TA/Prabhupada 1066 - குறைந்த அறிவாற்றல் உள்ள மக்கள், நித்தியமான பூரண உண்மையை தனித்தன்மை உடையதாக நினைக்கிற



660219-20 - Lecture BG Introduction - New York

ஆகையால் முழு ஏற்பாடும் யாதெனில் நடுநாயகம், படைத்தலின் நடுநாயகமானவர், இன்பகரத்தின் நடுநாயகம், முழுமுதற் கடவுளாவார், மேலும் உயிர்வாழிகள், அவர்கள் வெறுமனே ஒத்துழைப்பவர்கள். ஒத்துழைப்பதன் மூலம், ஒத்துழைப்பதன் மூலம் அவர்கள் அனுபவிக்கிறார்கள். இந்த உறவு எவ்வாறு என்றால், எஜமானரும் பணியளாரும் போல. எஜமானர் திருப்தியடைந்தால், எஜமானர் முழுமையாக திருப்தியடைந்தால், பணியாளர்கள் தன்னியக்கமாக திருப்தியடைவார்கள். அதுதான் சட்டம். அதேபோல், முழுமுதற் கடவுளும் திருப்தியடைவார், ஆயினும், படைப்பாளராக ஆகும் வாய்ப்பு, மேலும் இந்த ஜட உலகை அனுபவிக்கும் வாய்ப்பு, இவை உயிர்வாழிகளிடமும் இருக்கிறது ஏனென்றால் இது அங்கே முழுமுதற் கடவுளிடம் இருக்கிறது. அவர் படைத்துவிட்டார், அவர் இந்த பிரபஞ்ச தோற்றத்தை படைத்துவிட்டார். ஆகையால் நாம் இந்த பகவத் கீதையில் பூரண பரம்பொருளைக் காணலாம், நித்தியமான ஆளுநரை உள்ளடக்கி, ஆளப்படும் உயிர்வாழிகள், பிரபஞ்ச தோற்றம், நித்தியமான நேரம், மேலும் செயல்கள், அவை அனைத்தும் முழுமையாக விவரிக்கப்பட்டுள்ளது. ஆகையால் இவை அனைத்தையும் ஒன்றாக முழுமையாக எடுத்துக் கொள்வது பூரண மெய்ப்பொருள் என்றழைக்கப்படுகிறது. பூரண பரம்பொருள், அல்லது பூரண பரம உண்மை, ஆகையினால் முழுமையான முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர். நான் முன்பே விவரித்தது போல், அந்த தோற்றம் அவருடைய பலதரப்பட்ட சக்தியினால் ஆனது, மேலும் அவர் பூரண பரம்பொருள். இந்த அருவ பிரம்மம் பகவத் கீதையில் விவரிக்கப்பட்டுள்ளார் அந்த அருவ பிரம்மனும் முழுமையான மனிதருக்கு பிரதானமற்றவர் . ப்ரஹ்மனோ ஹம் ப்ரதிஷ்டாஹம் (ப.கீ.14.27). அருவ பிரம்மனும். அருவ பிரம்மனும் இன்னும் தெளிவாக ப்ரம-சூத்ராவில் ஒளிக்கதிராக விவரிக்கப்பட்டுள்ளார். சூரிய கோள்ளில், சூரியவெளிச்சத்தில் ஒளிக்கதிர் இருப்பது போல், அதேபோல், அருவ பிரம்மனும் பிரகாசிக்கும் ஒளிக்கதிராவார் நித்தியமான ப்ரமனுடையதோ அல்லது முழுமுதற் கடவுளுடையதோ. ஆகையினால் அருவ பிரம்மன், பூரண பரம்பொருளிடமிறுந்து முழுமையற்ற புரிந்துணர்வு பெற்றவர், மேலும் பரமாத்மாவைப் பற்றிய கருத்து. இவை அனைத்தும் கூட விவரிக்கப்பட்டுள்ளது. புருஷோத்தம-யோக. நாம் புருஷோத்தம-யோக அத்தியாயத்தை படிக்கும் பொழுது, தெரியவரும் அதாவது முழுமுதற் கடவுள், புருஷோத்தம, அருவ பிரம்மனைவிட உயர்ந்தவர் மேலும் பரமாத்மாவின் மெய்ஞ்ஞானத்தில் ஒரு பங்கு பெற்றவர். முழுமுதற் கடவுள் அழைக்கப்படுவது எவ்வாறெனில் சக்-சிதானந்த விக்ரஹ: (பி.ச.5.1). பிரம சம்ஹிதாவில், அதன் தொடக்கம் இவ்வாறு ஆரம்பித்தது: ஈஸ்வர: பரம: கிருஷ்ண: சக்-சிதானந்த-விக்ரஹ:/ அணாதிர் ஆதிர் கோவிந்த: சர்வ- காரணா-காரணம் (பி.