TA/Prabhupada 1074 - இந்த பௌதிக உலகில் நாம் அனுபவிக்கும் அனைத்து துன்பங்களுக்கும் காரணம் இந்த உடல்



660219-20 - Lecture BG Introduction - New York

பகவத்-கீதையில் மற்றொரு இடத்திலும் இது கூறப்பட்டுள்ளது அதாவது அவ்யக்தோக் ஷர இதியுக்தஸ்தமாஹு பரமாம் கதிம் யம் ப்ராப்ய ந நிவர்த்தந்தே தத்தாம் பரமம் மம (ப.கீ. 8.21). அவ்யக்த என்றால் தோன்றாததென்று பொருள். ஜட உலகின் ஒரு பகுதி கூட நம் முன் தோற்றம் அளிக்கவில்லை. நம் புலன்கள் மிகவும் பக்குவமற்றதால் நம்மால் பார்க்க முடியவில்லை, அதாவது எத்தனை நட்சத்திரங்கள், எத்தனை கிரகங்கள் இந்த பௌதிக பிரபஞ்சத்தில் இருக்கின்றன என்று. நிச்சயமாக, வேத இலக்கியங்களின் மூலம் அனைத்து கிரகங்களைப் பற்றிய தகவல்களும் நமக்கு கிடைக்கின்றன. நாம் நம்பவோ அல்லது நம்பாமலும் இருக்கலாம், ஆனால் அனைத்து முக்கியமான, நம்முடன் தொடர்புள்ள கொள்களும், அவைகள் வேத இலக்கியங்களில், முக்கியமாக ஸ்ரீமத் பாகவதத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஆன்மீக உலகம், இந்த ஜட வெளிக்கு அப்பாற்பட்டு இருப்பது, பரஸ்தஸ்மாத்து பாவோ 'ன்யோ (ப.கீ. 8.20). ஆனால் அந்த அவ்யக்த, அந்த தோற்றமற்ற ஆன்மீக விண்வெளி, அது பரமாம் கதிம், அதாவது, அந்த பரம ராஜ்யத்தை அடைய ஒருவர் இச்சையும் ஏக்கமும் கொள்ள வேண்டும். அந்த நித்திய ராஜ்யத்தை அடைந்த உடனடியாக, யம் ப்ராப்ய, நித்திய ராஜ்யத்தை அடைந்த ஒருவர், ந நிவர்த்தந்தே, ஒருவர் இந்த ஜட உலகிற்கு திரும்ப வேண்டியதில்லை. அந்த இடமே பகவானின் நித்திய ஸ்தலமாக இருப்பதால், அங்கிருந்து நாம் திரும்ப வேண்டியதில்லை, அதுதான் நம்முடைய, அதுவே நம்முடைய இடமாகும் இப்பொழுது ஒரு கேள்வி எழலாம், பகவானின் நித்திய ஸ்தலத்தை அடையும் வழி என்ன எவ்வாறு அவரை அணுகுவது? அதுவும் கூட பகவத்-கீதையில் வர்ணிக்கப்பட்டுள்ளது. அது எட்டாம் அத்தியாயத்தில், பதம் 5, 6, 7, 8-ல் கூறப்பட்டுள்ளது, முழுமுதற் கடவுள் அல்லது முழுமுதற் கடவுளின் நித்திய ஸ்தலத்தை அடையும் செயல்முறை அதுவும் அங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அது இவ்வாறாக கூறப்பட்டுள்ளது: அந்த காலே ச மாமேவ ஸ்மரன் முக்த்வா கலேவரம் யஹ ப்ரயாதி ஸ மத்பாவம் யாதி நாஸ்த்யத்ர ஸம்சய: (ப.கீ. 8.5) அந்த காலே, வாழ்க்கையின் இறுதி நிலையில், சாகும் தருவாயில். அந்த காலே ச மாமேவ. கிருஷ்ணரை நினைக்கும் ஒருவர், ஸ்மரன், அவருக்கு ஞாபகமிருந்தால். இறந்துக் கொண்டிருக்கும் ஒருவர், இறக்கும் அந்த நேரத்தில், அவர் கிருஷ்ணரின் திரு உருவத்தை நினைவில் கொண்டால் மேலும் அவ்வாறு நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது, அவர் தற்போதைய உடலை விட்டு பிரிந்தால், பிறகு நிச்சயமாக அவர் ஆன்மீக ராஜ்யத்தை அடைவார், மத்பாவம். பாவம் என்றால் ஆன்மீக இயற்கை. யஹ ப்ரயாதி ஸ மத்பாவம் யாதி. மத்பாவம் என்றால் இயற்கையை போல் அல்லது நித்தியமானவர்களின் உன்னதமான இயற்கை. நாம் மேலே வர்ணித்தது போல், அதாவது பகவான் சச்சிதானந்த விக்ரஹ (பிச 5.1). அவருக்கு உருவம் இருக்கிறது, ஆனால் அவர் உருவம் நித்தியமானது, சத்; அறிவு நிறைந்தது, சித்; மேலும் நித்தியமான மகிழ்ச்சி நிறைந்தது, ஆனந்தா. இது சச்சி-தானந்த உடம்பா என்று, நாம் இப்பொழுது சும்மா நம் தற்போதைய உடலை ஒப்பிடுவோம். இல்லை. இந்த உடல் அசத். சத்தாக இருப்பதற்கு பதிலாக, அது அசத்தாக இருக்கிறது. அந்தவந்த இமே தேஹா (ப.கீ. 2.18), பகவத்-கீதையில் கூறப்படுகிறது, இந்த உடல் அந்தவத், அழியக்கூடியது. மேலும் சச்சி-தானந்த. சத்தாக இருப்பதற்கு பதிலாக, அது அசத்தாக இருக்கிறது. எதிர்மறையாக. நிறைந்த அறிவுடன், சித்தாக வருவதற்கு பதிலாக, அது அறியாமை நிறைந்ததாக இருக்கிறது. ஆன்மீக ராஜ்யத்தைப் பற்றிய அறிவு நமக்கு கிடையாது, அதுமட்டுமல்லாது இந்த பௌதிக உலகைப் பற்றிய நிறைவான அறிவும் கிடையாது. பல விஷயங்கள் நமக்கு தெரியவில்லை, ஆகையினால் இந்த உடல் பகுத்தறிவில்லாதது. நிறைந்த அறிவை பெற்றிருப்பதற்கு பதிலாக அது அறிவில்லாததாக இருக்கிறது. உடம்பு அழியக்கூடியது, அறியாமை நிறைந்தது, மேலும் நிராநன்தா. நிறைவான மகிழ்ச்சி பெறுவதற்கு பதிலாக, அது முழுமையான துன்பத்தில் உள்ளது. இந்த பௌதிக உலகில் நாம் அனுபவிக்கும் அனைத்து துன்பங்களுக்கும் காரணம் இந்த உடல்.