TA/Prabhupada 1001 - க்ருஷ்ண உணர்வு எல்லோர் இதயத்திலும் சயலற்றதாக இருக்கிறது



750713 - Conversation B - Philadelphia

ஸாண்டி நிக்ஸன்: என்னிடம் சில கேள்வீகள் இருக்கின்றன. நான் ஓரு புத்தகத்தை தொகுத்து வழங்க போகிரேன். இது தற்ப்போதய அமெரிகற்களின் சிந்தனையைத் தூண்டும் வகயில் உள்ள ஆன்மீக குருக்களைப் பற்றி இருக்கும். மற்றும் அதையே ஒரு சிறிய கட்டுரையாகவும் வெளியிட விரும்புகிறேன். ந்யூ யார்க் டைம்ஸ பத்திரிகைக்கான இந்த கட்டுரை, முக்கியமான சிலரைப்பற்றி மட்டுமே இருக்கும். மேலும் நான் பிலடெல்பிஃயா பத்திரிகைக்காக, மேம்பட்ட உணர்வின் தீர்க்கதரிசீகள் என்று ஒரு கட்டுரையை தற்பொழுது எழுதிக் கொண்டிறுக்கிறேன். குரிப்பாக இந்த புத்தகத்தை மநதில் வைத்து, என் கேள்வீகள் மக்களுக்கு க்ருஷ்ண உணர்வைப் பற்றி தெரிவிக்குமாரு இருக்கும். அதனால் சில சமயங்களில் நான் தங்களிடம் கேள்வீகளை கேட்பேன், பெரும்பாலாக எனக்கே பதில்கள தெரிந்திருக்கலாம் அல்லது, எனக்கு ஏற்கனவே பதில் தெரிந்த கேள்வியாகவும் இருக்கலாம். ஆனால் நான் கேட்கும் விதம்... ஒரு முட்டாள் கேட்பதுப்போல் இருக்கலாம், இருந்தாலும் நான் செய்யப்போவது அது தான்.

என் முதல் கேள்விக்கான பதில் விரைவானதாக இருக்கலாம்... என்னிடம் பதினைந்துக் கேள்வீகள் இருக்கின்றன. தாங்கள் அனைத்திற்கும் பதிலகள் அளித்தால், எனக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கும். முதல் கேள்வி அடிப்படையானது: க்ருஷ்ண உணர்வு என்றால் என்ன ?

ப்ரபுபாதா : க்ருஷ்ணர் என்றால் கடவுள் மற்றும் நாம் எல்லோருக்கும் க்ருஷ்ணருடன், அதாவது கடவுளுடன் சம்பந்தம் இருக்கிறது. கடவுள் தான் மூலமுதலான தந்தை. ஆகயால் நமக்கு க்ருஷ்ணருடன் நெருக்கமான சொந்தம் இருக்கிறது. நாம் அதை, க்ருஷ்ணர் யார் என்பதை மறந்திருக்கின்றோம். அவருடன் என் சம்பந்தம் என்ன, வாழ்க்கையின் குரிக்கோள் என்ன ? இந்த எல்லா கேள்வீகளும் இருக்கின்றன. எப்பொழுது ஒருவன் இத்தகையான கேள்வீகளில் ஆர்வம் கொள்கிறானோ, அவனை க்ருஷ்ண உணர்வு உள்ளவனாக நாம் அரியலாம்.

சாண்டி நிக்ஸன்: க்ருஷ்ண உணர்வின் வளர்ச்சி எப்படி ஆனது ?

ப்ரபுபாதா: க்ருஷ்ண உணர்வு ஒவ்வொருத்தரின் இதயத்திலும் ஏற்கனவே இருக்கிறது. ஆனால் பௌதீகத்தில் கட்டுப்பட்ட வாழ்வினால், அவர் அதை மறந்திருக்கிறார். ஆகயால் அந்த உணர்வை மீட்டெடுத்து புத்துயிர் தருவது தான் இந்த ஹரே க்ருஷ்ண மகா மந்திரத்தின் ஜபித்தல். அது ஏற்கனவே இருக்கிறது. எடுத்துக்காட்டாக, சில நாட்களுக்கு முன் வரையில் இந்த அமெரிக்க, ஐரோப்பிய ஆணகளுக்கும் பெண்களுக்கும், க்ருஷ்ணர் யார் என்று தெரியவில்லை. ஆனால் நேற்று நீங்கள் கண்டிருப்பீற்கள் எப்படி... ஊர்வலத்தின் முழு நேரமும், அவர்கள் பரவசத்தில் ஆடிப் பாடி கொண்டிருந்தார் என. அது போலியாநது என்று நினைக்கிரீற்களா ? இல்லை. செயற்கையாக யாராலையும் பல மணி நேரமாக ஜபிக்கவோ ஆடவோ முடியாது. அப்படி என்றால் கிருஷ்ண உணர்வின் விழிப்பு. அது ஏற்கனவே இருந்தது; சரியான முறையால் இந்த உணர்வு மீண்டும் விழித்துக்கொண்டிருக்கிறது. இது விளக்கப்பட்டிருக்கிறது,

nitya-siddha kṛṣṇa-bhakti sadhya kabhu naya
śravaṇādi-śuddha-citte karaye udaya
(CC Madhya 22.107)

