TA/Prabhupada 0921 - மேதகு நிக்சனுடன் சகவாசம் கொண்டால், நீங்கள் பெருமையடைய மாட்டீர்களா



730422 - Lecture SB 01.08.30 - Los Angeles

ஒரு பக்கம் மட்டும் செயல்பட முடிந்தால்.... அதுவும் பக்குவமானதல்ல. உங்களால் இன்னும் பெரிய விஷயங்களை உருவாக்க முடிவதாக வைத்துக் கொள்வோம். நவீன உலகில் மிகப்பெரும் ஒன்றை அவர்கள் உருவாக்கி விட்டதாக எனக்குத் தோன்றவில்லை. நாம் பாகவதத்தில் இருந்து தகவல்களை பெறுகிறோம். கர்தம முனிவர் கபிலதேவரின் தந்தை, அவர் ஒரு விமானத்தை, ஒரு பெரும் நகரத்தை உருவாக்கினார். ஏரிகள், பூங்காக்கள், பெரும்பெரும் வீடுகளுடன் கூடிய விதிகள், ஒரு பெரும் நகரம். இந்த மொத்த நகரமும், பிரபஞ்சம் முழுக்க பறந்துகொண்டிருந்தது. மேலும் கர்தம முனிவர், தன்னுடைய மனைவிக்கு எல்லா கிரகங்களையும் எல்லா கிரகங்களையும் காண்பித்தார். அவர் ஒரு மிகப்பெரும் யோகி, மேலும் அவருடைய மனைவி தேவஹூதி, அவர், வைவஸ்வத மனுவின் மகள், மிகப்பெரும் அரசரின் மகள். கர்தம முனிவர், திருமணம் செய்து கொள்ள விரும்பினார் ஆசைப்பட்டார். உடனே வைவஸ்வத மனு..... அவர் மகள் தேவஹூதி, அவளும் கூறினாள்: "எனது அன்புத் தந்தையே, நான் இந்த முனிவரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்." எனவே அவர் தன் மகளை அழைத்து வந்தார்: "ஐயா, இதோ என்னுடைய மகள். நீங்கள் இவளை உங்கள் மனைவியாக ஏற்றுக் கொள்ளுங்கள்." அவள் அரசரின் மகள், மிகுந்த செல்வ வளம் மிக்கவர், ஆனால் தன் கணவரிடம் வந்து, இரவும் பகலும் வேலை செய்து, போதிய உணவும் இல்லாமல், உடல் மெலிந்து, மெல்லியவள் ஆகும் படியாக அதிக சேவை செய்ய வேண்டியிருந்தது.

எனவே கர்தம முனிவர் சிறிது இரக்கம் கொண்டார்: "இந்தப் பெண் என்னிடம் வந்திருக்கிறாள். அவள் அரசனின் மகள், மேலும் என்னுடைய பாதுகாப்பில் அவள் எந்த வசதியையும் பெறவில்லை. எனவே நான் அவளுக்கு சில வசதிகளை அளிக்க வேண்டும்." அவர் தன் மனைவியிடம் கேட்டார்: "நீ எப்படி வசதியாக இருக்க விரும்புகிறாய்?" பெண்களுடைய இயல்பு, ஒரு நல்ல வீடு, நல்ல உணவு, நல்ல ஆடைகள், நல்ல குழந்தைகள் மற்றும் நல்ல கணவன். இதுதான் ஒரு பெண்ணின் இலட்சியம். எனவே அவர் தன் மனைவியிடம் தான் ஒரு நல்ல கணவன் என்று நிரூபித்தார். அவர் அவளுக்கு முதலில், எல்லா செல்வ வளங்களையும், பெரிய பெரிய வீடுகள், பணிப்பெண்கள், வசதிகளையும் அளித்தார். மேலும் இந்த விமானம், அவரால் யோக முறையில் உருவாக்கப்பட்டது. கர்தம முனிவர், ஒரு மனிதன். அவராலேயே இப்படிப்பட்ட அற்புதங்களை யோகமுறையால் செய்ய முடிந்தது என்றால்.... மேலும் கிருஷ்ணர் யோகேஸ்வரர். எல்லா யோக சக்திகளின் தலைவர். கிருஷ்ணர், பகவத் கீதையில் கிருஷ்ணர் யோகேஸ்வர என்று அழைக்கப்படுகிறார். சிறிய யோக சக்திகளைப் பெற்றால் கூட நாம் முக்கியமான, ஒரு பெரும் மனிதர் ஆகி விடுகிறோம். மேலும் இங்கு எல்லா யோக சக்திகளின் தலைவர். யத்ர யோகேஷ்வரோ ஹரி: (ப.கீ. 18.78). பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது என்னவென்றால், எங்கெல்லாம் யோகேஸ்வரரான ஹரி இருக்கிறாரோ, கிருஷ்ணர், பரமபுருஷ பகவான், எல்லா யோக சக்திகளின் தலைவர் இருக்கிறாரோ, மேலும் எங்கு வில்லாளியான அர்ஜுனன், பார்த்தன், இருக்கின்றாரோ அங்கு எல்லாமே இருக்கிறது. எல்லாமே இருக்கிறது.

