TA/Prabhupada 0023 - இறப்பிற்கு முன் கிருஷ்ணர் உணர்வுடையவராகுங்கள்
Sri Isopanisad Invocation Lecture -- Los Angeles, April 28, 1970
இங்கு கூறப்பட்டிருப்பது என்னவென்றால், இந்த பேரண்டத்திற்கு, பரிபூரண முழுமையின் சக்தியால் தீர்மானிக்கப்பட்ட ஒரு ஆயுள் காலம் உள்ளது. பேரண்டமும் ஒரு மிக பிரம்மாண்டமான உடல், ஜட உடல். அவ்வளவுதான். உங்கள் உடலைப் போல் தான்; அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்து உள்ளது, ஒப்பளவுகள். நவீன அறிவியலில், சார்பியல் கோட்பாட்டுச் சட்டம். ஓர் அணு, ஒரு சிறு துகள், சிறிய எறும்பு, இவைகளுக்கு அவைகளின் சார்காட்சியின்படி ஒரு ஆயுட்காலம் உள்ளது, உங்களுக்கும் ஏற்றதுபோல் ஒரு ஆயுட்காலம் இருக்கிறது. அதுபோலவே தான் இந்த பிரமாண்டமான உடலாகிய பேரண்டமும், அதன் ஆயுட்காலம் பல கோடி வருடங்களாக இருக்கலாம், ஆனால் இதால் நிரந்தரமாக இருக்கமுடியாது. அதுதான் நிதர்சனமான உண்மை. மிக பிரமாண்டமானதால், அது பல கோடி வருடங்களுக்குத் தொடர்ந்து இருக்கும், ஆனால் அதுவும் முடிவுக்கு வரும். அதுதான் இயற்கையின் நீதி. மேலும் அந்த ஆயுட்காலம் முடிவடைந்ததும், இந்த தற்காலிகமான தோற்றம் அனைத்தும், முழுமுதற் கடவுளின் முழுமையான ஏற்பாட்டால் அழிந்துவிடும். உங்களுடைய காலம் முடிவடையும்போது, இந்த உடலில் இருக்கமுடியாது ஐய்யா. யாராலும் தடுக்க முடியாது. அதன் ஏற்பாடு மிகவும் வலிமையானது. "என்னை தொடர்ந்து இருக்க விடுங்கள்" என்று நீங்கள் சொல்ல முடியாது. உண்மையிலேயே இது நடந்தது. நான் இந்தியாவில், அலாகாபாத்தில் இருந்தபொழுது, எனக்கு தெரிந்த நண்பர், அவர் பெரும் செல்வந்தர். ஆனால் அவர் சாகும் தருவாயில் இருந்தார். ஆக அவர் மருத்துவரிடம் கெஞ்சி வேண்டிக் கொண்டிருந்தார், "உங்களால் என்னை குறைந்தது இன்னும் நான்கு வருடங்கள் வாழ வைக்க முடியாதா? நான் செய்யவேண்டிய சில காரியங்கள் இருக்கின்றன, புரிகிறதா. என்னால் அதை முடிக்க இயலவில்லை." உங்களுக்கு புரிகிறதா. ஆஷா-பாஷ-ஷதைர் பத்தா: (பகவத்-கீதை 16.12). இது அரக்கத்தனமானது. எல்லோரும் நினைக்கிறார்கள், "ஓ, நான் இதைச் செய்ய வேண்டும். நான் இதை செய்ய வேண்டும்." இல்லை. மருத்துவர்கள் அல்லது மருத்துவர்களின் தந்தையார் அல்லது அவருடைய தந்தையார், எந்த விஞ்ஞானியாலும் தடுக்க முடியாது. "ஓ, முடியாது, சார். நான்கு வருடங்கள் அல்ல. நான்கு நிமிடங்கள் கூட முடியாது. நீங்கள் உடனடியாக செல்ல வேண்டும்." இதுதான் சட்டம். எனவே, அந்தச் சமயம் வரும் முன், ஒருவர் அறிவுக் கூர்மையுடையவராக கிருஷ்ண உணர்வை உணர வேண்டும். தூர்ணம் யதெத (ஶ்ரீமத் பாகவதம் 11.9.29). தூர்ணம் என்றால் மிக விரைவாக, மிக வேகமாக நீங்கள் கிருஷ்ண உணர்வை உணர வேண்டும். அணு... அடுத்தது, அடுத்த இறப்பு வருவதற்கு முன் இந்த கடமையை நிறைவேற்றியாகவேண்டும். அதுதான் மெய் அறிவு. இல்லையெனில் தோல்வி மட்டுமே மிஞ்சும். மிக்க நன்றி.




