TA/Prabhupada 1044 - நான் சிறுவனாக இருந்த போது மருந்துகளை சாப்பிடமாட்டேன்



751003 - Morning Walk - Mauritius

நான் சிறுவனாக இருந்த போது மருந்துகளை சாப்பிடமாட்டேன் பிரபுபாதர்: அனுபவத்திற்குரிய திட்டத்தை கிருஷ்ணருக்காக செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அப்போது அவர்களால் உலகம் முழுவதையும் ஒன்று சேர்த்த முடிந்திருக்கும். பிரம்மானந்தன்: அவர்களிடம் சிறந்த நிர்வாகம் செய்யும் திறன் இருந்தது. பிரபுபாதர்: ஓ, ஆமாம். ஆனால் முழு திட்டமும் அவர்களின் சுய புலனுணர்வுக்காகவே இடப்பட்டது. பிரம்மானந்தன்: சுரண்டல். புஷ்த கிருஷ்ணன்: நம்மிடம் மட்டும் அத்தகைய அதிகாரம் இருந்து, பிறகு அப்படி ஏதாவது செய்ய முயன்றிருந்தால், நம் மீது சிலுவைப் போரைப் போல் ஒன்றை நடத்துவதாக குற்றம் சாட்டிருப்பார். பிரபுபாதர்: சிலுவைப் போர் கூட... அவர்கள், கிறிஸ்துவ தத்துவங்களை, கடவுளுக்கான அன்பை பரப்புவதற்கு செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் நோக்கம் அதுவாக இல்லை. சுரண்டலாக இருந்தது. புஷ்ட கிருஷ்ணன்: பலவந்தமாக இருந்தாலுமா? பிரபுபாதர்: ஆம். நல்ல ஒரு மருந்தை வற்புறுத்தி ஊட்டினால் அவனுக்கு நல்லது தானே. சிறுவனாக இருந்தபோது நான் மருந்துகளை சாப்பிடமாட்டேன். இப்போது இருக்கும் போலவே தான். (சிரிப்பு) ஆக எனக்கு வற்புறுத்தி ஸ்பூனில் மருந்தை தருவார்கள். இரண்டு பேர் என்னை பிடித்து வைத்திருப்பார்கள், பிறகு என் அம்மா என்னை மடியில் உக்கார வைத்து வற்புறுத்தி ஊட்டுவாள். நான் எப்போதும் எந்த மருந்தையும் எடுத்துக் கொள்ள சம்மதிக்கவே இல்லை. ஹரிகேஷன்: நாம் இப்போது அப்படி செய்யவேண்டுமா, ஸ்ரீல பிரபுபாதரே? பிரபுபாதர்: பிறகு நீங்கள் என்னை கொன்றே விடுவீர்கள்.