்சி என்றால் யோக3 இந்த்3ரிய-ஸம்'யம. நம்முடைய புலன்கள் மிகுந்த சலனப் படுபவை. யோகப் பயிற்சியின் மூலம், நான் சொல்வது என்னவென்றால், பல்வேறு ஆசனங்களை பயிற்சி செய்வதன் மூலம், மனது கட்டுப்படுத்தப்பட்டு, புலன்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. அதன்பிறகு நம்மால் நம்முடைய இதயத்தினுள் இருக்கும் விஷ்ணுவின் வடிவத்தின் மீது மனதை நிலை நிறுத்த முடியும். இதுதான் யோக முறை. அல்லது மிக அதிகமாக வாழ்வின் உடல் தளத்தில் இருப்பவர்களுக்கு, யோகப்பயிற்சி, உடற்பயிற்சிகள் பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் இதயத்தில் இருக்கும் உன்னதமான பகவானைக் காண வேண்டும். ஆனால் பக்தர்கள், பக்தர்கள், இன்னும் முன்னேறியவர்கள், தனியாக தங்களுடைய புலன்களை கட்டுப்படுத்தத் தேவையில்லை காரணம் பக்தித் தொண்டில் ஈடுபடுவது என்றாலே புலன்களை கட்டுப்படுத்துவது என்று பொருள்.

நீங்கள் விக்ரக வழிபாட்டிலோ, அறையை சுத்தம் செய்வதிலோ அல்லது விக்கிரங்களை அலங்கரிப்பதிலோ, விக்ரங்களுக்காக உணவு தயாரிப்பதிலோ எல்லாவற்றையும் நன்றாக செய்யும் போது, ஏற்கனவே உங்களுடைய புலன்கள் ஈடுபட்டு கொண்டுள்ளன உங்களுடைய புலன்கள் திசை திரும்புவதற்கான வாய்ப்பு எங்கே? உங்களுடைய புலன்கள் ஏற்கனவே கட்டுப்பாட்டில் உள்ளன. ஏனெனில் என்னுடைய புலன்கள், ஹ்ரு'ஷீகேண ஹ்ரு'ஷீகேஷ2-ஸேவனம்' ப4க்திர் உச்யதே (சை சரி மத்ய 19.170). பக்தி என்றால் புலன்களை புலன்களின் அதிபதியின் சேவையில் ஈடுபடுத்துவதுதான். ஹ்ருஷிகேஸ என்றால் புலன்களின் அதிபர், ஹ்ருஷிக என்றால் புலன்கள். இப்போது நம்முடைய புலன்கள், புலன் நுகர்ச்சியில் ஈடுபட்டுள்ளன. ஸர்வோபாதி4, உபாதி4 யுக்த:. எனவே நான் இந்த உடல். எனவே, நான் என்னுடைய புலன்களை திருப்திப்படுத்த வேண்டும். இதுதான் வாழ்வின் களங்கம் அடைந்த நிலை. ஆனால் ஒருவன் நான் இந்த உடல் அல்ல என்னும் புரிதலுக்கு வரும்போது, நான் ஒரு ஆத்மா, கடவுளின் அங்கத் துணுக்கு, எனவே என்னுடைய புலன்களும் ஆன்மீகப் புலன்கள் என்பதால், அவை உன்னத ஆன்மீக உயிர் வாழியின் சேவையில் ஈடுபடுத்தப்பட வேண்டும். இதுதான் தேவைப்படுகிறது இது தான் முக்தி.

முக்தி என்றால் ஹித்வா அன்யதா2-ரூபம். நாம் பந்தப்பட்ட நிலையில் இருக்கும்போது, நம்முடைய உண்மையான நிலையை கை விடுகிறோம். நம்முடைய உண்மையான நிலை சைதன்ய மகாபிரபு கூறுவதைப் போல : ஜீவேர ஸ்வரூப ஹய நித்ய-க்ரு'ஷ்ண-தா3ஸ (சை சரி மத்ய 02.108-109). நம்முடைய உண்மையான நிலை, நாம் கிருஷ்ணரின் நித்தியமான சேவகன் என்பதுதான். எனவே நாம் பகவானுடைய சேவையில் நம்மை ஈடுபடுத்திக் கொண்ட உடனேயே நாம் முக்தி அடைந்தவர் ஆகிறோம். உடனடியாகவே. வேறு வழிமுறைகளை கடக்கவேண்டும் என்ற கேள்வியே இல்லை. ஒருவரது புலன்களை, கடவுளின் சேவையில் ஈடுபடுத்துவது என்னும் இந்த ஒரு வழிமுறையினாலேயே, ஒருவன் விடுதலை அடைகிறான்.