TA/Prabhupada 0929 - குளிப்பது, அதுவும் பழக்கத்திலேயே இல்லை. வாரத்திற்கு ஒரு முறை வேண்டுமானாலும் இருக்கலா



730424 - Lecture SB 01.08.32 - Los Angeles

மொழிபெயர்ப்பு : "சிலர் புண்ணிய அரசர்களின் கீர்த்திக்காக பிறப்பற்றவரான நீர், பிறப்பெடுத்திருக்கின்றீர்கள் என்று கூறுகிறார்கள், வேறு சிலரோ உமது சிறந்த பக்தர்களில் ஒருவரான மன்னர் யதுவை மகிழ்விப்பதற்காக நீர் பிறப்பெடுத்து இருக்கின்றீர் என்று கூறுகின்றனர். நீர் அவருடைய குலத்தில், மலைய பர்வதத்தில் சந்தன மரம் தோன்றி உள்ளதைப்போல அவதரித்துள்ளீர்."

பிரபுபாதர்: அதாவது 2 மலயாக்கள் உள்ளன. ஒன்று மலய பர்வதம், இன்னொன்று மலேயா, மலேசியா, என்று இன்று அறியப்படுவது. முற்காலத்தில், உலகின் இந்தப் பகுதி, மலேசியா, அதிகமாக, மிக அதிகமாக, சந்தனம் விளையும் இடமாக இருந்தது. ஏனெனில், 5000 வருடங்களுக்கு முன்பு, சந்தனத்திற்கு நல்ல தேவை இருந்தது. ஒவ்வொரு மனிதனும் சந்தன குழம்பை பயன்படுத்துவார்கள். காரணம் இந்தியா, ஒரு வெப்பமான நாடு. இது ஒரு நல்ல அழகு சாதன பொருள். இன்னும் கூட, வசதி படைத்தவர்கள் கோடை காலத்தில் வெப்பம் மிகுந்த நாட்களில், சந்தனத்தை உங்கள் உடலில் தடவினால், நீங்கள் வெப்பத்தை உணர மாட்டீர்கள். அது குளிர்ச்சியைத் தரும். ஆம்.

இந்தப் பழக்கம்... இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது, ஆனால் மிகச் சிறிய அளவில். அதாவது ஒவ்வொருவரும், குளித்த பின்னர், சந்தன குழம்பை உடல் முழுவதும் பூசிக் கொள்வார்கள். அது நாள் முழுவதும் உடலை குளிர்ச்சியாகவும், அமைதியாகவும் வைத்துக் கொள்ளும். எனவே அது அழகுசாதனப் பொருள். இப்போது இந்தக் கலியுகத்தில் இது ப்ரஸாதனம் என்று அழைக்கப்படுகிறது. எல்லா நாடுகளிலும் இந்தப் பழக்கம் உள்ளதைப்போல, அதாவது குளித்த பின்னர், நீங்கள் தலையை அலங்கரித்து ஏதாவது வாசனை திரவத்தை பயன்படுத்துவீர்கள். இந்தியாவில் பழக்கம் என்னவென்றால், குளித்து முடித்த பின், திலகம் தரித்து, விக்ரக அறைக்குச் சென்று, நமஸ்காரம் செய்து, அதற்குப்பின் பிரசாதம், விக்ரக அறையிலிருந்து சந்தன பிரசாதம் எடுத்து பயன்படுத்தப்பட்டது. இதற்குப் பெயர் பிரஸாதனம். இந்த கலியுகத்தில்: ஸ்நானம் ஏவ ஹி ப்ரஸாதனம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஒருவன் நன்றாக குளித்தால் அதுவே பிரஸாதனம். அவ்வளவுதான். எந்த அழகு சாதனப் பொருள், சந்தனமும், பன்னீரும், கிடையாது. அதெல்லாம் முடிந்தது. ஸ்னானம் ஏவ ப்ரஸாதனம் (ஸ்ரீ. பா. 12.2.5). வெறும் குளிப்பது மட்டுமே..

