TA/670326 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சான் பிரான்சிஸ்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஒருவேளை என்னைப் பற்றியோ, என்னைப் பற்றி ஏதாவதொன்றைப் பற்றியோ தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், நண்பரிடம், "ஓ, சுவாமிஜி எப்படிப்பட்டவர்?" என்று கேட்கலாம், அதற்கு அவர் ஒன்று கூறலாம்; மற்றையவர்கள் வேறொன்றை கூறலாம். ஆனால் என்னைப் பற்றி நானே விவரித்தால், "இதுதான் என் நிலை. நான் இப்படிப்பட்டவன்." அது பூரணமானது. பூரண புருஷோத்தமராகிய முழுமுதற் கடவுளைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், ஊகம் செய்யவோ, தியானம் செய்யவோ முடியாது. அது சாத்தியம் இல்லை, ஏனென்றால் புலன்கள் மிகவும் பக்குவமற்றவை. எனவே என்னதான் வழி? அவரிடமிருந்தே கேளுங்கள். அவர் கருணையுடன் பகவத்கீதையை பேச வந்துள்ளார். ஷ்ரோதவ்ய꞉ மற்றும் கீர்திதவ்யஷ் ச. கிருஷ்ண உணர்வு பற்றிய உபன்யாசத்தினை வெறுமனே கேட்டுவிட்டு வெளியே சென்றவுடன் மறந்துவிட்டால், ஓ அது நன்றாக இருக்காது. அது உங்களை முன்னேற்றாது. எனவே, என்ன செய்வது? கீர்திதவ்யஷ் ச: "என்ன கேட்டீர்களோ, அதை மற்றவர்களுக்கும் கூறவேண்டும்." அதுவே பூரணத்துவம்."
670326 - சொற்பொழிவு SB 01.02.12-14 and Installation of Jagannatha Deities - சான் பிரான்சிஸ்கோ