ச.5.1)." கோவிந்த, கிருஷ்ணர், அவரே காரண காரியங்களுக்கு எல்லாம் காரணம். அவரே மூல முதலான பகவான்." ஆகையால் முழுமுதற் கடவுள் சக்-சிதானந்த-விக்ரஹ: ஆவார். அருவ பிரம்மம் புரிந்துணர்வு, அவருடைய சத் பகுதி, புரிந்துணர்வு முடிவின்மை. மேலும் பரமாத்மா மெய்ஞ்ஞானம், சத்-ஸித்தின் புரிந்துணர்வு, நித்தியமான அறிவுப் பகுதி புரிந்துணர்தல். ஆனால் முழுமுதற் கடவுளை கிருஷ்ணராக புரிந்துணர்தல் அனைத்து திவ்வியமான அம்சங்களையும் புரிந்துணர்வதாகும் சத், சித், மேலும் ஆனந்த, முழுமையான விக்ரஹ போல். விக்ரஹ என்றால் வடிவம். விக்ரஹ என்றால் வடிவம். அவ்யக்தம் வ்யக்திமாபன்னம் மன்யந்தே மாமபுத்தய: (ப.கீ.7.24). குறைந்த அறிவுள்ள மக்கள் நித்தியமான உண்மையை அருவவாதிகளாக நினைக்கிறார்கள். ஆனால் அவர் ஒரு மனிதர், திவ்வியமானவர். இது அனைத்து வெத இலக்கியத்திலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. நித்யோ நித்யானாம் சேதனஸ் சேதனானாம் (கதா உபநிஷத் 2.2.13). ஆகையால், நாமும் மனிதர்க.ளானதால், தனிப்பட்ட உயிரினங்கள், நாம் மனிதர்கள், நமக்கு நம்முடைய தனித்தன்மை இருக்கிறது, நாம் அனைவரும் தனிநபர், அதேபோல் பூரண உண்மை, பூரண பரமன், அவரும், இறுதியான அறிக்கையில் அவர் ஒரு மனிதர். ஆனால் முழுமுதற் கடவுளைப் புரிந்துணர்தல், அவருடைய திவ்வியமான அம்சங்களை புரிந்துணர்தல் ஆகும் சத், சித், மேலும் ஆனந்த, முழுமையான விக்ரஹ போல். விக்ரஹ என்றால் வடிவம். ஆகையினால் பூரண பரம் பொருள் வடிவமற்றவர் அல்ல. அவர் வடிவமற்றோ அல்லது அவர் வேறு எதிலும் குறைவோடு இருந்தால், அவர் பூரண மெய்ப்பொருளாக முடியாது. பூரண பரம்பொருள் அனைத்தையும் பெற்றிருப்பார் நம் அனுபவத்திலோ மேலும் நம் அனுபவத்திற்கு அப்பால்பட்டோ. இல்லையேல் அவர் பூரண பரம்பொருளாக முடியாது. பூரண பரம்பொருளான முழுமுதற் கடவுளிடம் அபரிதமான ஆற்றல் உள்ளது. பராஸ்ய ஷக்திர் விவிதைவ ஸ்ரூயதி (ஸி. ஸி. மத்திய 13.65, பொருளுரை). எவ்வாறு அவர் பலவிதமான ஆற்றலுடன் தோன்றுகிறார், அதுவும் பகவத்-கீதையில் விவரிக்கப்பட்டுள்ளது. இந்த அதிசயமான உலகம், அல்லது பௌதிக உலகம், நாம் இப்பொழுது இருப்பது, அதுவும் தானே முழுமையானது ஏனென்றால் பூர்ணம் இதம் (ஸ்ரீ ஐசோபணிஸத் இன்வோகேஷன்). ஸாங்க்ய தத்துவத்திற்கு ஏற்ப இந்த 24 தனிமம், இந்த 24 தனிமத்தினால் இந்த பௌதிக கோளின் தற்காலிக தோற்றம், இந்த கோளின் பராமரிப்புக்கும் வாழ்வதற்கும் தேவையான குறைவற்ற பொருளை அனுசரித்து உற்பத்தி செய்கிறது. கோளின் பராமரிப்புக்கு அந்நிய முயற்சி வேறு எந்த தொகுதியிலும் தேவைப்படவில்லை. அதற்கேற்ற சொந்த நேரம், பூரண பரம்பொருளின் சக்தியிலிருந்து வரையறுக்கப்படும், மேலும் அந்த நேரம் முடிவடைந்தால், பரமனின் முழுமையான ஏற்பாட்டால் இந்த நிலையற்ற தோற்றம் வேரோடு அழிந்துவிடும்.