TA/730722 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் இலண்டன் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 14:05, 29 September 2023 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துளிகள் - 1973 Category:TA/அமிர்தத் துளிகள் - இலண்டன் {{Audiobox_NDrops|TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்|<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/Nectar+Drops...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
பிரபுபாதர்: எனவே நான் இடமாற்றம் செய்ய வேண்டும். ஆக நான் உயர்ந்த கிரக அமைப்பிற்கு இடமாற்றம் செய்ய முடியும். நான் பேய்களுக்கும் மேலும் தீய ஆவிகளுக்கும் இடையில் இடமாற்றம் செய்ய முடியும். அல்லது நான் சாதாரண வாழ்க்கைக்கு இடமாற்றம் செய்யலாம். அல்லது நான் பகவானின் ராஜ்யத்திற்கு இடமாற்றம் செய்யலாம். அனைத்தும் திறந்திருக்கும். ஜார்ஜ்: அது நல்ல ஒப்பந்தம். அது நல்ல, நியாயமான ஒப்பந்தம். பிரபுபாதர்: ஆ. எனவே நான் ஏன் இடமாற்றம் செய்யக் கூடாது..., பரமபதம் அடைந்து, இறைவனை சென்று அடையக் கூடாது? நான் ஏன் அங்கு போக... இதுதான் கொள்கை. இந்த வாழ்க்கையில் என் அடுத்த வாழ்க்கைக்கு முயற்சி செய்ய வேண்டுமென்றால், ஏன் அடுத்த வாழ்க்கையில் கிருஷ்ணரிடம் சென்று, அவருடன் நித்தியமாக, ஆனந்தமாக வாழ முயற்சி செய்யக் கூடாது? நான் சில அடுத்த வாழ்க்கைக்கு வேலை செய்ய வேண்டுமென்றால், பிறகு ஏன் வேலை செய்யக் கூடாது... மேலும் இந்த யுகத்தில் அது மிகவும் சுலபமாக இருக்கிறது. கீர்தநாத் ஏவ க்ருʼஷ்ணஸ்ய முக்த-ஸங்க꞉ பரம்ʼவ்ரஜேத் (வநிஸோஉர்சே:ஸ்ப் 12.3.51.ஸ்ப் 12.3.51). வெறுமனே இந்த ஹரே கிருஷ்ணா மந்திரத்தை உச்சாடனம் செய்வதனால் அவன் அனைத்து மாசுபாடுகளிலிருந்தும் விடுதலை அடைகிறான் மேலும் பரமபதம் அடைந்து, இறைவனை சென்று அடைகிறான்.
730722 - உரையாடல் with George Harrison - இலண்டன்