எனவே நாம் இதை நினைவில் கொள்ள வேண்டும். அதாவது நீங்கள் உங்களை எப்போதும் கிருஷ்ணருடைய சகவாசத்தில் வைத்துக் கொண்டால் பிறகு எல்லா பக்குவமும் இருக்கும். யத்ர யோகேஷ்வரோ ஹரி: எல்லாப் பக்குவமும் இருக்கும். மேலும் கிருஷ்ணர் குறிப்பாக இந்த யுகத்தில், செய்து முடித்தார். நாம-ரூபே கலி-காலே க்ரு'ஷ்ண-அவதார, கிருஷ்ணர் இந்த யுகத்தில் திருநாமம் ஆக அவதரித்துள்ளார். எனவேதான் சைதன்ய மஹாபிரபு கூறுகிறார்: "என் அன்பிற்குரிய பகவானே, உங்கள் திருநாம வடிவில் எனக்கு உங்களுடைய சகவாசத்தை அளிக்கும் அளவிற்கு நீங்கள் மிகுந்த கருணை வாய்ந்தவராக இருக்கிறீர்கள்." நாம்னாம் அகாரி பஹுதா நிஜ-ஸர்வ-ஷக்திஸ் தத்ரார்பிதா நியமித: ஸ்மரணே ந கால: (சை.சரி அந்த்ய 02.16, சிக்க்ஷாஷ்டகம் 2). "மேலும் இந்தத் திருநாமம் எந்த சூழ்நிலையிலும் உச்சரிக்கலாம். எந்த விதிமுறைகளும் இல்லை." நீங்கள் இந்த ஹரே கிருஷ்ணா ஜபத்தை எங்கு வேண்டுமானாலும் சொல்லலாம்.

இந்தக் குழந்தைகளைப் போல, அவர்களும் ஜபம் செய்கின்றார்கள், அவர்களும் ஆடுகிறார்கள். இது கடினமானது அல்ல. நம்முடைய மாணவர்கள் நடந்து செல்லும்போதும், தங்களுடைய ஜபமாலையை எடுத்துச் செல்வார்கள். அவர்கள் கடற்கரையில் நடக்கின்றார்கள், என்றாலும் ஜெபம் செய்கிறார்கள். என்ன நஷ்டம்? ஆனால் லாபம் மிகப்பெரியது, நாம் கிருஷ்ணருடன் தனிப்பட்ட முறையில் சகவாசம் கொள்கிறோம். லாபம் மிகப் பெரியது. நீங்கள் மிகவும் பெருமை கொண்டீர்கள் என்றால்..... நீங்கள் தனிப்பட்ட முறையில், ஜனாதிபதி நிக்சனுடன் சகவாசம் கொண்டால், எவ்வளவு பெருமை அடைவீர்கள்? "ஓ, நான் ஜனாதிபதி நிக்ஸனுடன் உள்ளேன்." நீங்கள் மேதகு நிக்சன் உடன் சகவாசம் கொண்டால் பெருமை அடைய மாட்டீர்களா?(சிரிப்பு) யாரால் கோடிக்கணக்கான நிக்சன்களை உருவாக்க முடியும்?

எனவே இது உங்களுக்கான வாய்ப்பு. எனவே தான் சைதன்ய மஹாபிரபு கூறுகிறார்: ஏதாத்ரு'ஷீ தவ க்ரு'பா பகவன் மமாபி (சை சரிஅந்த்ய 02.16, சிக்க்ஷாஷ்டகம் 2). "என் இனிய பகவானே, நீங்கள் என் மீது மிகுந்த கருணை உடையவராக இருப்பதால், உங்கள் சகவாசத்தை எப்போதும் தொடர்ந்து வழங்குகிறீர்கள். நீங்கள் தயாராக இருக்கிறீர்கள். நீங்கள் அளிக்கிறீர்கள். துர்தைவம் ஈத்ரு'ஷம் இஹாஜனி நானுராக:. ஆனால் நான் பெரும் துரதிர்ஷ்டசாலியாக உள்ளேன். நான் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவில்லை." துர்தைவ. துரதிருஷ்டம். நம்முடைய இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் எல்லா மக்களையும் "ஹரே கிருஷ்ணா ஜெபம் செய்யுங்கள்" என்று வேண்டுகோள் வைக்கிறது.