TA/Prabhupada 0918 - கிருஷ்ணரின் எதிரி ஆவது மிக லாபகரமானது அல்ல. நண்பர் ஆவதே சிறந்தது



730421 - Lecture SB 01.08.29 - Los Angeles

எனவே, இங்கு கூறப்பட்டுள்ளது : ந வேத கஷ்சித் பகவம்'ஷ் சிகீர்ஷிதம் (ஸ்ரீ. பா. 1.8.29). "உங்கள் தோற்றம் மற்றும் மறைவிற்கான காரணங்களை யாரும் அறியமாட்டார். யாரும் அறியமாட்டார்." தவ, தவ ஈஹமானஸ்ய ந்ரு'ணாம்' விடம்பனம் (ஸ்ரீ. பா. 1.8.29). இது குழப்பம் அடையச் செய்கிறது. யாராலும் உண்மையான குறிக்கோள் என்ன என்பதைப் புரிந்துகொள்ள முடியாது. உண்மையான குறிக்கோள் அவருடைய சுதந்திரம் ஆகும். "நான் போய் பார்க்கிறேன்." அவர் அசுரர்களை கொல்வதற்காக வரத் தேவையில்லை. அதற்காக பல சேவகர்கள் இருக்கிறார்கள். அதாவது, ஒரு பலமான காற்று வீசினால், ஆயிரக்கணக்கான அசுரர்கள் ஒரே நொடியில் கொல்லப்படலாம். எனவே அசுரர்களைக் கொல்வதற்கு கிருஷ்ணர் வரத் தேவையில்லை. மேலும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் அவர் வரத் தேவையில்லை. வெறும் அவருடைய விருப்பத்தினாலேயே, அனைத்தும் நடக்கிறது. ஆனால் இந்த லீலைகளில் அவர் மகிழ்ச்சி அடைகிறார், "நான் போய் பார்க்கிறேன்."

சில சமயம் அவர் சண்டை போட விரும்புகிறார். சண்டை போடும் தன்மை கிருஷ்ணரிடம்கூட இருக்கிறது. இல்லையென்றால் நாம் எங்கிருந்து பெற்றோம்? நாம் கிருஷ்ணருடைய அங்க துணுக்கு என்பதால், கிருஷ்ணருடைய எல்லா குணங்களும் நம்மிடம் துளியளவு உள்ளது. நாம் கிருஷ்ணருடைய மாதிரிகளே. இல்லையென்றால் நாம் எங்கிருந்து இந்த சண்டை போடும் தன்மையை பெற்றோம்? சண்டை போடும் தன்மை கிருஷ்ணரிடம் இருக்கிறது. எனவேதான், ஒரு பெரிய மனிதன் அல்லது அரசன், ஏதாவது ஒரு மல்யுத்த வீரனை சண்டையிடுவதில் ஈடுபடுத்துவதை போல. அரசனுடம் சண்டை போடுவதற்கு, அவனுக்கு ஊதியம் வழங்கப்படும். ஆனால் அவன் அரசனின் எதிரி அல்ல. சண்டை இடுவதால், இந்த போலி சண்டையினால் அவன் அரசனுக்கு மகிழ்ச்சியை தருகிறான்.

அதைப் போலவே, கிருஷ்ணர் போரிட விரும்பும் போது, யார் அவருடன் போர் செய்வார்கள்? அவரது பக்தர்களில் யாராவது ஒருவர், உயர்ந்த பக்தர் தான் அவருடன் சண்டையிட முடியும். சாதாரணமானவன் அல்ல. ஒரு அரசனைப் போல, அவர் ஒரு போலிச் சண்டையில் பயிற்சி செய்ய விரும்புவது போல, அதில் ஒரு உயர்ந்த வீரன், மல்யுத்த வீரன் ஈடுபடுத்த படுவான். அதைப்போலவே.... அதுவும்கூட சேவைதான். காரணம் கிருஷ்ணர் சண்டையிட விரும்புகிறார், எனவே அவரது பக்தர்கள் சிலர் அவருடைய எதிரியாவதற்காக வருகிறார்கள். ஜெய விஜயனை போல. ஹிரண்யகசிபுவும் ஹிரண்யாக்ஷனும். அவர்கள் சாதாரண உயிர்வாழிகள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அப்படியானால்...... நரசிம்மதேவர், கடவுளே அவனை கொல்ல வந்தார். அவர்கள் சாதாரணமானவர்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இல்லை அவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. அவர்கள் பக்தர்கள். ஆனால் கிருஷ்ணர் சண்டையிட விரும்பினார். வைகுண்ட லோகத்தில், சண்டையிடுவதற்கான வாய்ப்பே இல்லை காரணம் அங்கே, அனைவரும் கிருஷ்ணருடைய சேவையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். யாரிடம் அவர் சண்டை போடுவார்? (சிரிப்பு) எனவேதான் அவர் சில பக்தர்களை எதிரியின் தோற்றத்தில் அனுப்புகிறார், பிறகு அவருடன் சண்டை போடுவதற்காக கிருஷ்ணரே வருகிறார்.