ஆரம்பத்தில் நான் இந்தியாவில் இருந்தபோது.... குளிப்பது என்பது ஒரு மிகச் சாதாரண விஷயம், ஏனெனில் ஏழை மனிதன் கூட அதிகாலையில் குளிப்பான். ஆனால் உண்மையில் நான் உங்கள் நாட்டிற்கு வந்த பின்பு பார்த்தேன், குளிப்பது கூட மிகக் கடினமான விஷயம் (சிரிப்பு). குளிப்பது கூட வழக்கத்தில் இல்லை. வாரத்திற்கு ஒரு முறை வேண்டுமானால் இருக்கலாம். இந்தியாவில் ஒரு நாளைக்கு மூன்று முறை குளிப்பதைப் பார்த்துப் பழக்கப்பட்டு இருக்கிறேன். மேலும் நியூயார்க்கில் நான் பார்த்தேன், தங்கள் வீட்டில் குளிப்பதற்கு வசதி இல்லாத காரணத்தினால், நண்பர்கள், மற்றொரு நண்பரின் வீட்டிற்கு வருகின்றனர். அதற்காக ஒரு நண்பரின் வீட்டிற்கு வருகின்றனர். இல்லையா? நான் இதை பார்த்திருக்கிறேன். ஆக கலியுகத்தின் அறிகுறிகள் விளக்கப்பட்டுள்ளது அதாவது குளிப்பது கூட மிகவும் கடினமாக இருக்கும். ஸ்னானம் ஏவ ஹி ப்ரஸாதனம்.

அந்த் தாக்ஷ்யம்' குடும்ப-பரணம். தாக்ஷ்யம் . தாக்ஷ்யம் என்றால் புண்ணியச் செயல்களுக்கு புகழ்பெற்றவர். அவர் தா3க்ஷ்யம் என்று அழைக்கப்படுகிறார். இது த3க்ஷ என்ற வார்த்தையில் இருந்து வருகிறது. தக்ஷ என்றால் நிபுணர். தாக்ஷ்யம்' குடும்ப-பரணம். கலியுகத்தில், ஒருவர் தன்னுடைய குடும்பத்தை பராமரிக்க முடிந்தால்,.... குடும்பம் என்றால் மனைவி, சில குழந்தைகள், ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள். இதுதான் குடும்பம் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில், குடும்பம் என்றால் இப்படி அல்ல. குடும்பம் என்றால் ஒரு கூட்டுக்குடும்பம். கூட்டுக்குடும்பம், தந்தை, மகன்கள் சகோதரர்கள், சகோதரிகள், கணவன்மார்கள். அவர்கள் அனைவரும் சேர்ந்து இருப்பர். இதுதான் குடும்பம் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் கலியுகத்தில், குடும்பத்தை பராமரிப்பது கூட கடினமாக இருக்கும். ஒருவன் தன் குடும்பத்தை பராமரிக்க முடிந்தால்....

நான் நியூயார்க்கில் இருந்தபோது ஒரு வயதான பெண்மணி வந்து கொண்டிருந்தார். அவருக்கு ஒரு வளர்ந்த மகன் இருந்தான் நான் அவரைக் கேட்டேன்: "நீங்கள் ஏன் உங்கள் மகனுக்கு திருமணம் முடிக்க கூடாது." "ஆம். அவன் தன் குடும்பத்தை பராமரிக்க முடிந்தால் அவன் திருமணம் செய்து கொள்ளலாம்." எனக்குத் தெரியாது, குடும்பத்தை பராமரிப்பது இங்கு கடினமான வேலை என்று எனக்கு தெரியாது. எனவே இவையெல்லாம் பாகவதத்தில் விளக்கப்பட்டுள்ளன. ஒருவன் குடும்பத்தை பராமரிக்க முடிந்தால், அவன் மிகவும் புகழ் பெற்றவன் "ஓ, அவன் 5 பேரை பராமரிக்கிறான்(?)". ஒரு பெண்ணிற்கு கணவன் இருந்தால், அவள் மிக அதிர்ஷ்டசாலியாக கருதப்படுகிறாள். உண்மையில் இந்த விஷயங்கள் எல்லாம் இருக்கின்றன.