TA/Prabhupada 0940 - ஆன்மீக உலகம் என்றால் வேலை இல்லை. ஆனந்தம் மட்டுமே எனவே



730427 - Lecture SB 01.08.35 - Los Angeles

இங்கே இந்த பௌதிக உலகில், யார் பிறந்திருக்கிறாரோ, அவர் தன்னை பற்றி, "நான் கௌரவிக்கப்பட்ட விருந்தினர் அல்லது மரியாதைக்குரிய மருமகன்." என்று நினைக்கக்கூடாது. இல்லை. எல்லோரும் வேலை செய்ய வேண்டும். நீங்கள் பார்க்கிறீர்கள், முழு உலகமும். உங்கள் நாட்டில் ஜனாதிபதி இருக்கிறார் - அவரும் இரவும் பகலும் கடுமையாக உழைக்கிறார். இல்லையெனில் அவர் தனது ஜனாதிபதி பதவியை தக்க வைத்திருக்க முடியாது. அது சாத்தியமில்லை. முழு மூளையும் அரசியல் விவகாரங்களால் நெரிசலானது. பல பிரச்சினைகள், தீர்வுகள். அவர் வேலை செய்ய வேண்டும். இதேபோல், தெருவில் ஒரு மனிதன், அவனும் வேலை செய்ய வேண்டும். இது இயல்பு, பௌதிக இயல்பு. நீ வேலை செய்ய வேண்டும். அது ஆன்மீக உலகம் அல்ல. ஆன்மீக உலகம் என்றால் வேலை இல்லை. அங்கு வெறுமனே மகிழ்ச்சி மட்டுமே. கிருஷ்ணர் புத்தகத்தைப் படிப்பதில் இருந்து நீங்கள் பார்க்கிறீர்கள். அவர்கள் வேலை செய்யவில்லை. கிருஷ்ணர் கன்றுகள் மற்றும் மாடுகளுடன் செல்கிறார். அது வேலை செய்வது போல் ஆகாது. அது கேளிக்கை. அது கேளிக்கை. அவர்கள் நடனமாடுகிறார்கள், அவர்கள் காட்டுக்குச் செல்கிறார்கள், அவர்கள் கங்கைக் கரையில் அமர்ந்திருக்கிறார்கள். சில நேரங்களில் அசுரர்கள் தாக்குகின்றனர், கிருஷ்ணர் கொல்கிறார். இது எல்லாம் இன்பம், கேளிக்கை. ஆனந்த-மயோ 'ப்யாஸாத். அது ஆன்மீக உலகம் ஆன்மீக செயல்பாட்டின் மாதிரியை எடுத்துக் கொள்ளுங்கள். நாங்கள்.... எங்களுக்கு பல கிளைகள் உள்ள, பல உறுப்பினர்கள் உள்ளனர், ஆனால் நாங்கள் வேலை செய்யவில்லை. எளிய, ஆன்மீக வாழ்க்கையின் மாதிரி. எங்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் பொறாமைப்படுகிறார்கள்: "இந்த மக்கள் எப்படி நடனமாடுகிறார்கள், கோஷ மிடுகிறார்கள், சாப்பிடுகிறார்கள்?" (சிரிப்பு) ஏனென்றால் அவர்கள் பூனைகள் மற்றும் நாய்களைப் போல கடினமாக உழைக்கிறார்கள், எங்களுக்கு அத்தகைய பொறுப்பு இல்லை. நாங்கள் அலுவலகம் அல்லது தொழிற்சாலைக்கு செல்ல வேண்டியதில்லை. நடைமுறை உதாரணம் பாருங்கள். இது ஆன்மீக வாழ்க்கையின் ஒரு சிறிய சாயல் மட்டுமே. வெறுமனே நீங்கள் ஆன்மீக வாழ்க்கைக்கு வர முயற்சிக்கிறீர்கள், ஒரு