TA/Prabhupada 1005 - கிருஷ்ண உணர்வு இல்லாவிட்டால், உனக்கு வெறும் அர்த்தமற்ற ஆசைகள் தான் ஏற்படும்.



750713 - Conversation B - Philadelphia

ஸான்டி நிக்ஸன்: சரி. இந்த நான் கேட்க விரும்பும் கேள்வி எனக்கு கடினமானது ஏனென்றால் இது என் அறியாமையை வெளிப்படுத்தலாம். ஆனால் நான் இதை என் அறியாமையை போக்கும் வகையில் கேட்க போவதில்லை. நான் உங்கள் பதிலை பதிவு செய்யப்போகிறேன், சரியா? உங்கள் ஆசை...? கிருஷ்ண உணர்வு அடையும் ஆசையை உட்பட எல்லா ஆசைகளும் இறுதியில் இல்லாமல் போகவேண்டுமா ? பிரபுபாதர்: கிருஷ்ண உணர்வு இல்லாவிட்டால், உனக்கு வெறும் அர்த்தமற்ற ஆசைகள் தான் ஏற்படும். மற்றும் நீ கிருஷ்ண உணர்வில் இருந்தால், பிறகு உன் ஆசைகள் சரியானவையாகும். ஸான்டி நிக்ஸன்: பல ஆன்மீக முறைகளின் குறிக்கோள் உள்ளே இருக்கும் குருவை தேடுவதாகும். பிறபுபாதர்: உள்ளேயா? ஸான்டி நிக்ஸன்: உள்ளே இருக்கும் குரு. இது வேறுபட்டதா...? பிரபுபாதர்: யார் அப்படி கூறுகிறார், உள்ளே இருக்கும் குருவை தேடுவது என்று? ஸான்டி நிக்ஸன்: உம்... ஜயதீர்த்தன்: கிர்பால் ஸிங்க், அவர் சொல்கிறார். ஸான்டி நிக்ஸன்: மன்னிக்கவும். யார்? ஜயதீர்த்தன்: கிர்பால் ஸிங்க், அப்படி கூறுபவர்களில் அவர் ஒருவர். குருதாசன்: கிருஷ்ணமூர்த்தியும் அப்படித்தான் கூறுகிறார். பிரபுபாதர்: பிறகு அவன் யேன் கற்பிக்க வருகிறான்? (சிரிப்பு) இந்த அயோக்கியன் ஏன் சொல்லித் தர வருகிறான்? இது தான் பதில். இவை எல்லாம் அயோக்கியர்களால் கூறப்படுகின்றவை. அவன் சொல்லித் தர வந்திருக்கிறான் ஆனால் "உள்ளே இருக்கும் குருவை தேடு." என்கிறான். அப்போது எதற்காக நீ கற்பிக்க வந்திருக்கிறாய்? மக்கள் புத்திசாலியாக இல்லாததால் அவர்களால் அவனை சுட்டிக்காட்ட முடிவதில்லை. அவன் ஏதோ பிதற்றுகிறான், அவர்களும் அதை கேட்டுக் கொண்டிருப்பார்கள், அவ்வளவு தான். குருதாசன்: "புத்தகங்களே தேவை இல்லை." என்று புத்தகத்தையும் அவர் எழுதியுள்ளார். (சிரிப்பு) பிரபுபாதர்: ஆக அவன் எவ்வளவு பெரிய அயோக்கியன் என்று நீயே தெரிந்து கொள்ளலாம். இல்லையா? நீ ஒப்புக் கொள்கிறாயா இல்லையா? அவன் புத்திகம் எழுதி, "புத்தகங்களுக்கு தேவையில்லை." என்கிறான். அவன் கற்பிக்க வந்தபிறகு, "கற்பிக்க ஆசிரியர் தேவையில்லை. குரு உள்ளத்தில் இருக்கிறது." என்கிறான். அவன் அயோக்கியன் அல்லவா? ஸான்டி நிக்ஸன்: ஆனால் அவர்கள் சொல்வது என்னவென்றால்... பிரபுபாதர்: இல்லை, முதலில் நீ என் கேள்விக்கு பதில் அளிக்கவேண்டும். அவன் நேர்மாறான யோசனைகளை கூறினால் அவன் அயோக்கியனா இல்லையா ? ஸான்டி நிக்ஸன்: அவன் தனக்கே எதிர்ப்பைத் தெரிவிக்கிறான். பிரபுபாதர்: ஆகையால் அவன் அயோக்கியன். அவனுக்கு தன் கருத்தையே ஆதரிக்க தெரியவில்லை. ஸான்டி நிக்ஸன்: வேதங்களை உருவகமாக மற்றும் இல்லாமல் தத்ரூபமாகவும் ஏற்றுக்கொள்ளலாமா? பிரபுபாதர்: எப்படி உள்ளதோ அப்படி. நாங்கள் பகவத்-கீதையை உண்மையுருவில் வழங்குகிறோம், உருவகமாக அல்ல.