கிருஷ்ண உணர்வு எல்லோர் இதயங்களிலும் சயலற்ற நிலையில் இருக்கிறது. பக்தர்களோடு தொடர்புக் கொண்ட உடனேயே அது விழித்தெழப் படுகிறது. ஓரு இளம் பெண் அல்லது ஆணைக் கண்டு கவரப் படுவதுப் போல் தான். அந்த உணர்வு ஒரு குழந்தையிலும் இருக்கிறது. அவன் இளமை அடைந்த உடன் அது விழித்தெழப் படுகிறது. இது கற்பனையானது அல்ல. பக்தர்கள் சங்கத்தில் அது விழித்தெழப் படுகிறது. அந்த ஆற்றல் ஏற்கனவே இருக்கிறது, மற்றும் பக்தர்களின் சிறந்த சங்கத்தில், கிருஷ்ணரைப் பற்றி கேட்பதனால், ஒருவர் கிருஷ்ண உணர்வின் நிலைக்கு விழிப்பெழப் படுகிரார்.

சாண்டி நிக்ஸன்: கிருஷ்ண உணர்வுக்கும் கிறிஸ்து உணர்வுக்கும் வித்யாஸம் என்ன ?

ப்ரபுபாதா: கிறிஸ்து உணர்வும் கிருஷ்ண உணர்வு தான், ஆனால் மக்கள் கிறித்துவத்தின் விதிகளை, கட்டுப்பாட்டுகளை பின்பற்றுவதில்லை, ஆகயால் அவர்களின் உணர்வு விழிப்பெழப் படுவதில்லை.. ஏசு நாதரின் கட்டளைகளை அவர்கள் பின்பற்றுவதில்லை. ஆகயால் அவர்கள் உணர்வுள்ள நிலையின் அடிப்படையை அடைவதில்லை.

சாண்டி நிக்ஸன்: கிருஷ்ண உணர்வின் என்த தனித்தன்மை அதை மற்ற மதங்களிருந்து பிரிக்கிறது ? இது ஒரு மதம் தானா ?

ப்ரபுபாதா : மதத்தின் நோக்கம் கடவுளை புரிந்து கொள்வது மற்றும் அவர்மேல் நேசம் கொள்வது. யாருக்கும் கடவுளைப் பற்றி தெரியவில்லை. இன்நிலையில் நேசம் கோள்வதுற்கு வாய்ப்பே இல்லை. கடவுளை எப்படி புறிந்துக் கொள்வது, எப்படி அவர் அன்பை அடைவது, இதற்கான பயற்சி யாருக்குமே இல்லை. கோயிலுக்கு செல்வது மற்றுமே போதும் என்று இருக்கிறார்கள். அங்கே சென்று "கடவுளே, தினசரி நிர்வாகத்திற்க்கானதை வழங்க வேண்டும்." அதுவும் சிலர் தான் செல்கிறார்கள். அதனால் கம்யூனிஸ்ட் கூருகிறார்கள், "சர்சுக்கு செல்வதற்கு அவசியமே இல்லை. தினசரி ரொட்டியை நாங்கள் வழங்குகிரோம்." இப்படியாக, எழை வெகுளி மக்கள், அதே ரொட்டி வேரு இடத்தில் கிடைப்பதால், சர்சுக்கு செல்வதில்லை. ஆனால் யாரும், கடவுள் என்றால் என்ன, எப்படி அவர் அன்பை அடைவது, இதை கம்பீரமாக எடுத்துக்கொள்வதில்லை. ஒருவரும் உண்மையான ஆர்வம் செலுத்துவதில்லை. ஆகயால் பாகவதத்தில் இதை யேமாற்றும் மதம் என்று கூறப்படுகிறது. நான் ஒரு மதத்தை போதிக்கிறேன், ஆனால் எனக்கு கடுவுள் என்றால் என்ன மற்றும் அவர் அன்பை அடைவது எப்படி என்று தெரியாது. இப்படிப் போன்ற மதம் தான் யேமாற்றும் மதம். மதம் என்றால் கடவுளைப் புறிந்துக் கொண்டு அவர் அன்பை அடைவது. ஆனால் பொதுவாக, ஒரு மனிதனுக்கு கடவுள் என்றால் என்னவென்றே தெறியாது, அவர் மேல் அன்பு கொள்வதற்கான வாய்ப்பே இல்லை. இப்படி தான் யேமாத்து மதங்கள். அது மதமே இல்லை. ஆனால் கிறித்துவத்தை பொறுத்த வரையில், கடவுளை புறிந்துக் கொள்ள ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன, ஆனால் அவர்கள் அதைப்பற்றி கவலை படுவதில்லை. உதாரணமாக, "கொலை செய்யாதே." என்ற கட்டளை உள்ளது. ஆனால் கிறித்துவ உலகத்தில் மிக சிறந்த இறைச்சி கொலை சாலைகள் பராமரிக்க படுகின்றன. அப்பொழுது அவர்கள் எப்படி கடவுளை உணர முடியும் ? அவர்கள் தெய்வ கட்டளைகளை அவமதிக்கிறார்கள், ஏசுநாதர் சொல்லை ஏற்க கவலைப் படுவதில்லை. இது கிறித்துவத்தில் மற்றுமே அல்ல. ஒவ்வொரு மதத்திலும் இது தான் நடந்து வருகிறது. முத்திறை குத்திக் கொள்வது. "நான் ஹிந்து," "நான் முஸ்லிம்," "நான் கிறித்துவன்." கடவுள் என்றால் என்ன , அவர் அன்பை அடைவது எப்படி, இது இவர்களில் ஒருவருக்கும் தெரியாது.