TA/Prabhupada 0992 - சந்தர்ப்பவாதிகளுக்கு கிருஷ்ண பக்தி இயக்கம் இல்லை



740724 - Lecture SB 01.02.20 - New York

பக்தித் தொண்டில் அனைத்தும் இருக்கிறது பக்தி ரசாம்ருத சிந்து, பகவான் சைதன்யரின் போதனைகள், ஸ்ரீமத் பாகவதம், பகவத்கீதை ஆகியவை வெளியிடப்படுகின்றன. உங்களுக்கு புரியவில்லை என்றால் இந்த புத்தகங்கள் விலைக்கு வருகின்றன நாம் இதனை நன்கு படித்து இருக்கின்றோம் நாம் அனைத்தும் கற்று விட்டோம் என்று நினைத்தால், முடிந்துவிட்டது. நாம் தொலைந்தோம். அப்படி எண்ணுவது நிலைமையை முன்னேற்றாது.

ப்ரஸன்ன-மனஸோ
பகவத்-பக்தி-யோக
பகவத்-தத்த்வ-விஜ்ஞானம்
(ஸ்ரீ.பா 1.2.20)

அது ஒரு விஞ்ஞானம். விஞ்ஞானத்தை படிக்கும்போது நமது ஸ்வரூப தாமோதரனை போல அறிஞர்- அவர் இப்போது அறிஞர். புது பிருந்தாவனத்தில் நமக்கு இன்னொரு அறிஞரும் இருக்கிறார் அவரும் விஞ்ஞானி. எனவே நீங்கள் அறிஞர் பட்டம் பெறவேண்டும் ஆனால் அதுவும் ஒரு சரணாகதி தான். இவை பொதுத் தன்மைகள் மூன்று நான்கு மனிதர்கள் கொண்ட குழுக்கள் உங்களை ஆராய்ந்து தேர்வு செய்யும் பொழுது " ஆம் இது சரியானது. இன்னார் வழங்கிய இந்த ஆராய்ச்சி ஏற்றுக் கொள்ளப்படுகிறது." என்றால் உங்களுக்கு கிடைத்துவிடும். தத் விஜ்ஞானார்தம் ஸ குரும் ஏவ அபிகச்சேத் (மு.உ 1.2.12). எனவே எங்கும் இந்த உள்ளது. கிருஷ்ணரைப் பற்றிய விஞ்ஞானத்தை அறியும் அக்கறை நம்மிடம் இல்லை என்றால் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு இப்படியாக வேண்டும் என்று நினைத்தால் இப்படி பணம் சம்பாதிக்க வேண்டும் என்றெல்லாம் எண்ணினாள் அனைத்தும் முடிந்துவிடும். சந்தர்ப்பவாதி களுக்கு கிருஷ்ண பக்தி என்பது இல்லை. உண்மையாக சரணடையும் ஆத்மாக்களுக்கு தான் மத்-ஆஷ்ரய:.

ஆக பகவத் தத்துவ விஞ்ஞானம் நாம் அனைவரும் அப்படித்தான் இருக்கிறோம் பகவத் ஞானத்தில் தேர்ச்சி பெற ஆர்வமாக இருக்கின்றோம். அதுவே வழிமுறை. மத்-ஆஷ்ரய:. கிருஷ்ணர் சொல்கிறார் மத்-ஆஷ்ரய:. என்றால் யோகம் யுஞ்ஜன் மத்-ஆஷ்ரய:. கிருஷ்ணருக்கு கீழ் வரவேண்டுமானால் அது சாத்தியமில்லை ஏனெனில் கிருஷ்ணரின் சேவகர் இடம் தஞ்சம் அடையாமல் கோபீ-பர்து: பத-கமலயோர் தாஸ-தாஸாநுதாஸ: (சை.ச மத்ய 13.80, பத்யாவலீ 74)... நாம் கிருஷ்ணருடைய சேவகனுக்கு சேவகனுக்கு சேவகனுக்கு சேவகனாக வேண்டும். "நான் நேரடியாக கிருஷ்ணனின் சேவகனாகுவேன்" என்று ஆசைப்படுவது மாயாவாதம் நம்முடைய வழிமுறை..... சேவகனுக்கு சேவகன் ஆவது சைதன்ய மகாபிரபு போதித்த சேவகனுக்கு சேவகனாகும் முறை நூறாவது தலைமுறை யாக சேவகனாக இருப்பவன் மிகவும் பூரணமானவன் எனவே

பகவத்-தத்த்வ-விஜ்ஞானம்
முக்த-ஸங்கஸ்ய ஜாயதே
(ஸ்ரீ.பா 1.2.20)


இதனை புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். பகவத் தத்துவ விஞ்ஞானம். இந்த அறிவியலை யார் புரிந்து கொள்ளலாம்? முக்த சங்கஸ்ய முக்த என்றால் விடுதலை பெற்ற, சங்க என்றால் இணைந்து சங்கம் என்றால் நாம் எப்போதும் பௌதிக இயற்கையினால் களங்கப்பட்டிருக்கின்றோம். சில சமயங்களில் நாம் நல்லவர்களாக இருக்கிறோம் சில சமயங்களில் ரஜோ குணத்துடன் சில சமயங்களில் அயோக்கியர்களாகவும் இருக்கின்றோம். மூன்று விதமான குணங்கள் உள்ளன. சில நல்லவை. சில ரஜோ குணம், சில தாமச குணம் (கெட்டவை) ஆக நாம் நல்ல தன்மை என்ற தளத்தில் இருந்தும் அப்பாற்பட்டு வரவேண்டும். இதற்குப் பெயர்தான் முக்த சங்க. ஏனெனில் பௌதிக வாழ்வில் இந்த முக்குணங்கள் உடன் தான் நாம் உறவாடி கொண்டிருக்கின்றோம். முக்குணங்கள் குணமயி, மாயா. தைவீ ஹ்யேஷா குண-மயீ. குண-மயீ. குணம் இந்த முக்குணங்கள். இது மிகவும் கடினமானது. நாம் சில சமயம் சத்வ நிலையில் இருக்கிறோம் பின்புஅதன்பின் தமோ குணத்தால் விழுந்து விடுகிறோம். அல்லது தமோ குணத்திலிருந்து சத்வ குணத்திற்கு முயல்கிறோம். மறுபடியும் வீழ்கிறோம். இது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆகவே நாம் இந்த குணங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டு முக்த சங்கஸ்ய ஆகவேண்டும். அனைத்திற்கும் மேல், "நான் நல்ல மனிதன் நான் மிக நல்ல மேலதிகாரி. நான் எப்படிப்பட்டவன்..." என்பதை எல்லாம் கடந்து வரவேண்டும். இதற்குப் பெயர்தான் முக்த சங்கஸ்ய.

இந்த முக்த சங்கஸ்ய சாத்தியம்தான், நாம் ஒழுங்கான பக்தித் தொண்டில் ஈடுபட்டிருக்கும் பொழுது. விக்ரக வழிபாடு போல. விக்ரக வழிபாடு என்பது படிப்படியே நம்மை முக்த ஸங்க நிலைக்கு கொண்டு செல்லும். எனவே விக்ரக வழிபாடு அவசியம். அதற்கு வழிமுறை உள்ளது. அனைவரும் அதிகாலை எழ வேண்டும். குளித்து மங்கள ஆர்த்தி சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு உடை அலங்காரம் மற்றும் மலர் அலங்காரம். இப்படியே எப்போதும் நிலைத்திருந்தால் படிப்படியாக முக்த ஸங்க நிலைக்கு வர முடியும்.