TA/Prabhupada 1057 - பகவத் கீதை கீதோபநிஷத் எனவும் அறியப்படுகிறது, வேத ஞானத்தின் பொருள் நயம்



660219-20 - Lecture BG Introduction - New York

பிரபுபாதர்: நான் என்ன மதிப்பிற்குரிய அஞ்சலியை என் ஆன்மீக குருவிற்கு சமர்ப்பிக்கிறேன், ஞானம் என்னும் ஒளி வெளிச்சத்தால் என் கண்களை திறந்திருக்கிறார், அறியாமை என்னும் இருளால் திரையிடப்பட்டிருந்தது.

எப்பொழுது இந்த ஜட உலகில் நிறுவியிருக்கும், பகவான் சைதன்யாவின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்கான குறிக்கோளை அளித்த ஸ்ரீலா ரூப கோஸ்வாமீ, எனக்கு அவருடைய கமலப்பாதங்களுக்கு அடியில் புகலிடம் அளிப்பார்?

என் ஆன்மீக குருவின் பாதகமலத்திற்கும் மற்றும் இறைவனுக்கு தொண்டு செய்யும் பாதையில் செல்லும் ஆச்சாரியர்களுக்கும் நான் என்னுடைய மதிப்பிற்குரிய அஞ்சலியை சமர்ப்பிக்கிறேன். நான் என்னுடைய மதிப்பிற்குரிய அஞ்சலியை அனைத்து வைஷ்ணவர்களுக்கும் மேலும் ஆறு கோஸ்வாமீகளுக்கும் சமர்ப்பிக்கிறேன், அவர்களுடன் ஸ்ரீலா ரூப கோஸ்வாமீ, ஸ்ரீலா சனாதன கோஸ்வாமீ, ரகுநாத தாஸ் கோஸ்வாமீ, ஜீவ கோஸ்வாமீயும் அவர்களோடு தொடர்பு கொண்டவர்களுக்கும். நான் என்னுடைய மதிப்பிற்குரிய அஞ்சலியை ஸ்ரீ அத்வைத ஆச்சார்ய பிரபு, ஸ்ரீ நித்யானந்த பிரபு, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு, ஸ்ரீவாஸ தாகுர தலைமையில் இருக்கும் அவருடைய அனைத்து பக்தர்களுக்கும். நான் என்னுடைய மதிப்பிற்குரிய அஞ்சலியை பகவான் கிருஷ்ணரின் கமலப்பாதங்களில் சமர்ப்பிக்கிறேன், ஸ்ரீமதி ராதாராணியும் அனைத்து கோபியர்களும், லலிதா மற்றும் விஷாக: தலைமையில்.

ஓ, என் பிரியமான கிருஷ்ணா, கருணையின் கடலே, நீங்கள்தான் துன்பப்படுபவர்களின் நண்பர் மேலும் படைப்பின் ஆதிமூலம். நீங்கள்தான் ஆயர்களின் எஜமானர் மற்றும் கோபியர்களின் காதலர், முக்கியமாக ராதாராணிக்கு. நான் என்னுடைய மதிப்பிற்குரிய அஞ்சலியை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

நான் என் மரியாதையை உருக்கிய பொன்னிற மேனியை கொண்டவரும் மேலும் விருந்தாவனத்தின் ராணியாக இருப்பவருமான ராதாராணிக்குச் சமர்ப்பிக்கிறேன். நீங்கள் அரசர் வ்ருஷபானுவின் மகள், மேலும் நீங்கள் பகவான் கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவர்.

நான் என்ன மதிப்பிற்குரிய அஞ்சலியை பகவானின் அனைத்து வைஷ்ண்வ பக்தர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன். அவர்களால் அனைவருடைய விருப்பத்தையும் நிறைவேற்ற முடியும். எவ்வாறு என்றால் விரும்பியதை கொடுக்கும் கற்பகவிருக்ஷம் போல், மேலும் தாழ்வை அடைந்த ஆத்மாக்களிடம் இரக்கம் நிறைந்தவர்கள்.

