TA/Prabhupada 0980 - பௌதிக செல்வத்தினால் ஒருவர் சந்தோஷம் கொள்ள முடியாது என்பது உண்மை



720905 - Lecture SB 01.02.06 - New Vrindaban, USA

பிரத்யும்ன: மொழிபெயர்ப்பு: "மனித சமுதாயத்தின் முதன்மையான தொழில் அல்லது தர்மம் பகவானின் பக்தித் தொண்டில் அவனை கொண்டு செல்வதாக இருக்க வேண்டும். அத்தகைய பக்தி தொண்டு உள்நோக்கம் அற்றதாகவும், தடைகளற்றதாகவும் இருக்க வேண்டும் அதுவே ஆன்மாவை திருப்திப்படுத்தும்.

பிரபுபாதர்: ஆக...

ஸ வை பும்ஸாம் பரோ தர்மோ
யதோ பக்திர் அதோக்ஷஜே
அஹைதுக்யப்ரதிஹதா
யயாத்மா ஸுப்ரஸீததி
(ஸ்ரீ.பா. 1.2.6)

அனைவரும் திருப்தியை நாடுகின்றனர், அத்யந்திக்ஷு. இறுதியான மகிழ்ச்சியை அடைவதற்காகவே ஒவ்வொருவரும் பாடுபடுகின்றனர். ஆனால் இந்த பௌதிக உலகத்தில், அவர்கள் சிந்தித்த போதிலும் சேர்ப்பதனால் திருப்தி அடையலாம் என்று எண்ணுகின்றனர் ஆனால் அது உண்மையல்ல. உதாரணத்திற்கு உங்கள் நாட்டில், இயற்கை வளம் அதிகமாக உள்ளது பிற நாடுகளைவிட, இருப்பினும் இங்கே திருப்தி இல்லை. பௌதிக ஆனந்தத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் இருக்கின்ற போதிலும், போதிய உணவு, போதிய... நல்ல வீடு, கார், வீதிகள், பாலியல் வாழ்வில் மிகப்பெரிய சுதந்திரத்திற்கான ஏற்பாடு, பாதுகாப்பிற்கும் சிறந்த ஏற்பாடு உள்ளது - அனைத்தும் முழுமையாக உள்ளது - இருப்பினும் மக்கள் திருத்தி இல்லாமல் இருக்கின்றனர், குழப்பத்துடன் இருக்கின்றனர், மேலும் இளைய தலைமுறை, ஹிப்பிகளாக மாறி வருகின்றனர், எதிர்ப்பு, அல்லது அதிருப்தி ஏனெனில் அவர்கள் மகிழ்ச்சியாக இல்லை. நான் இந்த உதாரணத்தை பல இடங்களில் கூறியிருக்கிறேன் லாஸ் ஏஞ்சல்ஸில், பவர்லி ஹில்ஸில் நான் எனது காலை நடைப்பயிற்சி செய்து கொண்டிருக்கும் பொழுது, பல ஹிப்பிகள் ஒரு கவுரவமான வீட்டிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தனர். அவர்கள் தந்தை நல்ல கார் வைத்திருந்தார் போல் கூட தெரிகிறது, ஆனால் அவர்களுடைய உடை என்னவோ ஹிப்பி போலிருந்தது. அங்கு பௌதிக அமைப்பு என்று கூறப்படுவதற்கு ஒரு எதிர்ப்பு நடந்திருக்கிறது, அவர்களுக்குப் பிடிக்கவில்லை. பௌதிக செல்வத்தினால் நாம் ஆனந்தமாக இருக்க முடியாது என்பது உண்மை. ஸ்ரீமத் பாகவதத்திலும் கூறப்பட்டிருக்கிறது. மஹாராஜர் பிரகலாதர் நாத்திகரான தன் தந்தையிடம் கூறுகிறார்... அவருடைய தந்தை ஹிரண்யகஷிபு. ஹிரண்யா என்றால் தங்கம், கஷ்யபு என்றால் பஞ்சு மெத்தை. அதுதான் பௌதிக நாகரிகம். அவர்களுக்கு பஞ்சுமெத்தை வேண்டும், அதில் ஒரு துணை வேண்டும், வங்கியில் போதுமான அளவு பணம் வேண்டும். ஹிரண்யகஷிபு அதற்கு இன்னொரு அர்த்தமும் உள்ளது. எனவே அவன் சந்தோஷமாக இல்லை. ஹிரண்யகஷிபு சந்தோஷமாக இல்லை, தனது மகன் பிரகலாதன் பகவானின் பக்தனாகி கொண்டிருந்தான், அது அவனுக்குப் பிடிக்கவில்லை. எனவே அவன் தன் மகனிடம் கேட்டான், "நீ எப்படி உணர்கிறாய்? நீ மிகச்சிறிய பாலகன், குழந்தை, நான் இத்தனை பயமுறுத்தியும் நீ எப்படி சந்தோஷமாக இருக்கிறாய். உன்னுடைய உண்மையான சொத்து தான் என்ன?" அதற்கு அவன் பதில் சொல்கிறான், "அன்புள்ள தந்தையே, ந தே விது: ஸ்வார்த-கதிம் ஹி விஷ்ணும் (ஸ்ரீ.பா. 7.5.31). முட்டாள்களுக்கு தங்கள் இன்பத்தின் இறுதி இலக்கு முழுமுதற் கடவுளான விஷ்ணு பகவான்." என்று தெரியாது. துராஷயா யே பஹிர்-அர்த-மானின: (ஸ்ரீ.பா. 7.5.31). துராஷயா, துர், நம்பிக்கைக்கு மேல் நம்பிக்கை, நிறைவேறாத ஒன்றின்மேல் அவர்கள் வைக்கின்றனர். அது என்ன? துராஷயா யே பஹிர்-அர்த-மானின:.