மாதிரி. மாதிரியில் மிகவும் இன்பம் இருக்கிறது, மாதிரியில், உண்மை என்னவென்று கற்பனை செய்து பாருங்கள். யார் வேண்டுமானாலும் உணர முடியும். நடைமுறையில் ஒத்து வரும். நீங்கள் ஆன்மீக வாழ்க்கைக்கு வாருங்கள், நாங்கள் அழைக்கிறோம்! "தயவுசெய்து வாருங்கள், எங்களுடன் சேருங்கள். கோஷமிடுங்கள், எங்களுடன் நடனமாடுங்கள். பிரசாதம் எடுத்துக் கொள்ளுங்கள், மகிழ்ச்சியாக இருங்கள்." "இல்லை, இல்லை, நாங்கள் வேலை செய்வோம்."(சிரிப்பு) சற்றுப் பாருங்கள். எங்கள் வேலை என்ன? "தயவுசெய்து வாருங்கள்" என்று நாங்கள் வெறுமனே பிரச்சாரம் செய்கிறோம். "இல்லை." "ஏன்?" "நான் பூனைகள் மற்றும் நாய்களைப் போல வேலை செய்வேன்," அவ்வளவுதான். எனவே, புரிந்து கொள்ள முயற்சிக்கவும். ஆன்மீக வாழ்க்கைக்கும் பௌதிக வாழ்க்கைக்கும் உள்ள வித்தியாசம் இதுதான். பௌதிக வாழ்க்கை என்றால் நீங்கள் வேலை செய்ய வேண்டும். நீங்கள் கட்டாயப் படுத்தப்படுவீர்கள். அவித்யா-கர்ம-ஸம்ஜ்ஞான்யா த்ருதீயா ஷக்திர் இஷ்யதே (சை.ச. ஆதி 7.119). விஷ்ணு புராணத்தில் கிருஷ்ணரின் ஆற்றலை பகுப்பாய்வு செய்யும் போது விஷ்ணு-ஷக்தி: பரா ப்ரோக்தா. என்று கூறப்படுகிறது. விஷ்ணு, விஷ்ணுவின் ஆற்றல் பரா, உயர்ந்த ஆற்றல் அல்லது ஆன்மீக ஆற்றல். பரா. பரா மற்றும் அபரா, நீங்கள் பகவத் கீதையில் படித்திருக்கிறீர்கள். அபரேயம் இதஸ் து விதி மே ப்ரக்ருதிம் பரா (ப.கீ. 7.5). கிருஷ்ணர் பகுப்பாய்வு செய்யும் போது, ​​இரண்டு வகையான இயல்பு, பரா மற்றும் அபரா, தாழ்வான மற்றும் உயர்ந்தது. இது இயற்கை. பூமிஹ், ஆப:, அனலோ, வாயு:  நிலம், நீர், நெருப்பு, காற்று. இதுவும் கிருஷ்ணரின் இயல்பு. கிருஷ்ணர் கூறுகிறார் விதி மே ப்ரக்ருதி: அஷ்டதா. "இந்த எட்டு வகையான பௌதிக இயல்பு, அவை என் இயல்பு, அவை என் ஆற்றல். ஆனால் அவை அபரேயம். ஆனால் இது தாழ்வான ஆற்றல். மற்றொரு, உயர்ந்த இயல்பு உள்ளது." "அது என்ன, ஐயா?" ஜீவ-பூத, இந்த வாழ்க்கை ஆற்றல். இந்த மோசடிகள், இரண்டு இயல்புகள் செயல்படுகின்றன என்று அவர்களுக்குத் தெரியாது-பௌதிக இயல்பு மற்றும் ஆன்மீக இயல்பு. ஆன்மீக இயல்பு பௌதிக இயல்புக்குள் உள்ளது; எனவே அது வேலை செய்கிறது. இல்லையெனில் பௌதிக இயல்புக்கு சுதந்திரமாக வேலை செய்ய சக்தி இல்லை. விஞ்ஞானிகள் என்று அழைக்கப் படுபவர்களுக்கு இந்த எளிய விஷயம் புரியவில்லை.