நான் என்னுடைய மதிப்பிற்குரிய அஞ்சலியை, ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய, பிரபு நித்யானந்த, ஸ்ரீ அத்வைத, கதாதர, ஸ்ரீவாஸாதி மற்றும் பகவான் சைதன்யாவின் அனைத்து பக்தர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்.

என் பிரியமான பகவானே மற்றும் பாகவானின் ஆன்மீக சக்தியே, கருணை கொண்டு என்னை உங்கள் சேவையில் ஈடுபடுத்துங்கள். இந்த ஜட சேவையால் நான் இப்பொழுது சங்கடப்படுத்தப்பட்டுள்ளேன். தயவுசெய்து என்னை உங்கள் சேவையில் ஈடுபடுத்துங்கள்.

கீதோபநிஷத்தின் அறிமுகம், தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமியால், ஸ்ரீமத் பாகவதம், வினோதமான விண்வெளிப் பயணம் ஆகியவற்றின் நூலாசிரியர். பரமபதம் அடைதல் (Back to Godhead )என்னும் மாதப்பத்திரிக்கையின் பதிப்பாசிரியர்.

பகவத் கீதை கீதோபநிஷத் எனவும் அறியப்படுகிறது, வேத ஞானத்தின் பொருள் நயம், மேலும் வேத இலக்கியத்தில் பலதரப்பட்ட உபநிஷத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். பகவத் கீதைக்கு, ஆங்கிலத்தில் பல வகையான பொருளுரைகள் உள்ளன. மேலும் மற்றொரு ஆங்கில பொருளுரை கொண்ட பகவத் கீதையின் தேவை என்ன என்பது பின்வருமாறு விவரிக்கப்படும். ஒன்று.. ஒரு அமெரிக்க பெண், திருமதி சார்லோத் லீ ப்லென் என்னை அவர் படிக்கும் வகையில் பகவத் கீதையின் ஒரு ஆங்கில பதிப்பை சிபாரிசு செய்ய கேட்டுக் கொண்டார். நிச்சயமாக, அமெரிக்காவில் பகவத் கீதை பல பதிப்பில் இருக்கின்றன, ஆனால், நான் அவைகளை பார்த்த வரை, அமெரிக்காவில் மட்டுமல்ல இந்தியாவிலும் கூட, ஒன்று கூட கண்டிப்பான அதிகாரபூர்வமானது என்று கூற முடியாது, ஏனென்றால் ஏறக்குறைய ஒவ்வொருவரும் தன் சொந்த அபிப்பிராயத்தை புகுத்தி உள்ளனர் பகவத் கிதையின் வழியாக தங்கள் அபிப்பிராயத்தை பகவத் கீதை உண்மையுருவில் என்னும் அதன் ஆன்மிகத்தை சிறிதும் நெருங்கவில்லை. பகவத் கீதையின் ஆன்மீகம், பகவத் கீதையிலேயே குறிப்பிட்டு கூறப்பட்டுள்ளது. அது இவ்வாறு தான். நாம் ஒரு குறிப்பிட்ட மருந்தை எடுக்க வேண்டுமென்றால், அந்த மருந்தின் மேல் இருக்கும் விவர சீட்டில் குறிப்பிட்ட வழிமுறையை நாம் பின்பற்ற வேண்டும், நம் விருப்பப்படியோ அல்லது நம் சொந்த வழிமுறைப்படியோ அல்லது நண்பர்களின் வழிமுறைப்படியோ நாம் அந்த குறிப்பிட்ட மருந்தை எடுத்து கொள்ள முடியாது, ஆனால் அந்த மருந்தை கொடுக்கப்பட்ட வழிமுறைப்படி புட்டியில் விவர சீட்டில் வைத்தியர் கொடுத்த விதிமுறைப்படிதான் எடுத்து கொள்ள வேண்டும். அதேபோல் பகவத் கீதையும் நேரடியாக விபரிப்பவர் தானே கூறியதால் அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும்.