அதே சமயத்தில், எதிரி ஆவது, கிருஷ்ணருடைய எதிரி ஆவது மிக லாபகரமானது அல்ல என்று நமக்கு கற்றுத் தர வருகிறார். நண்பர் ஆவதே சிறந்தது. அது லாபகரமானதும் கூட. (சிரிப்பு) எனவேதான் ந வேத கஷ்சித் பகவம்'ஷ் சிகீர்ஷிதம் (ஸ்ரீ. பா. 1.8.29) என்று கூறப்பட்டிருக்கிறது. "உங்கள் தோற்றம் மற்றும் மறைவின் காரணத்தை யாரும் அறிய மாட்டார்கள்." தவ ஈஹமானஸ்ய ந்ரு'ணாம்' விடம்பனம். "நீங்கள் இந்த உலகத்தில் ஒரு சாதாரண மனிதனைப் போல் தோன்றுகிறீர்கள். இது குழப்பம் அடையச் செய்கிறது." எனவே சாதாரண மனிதனால் நம்ப முடியாமல் போகிறது. "எப்படி கடவுள் ஒரு சாதாரண மனிதனைப் போல் ஆக முடியும்...? கிருஷ்ணர் விளையாடிக் கொண்டிருக்கிறார். அவர் சாதாரண நபர்களுடன் விளையாடுவதில்லை. அவர் ஒரு கடவுளை போல விளையாடுகிறார். தேவை ஏற்படும்போது......

16,000 மனைவியரை அவர் மணந்து கொண்டதை போல... அவர் திருமணம் செய்து கொண்டபோது அவர் ஒருவர்தான், 16 ஆயிரம் பெண்கள் கிருஷ்ணரிடம் சரணடைந்தனர்: "நாங்கள் கடத்தப்பட்டிருக்கிறோம். நாங்கள் வீடு திரும்பினால் யாரும் எங்களை திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள்." இது வேத முறையின் கடுஞ்சட்டம் ஆகும். ஒரு திருமணமாகாத பெண் தன் வீட்டை விட்டு வெளியேறினால், அது ஒரு இரவுக்கு ஆனாலும்கூட, யாரும் அவளைத் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள். இது இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. யாரும் அவளை திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள். இது பழைய முறை ஆகும். பௌமாசுரனால் கடத்தப்பட்டு இருந்த 16000 பெண்களும்..... கிருஷ்ணரிடம் பிரார்த்தனை செய்து கொண்டனர், கிருஷ்ணரும் வந்து பௌமாசூரனைக் கொன்று, எல்லா பெண்களையும் விடுவித்தார். எனவே கிருஷ்ணர், "நீங்கள் இப்போது பாதுகாப்பாக உங்களுடைய தந்தையின் வீட்டிற்கு திரும்பலாம்." என்று கூறினார். அவர்கள் பதிலளித்தனர்: "ஐயா, நாங்கள் இப்போது எங்கள் தந்தையின் வீட்டிற்கு திரும்பினால், எங்கள் கதி என்ன?" யாரும் எங்களை திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள். ஏனெனில் இந்த மனிதன், இந்த அசுரன் எங்களை கடத்தி விட்டான்." "பிறகு உங்களுக்கு என்ன வேண்டும்?" "நீங்கள் எங்களுடைய கணவராக வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்." கிருஷ்ணர் மிகவும் கருணை வாய்ந்தவர். "ஆம்." உடனே அவர் ஏற்றுக் கொண்டார். அதுதான் கிருஷ்ணர்.

இப்போது, இந்த 16,000 மனைவிகளும் வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட போது, கிருஷ்ணரை சந்திப்பதற்காக 16 ஆயிரம் இரவுகள் காத்திருக்க வேண்டியிருக்கும் என்பதல்ல, (சிரிப்பு) கிருஷ்ணர் தன்னை 16,000 வடிவங்களாக விரிவுபடுத்திக் கொண்டு, 16,000 மாளிகைகளைக் கட்டி, ஒவ்வொரு மாளிகையிலும்... இந்த விளக்கம் இருக்கிறது........ இதுதான் பகவான். எனவே அயோக்கியர்கள், இதனை புரிந்துகொள்ள முடியாது. அவர்கள் கிருஷ்ணரை, அவர் மிகவும் காம வசப்பட்டவர் என்று குறை கூறுகின்றனர். அவர் 16,000 மனைவிகளை மணந்து கொண்டார் (சிரிப்பு). அவர் காம ஆசை கொண்டாலும், அவர் எல்லையற்ற காமத்தை உடையவர்.(சிரிப்பு). காரணம் அவர் எல்லையற்றவர். 16,000 என்ன? அவர் 16 கோடி மனைவியரை மணந்தாலும், அது பத்தாமல் தான் இருக்கும். அதுதான் கிருஷ்ணர்.