TA/Prabhupada 1025 - "இந்த அயோக்கியன் எப்போது தன் முகத்தை என்னை நோக்கி திருப்புவான்?" என்று கிருஷ்ணர் காத்த



731129 - Lecture SB 01.15.01 - New York

பிரதியும்னா : மொழிபெயர்ப்பு : சூத கோஸ்வாமி கூறினார் : பகவான் கிருஷ்ணரின் புகழ் பெற்ற நண்பனான அர்ஜுனன், ஸ்ரீ கிருஷ்ணரை விட்டுப் பிரிந்த துக்கத்தினால் பெருந்துன்பத்திற்கு ஆளானார். இது யுதிஷ்டிர மஹாராஜாவின் கற்பனையான விசாரனைகளையும் மீறியதாக இருந்தது. (SB 1.15.1)

பிரபுபாதா : ஏவம்' க்ரு'ஷ்ண ஸக:2 க்ரு'ஷ்ணோ. அர்ஜுனனின் பெயர் கிருஷ்ண சகா, அவன் சிலசமயம் கிருஷ்ண என்றும் அழைக்கப்படுவான். ஏனெனில், அர்ஜுனனின் உடலமைப்பு கிட்டத்தட்ட கிருஷ்ணரின் உடலமைப்பை ஒத்திருந்தது. கிருஷ்ணரிடம் இருந்து பிரிந்த காரணத்தினால் அவன் பெருந்துன்பத்தில் இருந்தான். மேலும் அவனுடைய மூத்த சகோதரர், அவன் வருத்தமாக இருந்ததற்கு, இந்த காரணமாகவோ அல்லது அந்த காரணமாகவோ அல்லது இந்த காரணமாக இருக்கலாம் என்று கூறிக்கொண்டிருந்தார். உண்மையில், அவன் கிருஷ்ணரிடம் இருந்து பிரிந்த காரணத்தினால் மகிழ்ச்சியற்று இருந்தான். அதைப்போலவே அர்ஜுனன் மட்டுமல்ல நாம் கூட, நாம் அனைவரும்... அதாவது கிருஷ்ணர், அர்ஜுனன், அவனும் ஒரு உயிர்வாழி. நாமும் உயிர்வாழிகளே. நாமும் மகிழ்ச்சியற்று இருக்கிறோம். ஏனெனில் நாம் கிருஷ்ணரிடம் இருந்து பிரிந்து உள்ளோம். இந்த நவீன தத்துவவாதிகள் அல்லது விஞ்ஞானிகள், எப்படி தங்களுடைய சொந்த வழிகளில் உலகின் நிலையை மேம்படுத்தலாம் என்று கருத்து கூறலாம், அல்லது வேறுவகையில் யோசிக்கலாம் ஆனால் அது சாத்தியமல்ல. கிருஷ்ணரை பிரிந்திருக்கும் காரணத்தினால் நாம் மகிழ்ச்சியற்று இருக்கிறோம். அது அவர்களுக்கு தெரியாது. ஒரு குழந்தையைப் போல. அழும் குழந்தை ஏன் அழுகிறது என்பதை யாராலும் சொல்ல முடியாது. ஆனால் உண்மையில், ஒரு குழந்தை பொதுவாக தன் தாயை பிரிந்ததினால் அழுது கொண்டிருக்கும். அர்ஜுனை பற்றியோ அல்லது கிருஷ்ணரைப் பற்றிய கேள்வி அல்ல, நாம் அனைவருமே.... உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளதாவது, பரமாத்மா, கிருஷ்ணரும் உயிர்வாழியும், ஒரே மரத்தில் அமர்ந்து கொண்டிருக்கிறார்கள், ஸமானி வ்ரு'க்ஷே. ஒரு உயிர்வாழி மரத்தின் பழத்தை சாப்பிடுகிறது, மற்றொரு உயிர்வாழியோ வெறுமனே சாட்சியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது. எனவே கிருஷ்ணர் எல்லோரது இதயத்திலும் வீற்றிருக்கிறார். ஈஷ்2வர: ஸர்வ-பூ4தானாம்' ஹ்ரு'த்3-தே3ஷே2 'ர்ஜுன திஷ்ட2தி (ப.கீ 18.61). ஏனெனில், அவருடைய அனுமதியின்றி உயிர்வாழி எதையும் செய்ய முடியாது. ஸர்வஸ்ய சாஹம்' ஹ்ரு'தி3 ஸந்னிவிஷ்டோ (ப.கீ 15.15): கிருஷ்ணர் கூறுகிறார் நான் அனைவருடைய இதயத்திலும் வீற்றிருக்கிறேன். எனவே, உயிர்வாழி தன் சொந்த விருப்பமாக எதையாவது செய்ய விரும்புகிறான். கிருஷ்ணர் கூறுகிறார், அல்லது கிருஷ்ணர் நல்ல அறிவுரையை வழங்குகிறார், "இது உன்னை சந்தோஷப்படுத்தாது, இதைச் செய்யாதே." ஆனால் அவன் பிடிவாதமாக இருக்கிறான், அவன் அதைச் செய்வான். பிறகு கிருஷ்ணர், பரமாத்மாவாக அனுமதி அளிக்கிறார், "சரி, நீ அதைச் உன் சொந்த அபாயத்தில் செய்." இது தான் நடந்து கொண்டிருக்கிறது. நாம் அனைவரும், கிருஷ்ணருடன் நெருங்கிய தொடர்புடையவர்கள், மேலும் கிருஷ்ணர் எல்லோருடைய இதயத்திலும் வீற்றிருக்கிறார். கிருஷ்ணர் மிகவும் கருணை வாய்ந்தவர் என்பதால், "இந்த அயோக்கியன் எப்போது தன் முகத்தை என்னை நோக்கி திருப்புவான் என்று காத்துக் கொண்டே இருக்கிறார்." அவர் காத்துக் கொண்டே இருக்கிறார்.... அவர் மிகவும் கருணை வாய்ந்தவர். ஆனால் உயிர்வாழிகளாகிய நாம், நம்முடைய முகத்தை கிருஷ்ணரைத் தவிர மற்ற எல்லாவற்றையும் நோக்கித் திருப்பும் அளவிற்கு அயோக்கியர்களாக உள்ளோம். அதுதான் நம்முடைய நிலை.